போய் வா Google Pay, PhonePe.. பேங்க் அக்கவுண்ட்ல பணம் இல்லனாலும் Pay பண்ணும் புது UPI வசதி அறிமுகம்!
தங்களுடைய டெய்லி பேமண்ட்களை நிர்வகிப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மையை விரும்பும் யுபிஐ பயனர்களுக்கு இப்போது ஒரு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. பாரத்பே (BharatPe) மற்றும் யெஸ் பேங்க் (YES Bank) இணைந்து பாரத்பே ஃப்ளெக்ஸ் (BharatPe Flex) என்கிற யுபிஐ கிரெட்டி வசதியை அறிமுகப்படுத்தி உள்ளன.
இது, தகுதியுள்ள வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில், குறிப்பிட்ட நேரத்தில் போதுமான நிதி இல்லாதபோதும் கூட, யுபிஐ மூலம் பணம் செலுத்த அனுமதிக்கிறது. இந்த வட்டியில்லா கடன் வசதி ஆனது 45 நாட்கள் வரை வட்டியில்லா பயன்பாட்டை வழங்குவதோடு, பயனர்கள் தினசரி செலவு செய்து, மாதாந்திரமாக முழு தொகையையோ அல்லது 3 முதல் 12 மாதங்கள் வரையிலான நெகிழ்வான சம மாதாந்திர தவணைகள் (EMI) மூலமாகவோ திருப்பி செலுத்தலாம்.

பாரத்பே ஃப்ளெக்ஸின் முக்கிய அம்சங்கள்:
- கடைகளிலும், ஆன்லைனிலும் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறைகள் முழுவதுமாக இதை பயன்படுத்தலாம்
- யுபிஐ மூலம் பணம் செலுத்தி, 45 நாட்கள் வரை வட்டியில்லா காலத்திற்குள் (Interest-free period) பணத்தை திருப்பி செலுத்தலாம்
- முழு தொகையையும் திருப்பி செலுத்த அல்லது மாதாந்திரத் தவணைகளாக (EMI) மாற்றும் வசதி
- முழுமையான டிஜிட்டல் பதிவு மற்றும் செயல்படுத்தும் செயல்முறை
- ஆப்பிற்குள் செலவுகள், வரம்புகள் மற்றும் திருப்பி செலுத்துதல்களை கண்காணிக்கலாம்
- பாரத்பே யுபிஐ மூலம் செய்யப்படும் ஒவ்வொரு தகுதியான கட்டணத்திற்கும் ரிவார்ட்களை பெறலாம்
பாரத்பே ஃப்ளெக்ஸில் பதிவு செய்வது எப்படி?
ஸ்டெப் 1: பாரத்பே ஆப்பை திறந்து, பாரத்பே ஃப்ளெக்ஸை கிளிக் செய்யவும்
ஸ்டெப் 2: டிஜிட்டல் ஆன்போர்டிங் மற்றும் கேஒய்சி (KYC) செயல்முறையை முடிக்கவும்
ஸ்டெப் 3: அங்கீகரிக்கப்பட்ட கிரெடிட் லைன்-ஐ யுபிஐ உடன் இணைக்கவும்
ஸ்டெப் 4: உங்கள் யுபிஐ பின்-ஐ செட் செய்யவும்
ஸ்டெப் 5: யுபிஐ வணிகர்களிடம் பாரத்பே ஃப்ளெக்ஸ் மூலம் பணம் செலுத்த தொடங்கவும்
பாரத்பே ஃப்ளெக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும்? பாரத்பே ஃப்ளெக்ஸ் மூலம், வாடிக்கையாளர்கள் தற்போதைய யுபிஐ அமைப்புகள் தொடர்ந்து பணம் செலுத்தும் அதே வேளையில், யுபிஐ அனுபவத்திற்குள் இணைக்கப்பட்ட கிரெடிட் லைன் (credit line) வசதியையும் அணுகலாம். இந்த பேமண்ட்களின் கீழ் - கடைகளில் செய்யப்படும் க்யோஆர்-கோட் பேமண்ட்கள், ஆன்லைன் பரிவர்த்தனைகள், பில் பேமண்ட்கள், ரீசார்ஜ்கள்,டிராவல், ஷாப்பிங், பெட்ரோல் மற்றும் பிற அன்றாட செலவுகள் ஆகியவை அடங்கும்.
மேலும் பாரத்பே ஃப்ளெக்ஸ், பயனர்கள் தங்கள் விருப்பத்தை பொறுத்து, பில்லிங் காலத்திற்குள் முழு தொகையையும் திருப்பி செலுத்த அல்லது நெகிழ்வான இஎம்ஐ-களாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. பயனர்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம் மற்றும் 45 நாட்கள் வரையிலான வட்டியில்லா காலத்திற்குள் நிலுவை தொகையை செலுத்தலாம். பாரத்பே ஃப்ளெக்ஸ் பயனர்கள், மூன்று நிமிடங்களுக்குள் ஒப்புதல்களுடன், முழுமையான டிஜிட்டல் முறையில் அக்கவுண்ட்டை தொடங்குதல் மற்றும் செயல்படுத்துதல் வசதியை பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத்பே யுபிஐ ரிவார்ட்ஸ்: பயனர்கள் பாரத்பே யுபிஐ ரிவார்ட்ஸ் வசதியையும் பெறுகிறார்கள். பாரத்பே யுபிஐ ஆப் மூலம் செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும், ஜில்லியன் காயின்கள் (Zillion coins) வடிவில் உறுதியான ரிவார்ட்-ஐ பெறலாம். இந்த காயின்களை பயன்படுத்தி பல பிராண்டுகள் அல்லது தயாரிப்புகளுக்கான வவுச்சர்களை வாங்கலாம் மற்றும் அனைத்து வகையான பயன்பாட்டு கட்டணங்களையும் செலுத்தலாம்.
பாரத்பே (யெஸ் பேங்க் வழங்கும்) மூலம் 'பே லேட்டர்' திட்டத்தில் இணைவது எப்படி?
ஸ்டெப் 1: பாரத்பே யுபிஐ ஆப்பை திறந்து, 'பே லேட்டர்' ஐகானை கிளிக் செய்யவும்
ஸ்டெப் 2: யெஸ் பேங்கின் கேஒய்சி செயல்முறையை முடித்து, உங்கள் 'கிரெடிட் லைன் ஆன் யுபிஐ' கணக்கை உருவாக்கவும்.
ஸ்டெப் 3: உங்கள் கிரெடிட் அக்கவுண்ட்டை யுபிஐ உடன் இணைக்கவும்.
ஸ்டெப் 4: யெஸ் பேங்கை உங்கள் கிரெடிட் வழங்குநராக தேர்ந்தெடுத்து, ஆதார் மூலம் அங்கீகரிக்கவும்.
ஸ்டெப் 5: உங்கள் யுபிஐ பின்னை செட் செய்து, யெஸ் பேங்க் வழங்கும் உங்கள் கிரெடிட் லைன் மூலம் உடனடியாக பணம் செலுத்தத் தொடங்கவும்.


Click it and Unblock the Notifications