Home
News

மாசம் ரூ.19 கட்டணம்.. அதிகபட்சம் ரூ.5000.. UPI சேவையில் யாரும் எதிர்பார்க்காத மாற்றம்.. BharatPe அதிரடி!

பாரத்பே (BharatPe) ஆனது யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைடு பேமண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) சேவையில் முக்கிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாக்கும் நோக்கத்தின் கீழ், இந்நிறுவனம் ஷீல்ட் என்கிற ஒரு விரிவான மோசடி பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் ஆன்லைன் பேமெண்ட் மோசடி குறித்த யுபிஐ பயனர்களின் கவலைகளை மற்றும் அச்சத்தை போக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாரத்பே ஷீல்ட் (BharatPe Shield) ஆனது கம்ப்யூட்டர் மோசடி, ஃபிஷிங் தாக்குதல்கள் மற்றும் ஃபோன் இழப்பினால் ஏற்படும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் போன்ற அபாயங்களிலிருந்து பயனர்களை பாதுகாக்கிறது.

மாசம் ரூ.19 கட்டணம்.. அதிகபட்சம் ரூ.5000.. BharatPe அதிரடி!

இந்த திட்டத்தின் தனித்துவமான அம்சம் என்னவென்றால் இதன் ப்ரீ-ரிப்போர்டிங் கவரேஜ் (pre-reporting coverage,) ஆகும். இது மோசடியை பற்றி புகாரளிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட இழப்புகளை பெற பயனர்களை அனுமதிக்கிறது. இந்த புதிய பாதுகாப்பு சேவையை அனைவரும் பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்பதற்காக, பாரத்பே ஆப் வழியாக முதல் முறையாக யுபிஐ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஷீல்ட் சேவை ஆனது 30 நாட்களுக்கு இலவசமாக கிடைக்கும்.

இந்த காலக்கட்டத்தில் ரூ.5,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கான மோசடியிலிருந்து பயனர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அறிமுக காலத்திற்கு பிறகு (அதாவது ஷீல்ட் பாதுகாப்பு திட்டமானது இலவசமாக கிடைக்கும் 30 நாட்களுக்கு பிறகு) மாதத்திற்கு ரூ.19 என்கிற பெயரளவு கட்டணத்தின் கீழ்இந்த சேவையை தொடரலாம்.

ஷீல்ட் சேவையின் கீழ் இருக்கும் பயனர்கள் பாரத்பே ஆப், சாட்பாட் அல்லது 24/7 அணுக கிடைக்கும் கட்டணமில்லா ஹெல்ப்லைன் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட மோசடியை பற்றி புகாரளிக்கலாம் மற்றும் உரிமைகோரல்களை பெறலாம். இதன் மூலம் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு விரைவான ரெஸ்பான்ஸ் மற்றும் சொல்யூஷன் உறுதி செய்யப்படுகிறது.

இந்த புதிய ஷீல்ட் சேவையின் அறிமுகம் குறித்து பாரத்பே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன நளின் நேகி, ஆன்லைன் மோசடிகளில் இருந்து நுகர்வோர் பரிவர்த்தனைகளை பாதுகாப்பது மற்றும் பாதுகாப்பான பணம் செலுத்தும் சூழலை வழங்குவது எப்போதும் எங்களின் முதன்மையான பொறுப்புகளில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார்

மேலும் பாரத்பே ஷீல்ட் (BharatPe Shield) மூலம், எங்கள் பயனர்களின் தினசரி பரிவர்த்தனைகளை பாதுகாக்கும் ஒரு மோசடி பாதுகாப்புத் திட்டத்தை கொண்டுவருவதன் மூலம் (போட்டியாளர்களை விட) நாங்கள் ஒரு படி மேலே செல்கிறோம் என்றும் பாரத்பே நிறுவனத்தின் சிஇஓ வான நளின் நேகி குறிப்பிட்டுள்ளார்.

நினைவூட்டும் வண்ணம் பாரத்பேயுபிஐ சேவையானது கடந்த ஆகஸ்ட் 2024 இல் தொடங்கப்பட்டது. இதன் கீழ் (கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற மற்ற யுபிஐ ஆப்களில் செய்வதை போலவே) ஸ்கேன்ஸ் அண்ட் பே, மற்ற யுபிஐ ஐடி-க்கு பணம் செலுத்துதல், வங்கி பரிமாற்றங்கள் மற்றும் மின்சார கட்டணம், கேஸ் கட்டணம்மற்றும் டிடிஎச் கட்டணம் போன்றவைகளை செய்யலாம்.

இதேபோல புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்தின் கீழ், பஜாஜ் ஃபின்சர்வ் (Bajaj Finserv) நிறுவமானது டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கான ஜீரோ-சார்ஜ் யுபிஐ பரிவர்த்தனைகளை (Zero Charge UPI Transactions) அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் யுபிஐ லைட் பேமெண்ட் ஆப்ஸ், யுபிஐ பே இந்தியா சேவை மற்றும் பீம் யுபிஐ (BHIM UPI) உடனான ஒருங்கிணைப்பையும் செய்து, மற்ற யுபிஐ ஆப்களுக்கான புதிய போட்டியாளராக உருமாறி வருகிறது.

பஜாஜ் ஃபின்சர்வ் அதன் யுபிஐ லைட் பேமெண்ட் ஆப்பின் (Bajaj Finserv UPI Lite App) முக்கிய நன்மைகளில் ஓன்று - இது பரிவர்த்தனைகளுக்காக எந்த விதமான கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. அதாவது மளிகை சாமான்களை வாங்குதல், மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்தல் அல்லது மின்சார கட்டணத்தை செலுத்துதல் போன்ற சிறிய அளவிலான தொகைகளை அடிக்கடி பரிவர்த்தனை செய்யும் பயனர்கள்ளுக்கு, பரிவர்த்தனை கட்டணங்கள் இல்லாததால் அவர்களால் நிறைய சேமிக்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BharatPe Shield How to Get This Protection Plan Free For 30 Days and Secure Your UPI Transactions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X