Airtel-க்கு அடிடா சல்யூட்.. மாதம் ரூ.300 கூட இல்ல.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!
ஏர்டெல் நிறுவனத்துக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் பாஸ் என்று சொல்லும்படி மாதத்துக்கு ரூ.300 விலைக்கும் கம்மியான பட்ஜெட்டில் 365 நாட்கள் வேலிடிட்டி (365 Days Validity) மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), 2 ஜிபி தினசரி டேட்டாவை (2GB Daily Data) கொடுக்கிறது. இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுத்து, கஸ்டமர்களை மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் மட்டுமல்ல, ஜியோ (Jio), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுனங்களிலும் வருடாந்திர திட்டங்களை ரீசார்ஜ் செய்யும்போது, உங்களுக்கு செலவாகும் மாத கட்டணம் குறைவாக இருக்கும். அதாவது, ஏர்டெல்லில் ஒரு மாத வேலிடிட்டி, தினசரிக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்களுடன் ஒரு திட்டம் கிடைக்கிறது.

இதன் விலை ரூ.379ஆக இருக்கிறது. இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டா போன்ற சலுகைகளும் கிடைக்கிறது. ஆனால், இதே ஏர்டெல் நிறுவனத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ரூ.3,599 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், இதே சலுகைகள் கிடைக்கும். ஆனால், அதனுடைய மாத செலவு ரூ.299 ஆக மட்டுமே இருக்கும். இது ரூ.300-க்கும் கம்மியான விலையாகும்.
ஆகவே, நீங்கள் மாதத்துக்கு ரீசார்ஜ் செய்வதைவிட வருடத்துக்கு ரீசார்ஜ் செய்யும்போது அதற்கு செலவாகும் தொகை கம்மியாக்கலாம். இந்த ஏர்டெல் ரூ.3,599 திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. இந்த வருடாந்திர திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் 365 நாட்கள் திட்டம் (Airtel 365 Days Plan): இந்த ஏர்டெல் திட்டத்தில் டேட்டா சலுகைகள் குறையில்லாமல் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே, 4ஜி வேகத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை கொடுக்கப்படும்.
மொத்தமாக 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது என்றால், அதற்கு 730 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த டேட்டா சலுகை போக அதே 365 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்படும். இதற்கு எந்த லிமிட்டும் இல்லை. உங்களுக்கு 5ஜி சலுகை இருக்கும்பட்சத்தில் 2 ஜிபிக்கு மேலும் கணக்கில்லா டேட்டா கிடைக்கிறது.
ஆகவே, ஓடிடியாக இருந்தாலும் சரி, ஆன்லைன் கேமிங்காக இருந்தாலும் சரி, இந்த திட்டத்தின் டேட்டா குறையில்லாமல் கஸ்டமர்களின் தேவையை பூர்த்தி செய்து கொடுக்கும். இந்த டேட்டாவை போலவே வாய்ஸ் கால்களும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையில் கிடைக்கிறது.
100 அவுட்கோயிங் எஸ்எம்எஸ்களை நாளொன்றுக்கு கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு கூடுதல் சலுகையாக 30 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி கொள்ளும்படி ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) சலுகை கொடுக்கப்படுகிறது. ஸ்பேம் கால்களையும், எஸ்எம்எஸ்களையும் டிடெக்ட் செய்ய அலெர்ட் சலுகை கொடுக்கப்படுகிறது. மற்றொரு சலுகை இருக்கிறது.
அதாவது, ஏர்டெல் கஸ்டமர்களுக்கு லேட்டஸ்ட் சலுகையாக சேர்க்கப்பட்ட பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு கிடைப்பதை போலவே 12 மாதங்களுக்கு சந்தா கொடுக்கப்படும். எப்படி பார்த்தாலும், மாத செலவுக்கு ஏற்ற சலுகைகளையே இந்த ஏர்டெல் ரூ.3,599 திட்டம் கொடுத்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications








