ஏர்டெல் பயனர்களே: வரம்பற்ற கால், டேட்டா., இந்த 3 திட்டங்கள் உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்ல!
வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் டேட்டா வழங்கும் ஏர்டெல் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இது நீண்ட நாட்கள் திட்டம் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஆகச் சிறந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு சலுகைகள்
டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் மாதத் திட்டங்களை மட்டுமே தேர்வு செய்கின்றனர். வருடாந்திர திட்டங்களில் கவனம் செலுத்துவதில்லை.

ஏர்டெல் வழங்கும் 3 திட்டம்
அப்படி நீண்ட காலம் திட்டம் தேர்வு செய்யும் போது தான் அதிக சலுகைகள் கிடைக்கின்றன. நீண்ட காலம் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் வழங்கும் இந்த 3 திட்டம் ஏற்றதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.2498 திட்டம் குறித்து பார்க்கலாம்
ஏர்டெல் வழங்கும் ரூ.2498 திட்டம் குறித்து பார்க்கலாம். இந்த ட்ரூலி அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து பார்க்கலாம். நீண்ட காலம் திட்டம் குறித்து பார்க்கையில் இந்த திட்டம் ஆகச் சிறந்த திட்டமாகும். இதில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

365 நாட்கள் செல்லுபடியாகும்
இந்த திட்டத்தில் 1 நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது. அதுமட்டுமின்றி இந்த திட்டமானது 365 நாட்கள் செல்லுபடியாகும் இந்த காலம் முழுவதும் வரம்பற்ற அழைப்பு வசதிகள் வழங்கப்படுகிறது. அதோடு ஏர்டெல் நன்மைகள், ஜீ5 ப்ரீமியம் ஆகிய இலவச சந்தாக்களும் கிடைக்கிறது.

ஏர்டெல் வழங்கும் ரூ.2398 திட்டம்
ஏர்டெல் வழங்கும் ரூ,2398 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்களும் இதில் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 365 நாட்கள் செல்லுபடியாகும் இந்த காலக்கட்டம் முழுவதும் வரம்பற்ற அழைப்பு வசதிகள் கிடைக்கிறது. அதோடு ஏர்டெல் நன்மைகள், ஜீ5 ப்ரீமியம் ஆகிய இலவச சந்தாக்களும் கிடைக்கிறது.

ஏர்டெல் வழங்கும் ரூ.1498 திட்டம்
ஏர்டெல் வழங்கும் ரூ.1498 திட்டம் குறித்து பார்க்கலாம். இந்த ட்ரூலி அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து பார்க்கலாம். நீண்ட காலம் திட்டம் குறித்து பார்க்கையில் இந்த திட்டம் நிறைவுபெறும் காலம் முழுவதும் மொத்தமாதத 24 ஜிபி இணைய சேவை வழங்கப்படுகிறது.

வரம்பற்ற குரல் அழைப்பு வசதி
இந்த திட்டத்தில் மொத்தமாக 3600 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியும் கிடைக்கிறது. அதோடு ஏர்டெல் நன்மைகள், ஜீ5 ப்ரீமியம் ஆகிய இலவச சந்தாக்களும் கிடைக்கிறது. அதோடு ஷா அகாடமியின் 28 நாட்கள் இலவச ஆன்லைன் வகுப்பு வசதியும் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications