BharatPe One: டச் ஸ்கிரீன் டிஸ்பிளே.. 4ஜி.. அனைத்து சேவையும் ஒருங்கிணைக்கிறது புதிய சாதனம்..
ஃபின்டெக் (fintech) நிறுவனமான பாரத்பே (BharatPe) தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாரத்பே ஒன் எனும் பெயரில் ஆல் இன்-ஒன் பேமென்ட் (all in one payment) டிவைஸ் அறிமுகம் செய்துள்ளது பாரத்பே நிறுவனம்
அதாவது இந்த சாதனம் பாயிண்ட் ஆப் சேல், க்யூஆர் கோடு, ஸ்பீக்கர் அனைத்து சேவையும் ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து பாரத்பே நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால், இந்த புதிய தயாரிப்பை 100 நகரங்களில் முதற்கட்டமாக அறிமுகம் செய்கிறோம். இதைத் தொடர்ந்து மேலும் 450 நகரங்களுக்கு அடுத்த 6 மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பாரத்பே ஒன் (BharatPe One) டிவைஸ் ஆனது ஹைடெபனிஷன் டச்-ஸ்கிரீன் டிஸ்பிளே ( high-definition touchscreen display),4ஜி கனெக்டிவிட்டி, வைஃபை, லேட்டஸ்ட் ஆண்டிராய்டு ஆபரேடிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது இது மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டையும், பாதுகாப்பு அம்சத்தையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பாரத்பே ஒன் டிவைஸ் ஆனது யூசர் பிரண்ட்லி இன்டர்பேஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே அனைவரும் இதை எளிதாகப் பயன்படுத்தலாம். மேலும் போர்ட்டபிள் டிசைன், விரிவான டிரான்ஸாக்ஷன் டேஷ்போர்டுகள் போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக ஆப்லைன் வியாபாரிகளின் தேவைக்குத் தகுந்தபடி இந்த பாரத்பே ஒன் உருவாக்கப்பட்டுள்ளது.

பலதரப்பட்ட பேமென்ட்களை ஏற்கும் ஆப்ஷன்களுடன் பாரத்பே ஒன் வெளிவந்துள்ளது. அதாவது டைனமிக் (dynamic) மற்றும் ஸ்டாடிக் க்யூஆர் கோடு (static QR code), டாப் அண்டு பே (tap-and-pay), டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பேமென்ட் ஆப்ஷன்கள் இதில் அடங்கும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் வியாபாரிகளுக்கான டிரான்ஸாக்ஷன்களை சீர்படுத்தும் வகையில் பாரத்பே ஒன் வடிவமைக்கப்பட்டுள்ளது .
மேலும் இதுகுறித்து பாரத்பே சிஇஒ நளின் நெகி கூறியது என்னவென்றால், பல செயல்பாடுகளை ஒரு செலவு குறைந்த சாதனமாக ஒன்றிணைப்பதன் மூலம் பல துறைகளில் இருக்கும் சிறு, நடுத்தர வணிகங்களின் மாறுபட்ட தேவைகளுக்கு ஏற்ப விரிவான ஒரு தீர்வை நாங்கள் வழங்குகிறோம் என்றார்.
அதேபோல் பிரபலமான upi செயலியான போன்பே சமீபத்தில் ஒரு புதிய சேவையைக் கொண்டுவந்தது. அதாவது போன்பே (PhonePe) ஆனது தற்போது சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்துடன் (STB) கூட்டு சேர்ந்துள்ளது. இதன் மூலம் இந்திய பயனர்கள் சுற்றுலா செல்லும்போது இந்த போன்பே செயலியைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் உள்ள 8,000 வணிகர்களிடம் உடனடி மற்றும் பாதுகாப்பான முறையில் பணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போன்பே கொண்டுவந்துள்ள இந்த புதிய சேவை கண்டிப்பாக இந்திய மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். போன்பே நிறுவனத்தின் இன்டர்நேஷல் பிசினஸ் சிஇஒ ரித்தேஷ் பாய், சிங்கப்பூர் (Singapore)சுற்றுலா வாரியத்துடன் சேர்ந்த இந்த புதிய முயற்சி போன்பே பயனர்களுக்குப் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் என்று குறிப்பிட்டார்
போன்பே பயனர்கள் தீவு நகரங்களுக்குச் செல்லும்போது QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பணத்தைச் செலுத்தலாம் என்று தெரிவித்தார் ரித்தேஷ் பாய். அதேபோல் போன்பே செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இதில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








