Home
News

ஏர்டெல் பயனர்களே- ஒரே ரீசார்ஜ் நான்கு திட்டத்தின் சலுகை: விலை இவ்வளவுதான்., இப்போது 15 நகரங்களில்!

ஏர்டெல் ஆல் இன் ஒன் திட்டமானது இந்தியாவில் 15-க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் விலையானது ரூ.899 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆல் இன் ஒன் திட்டம்

ஆல் இன் ஒன் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தி ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு பிறகு தனது ஆல் இன் ஒன் திட்டத்தை இந்தியா முழுவதும் 15-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவுப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

ரூ.899 விலையில் கிடைக்கும் திட்டம்

ரூ.899 விலையில் கிடைக்கும் திட்டம்

ரூ.899 ஆல் இன் ஒன் திட்டம் தற்போது டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளில் இருக்கும் ஏர்டெல் பயனர்களுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மொபைல், டிடிஎச் உட்பட நான்கு சேவைகளை ஒரே திட்டத்தின் கீழ் வழங்குகிறது.

நான்கு பிரிவு சலுகைகள்

நான்கு பிரிவு சலுகைகள்

முன்னதாக இந்த திட்டமானது புனே, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கிடைக்கிறது. ஆல் இன் ஒன் திட்டமானது நான்கு பிரிவு சலுகைகளை உள்ளடக்கியது. இந்த திட்டத்தின் குறைந்த விலை ரூ.899 ஆகவம் அதிக விலை ரூ.1,999 ஆகவும் உள்ளது.

15 நகரங்களில் கிடைக்கும்

15 நகரங்களில் கிடைக்கும்

ஏர்டெல் ஆல் இன் ஒன் திட்டமானது சென்னை, நொய்டா, டெல்லி, பெங்களூரு, புனே, ஹைதராபாத், கொல்கத்தா, குருகிராம், ஜெய்ப்பூர், போபால், சண்டிகர் போன்ற 15 நகரங்களில் இந்த ஆல் இன் ஒன் திட்டம் கிடைக்கும்.

குறைந்தபட்ச விலை ரூ.899

குறைந்தபட்ச விலை ரூ.899

ஆல் இன் ஒன் திட்டத்தில் நான்கு திட்டங்களை உள்ளடக்கியது. இதன் நன்மைகளை குறித்து பார்க்கலாம். இந்த திட்டத்தின் குறைந்தபட்ச விலை ரூ.899 குறித்து பார்க்கையில், ஒரே ஏர்டெல் திட்டத்தில் இரண்டு போஸ்ட்பெய்ட் இணைப்பு கிடைக்கும் அது ஒரு வழக்கமான சிம் மற்றும் ஒரு இலவச ஆட் இன் சிம் ஆகும். 75 ஜிபி வரை டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.

ரூ.350 மதிப்புள்ள ஏர்டெல்லின் டி.டி.எச் சேனல்கள்

ரூ.350 மதிப்புள்ள ஏர்டெல்லின் டி.டி.எச் சேனல்கள்

அதோடு வாடிக்கையாளர்களுக்கு ரூ.350 மதிப்புள்ள ஏர்டெல்லின் டி.டி.எச் சேனல்கள், இலவச எச்டி செட்-டாப்-பாக்ஸ் மற்றும் அமேசான் பிரைம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பயன்பாட்டிற்கான சந்தாவை உள்ளடக்கிய ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகள் ஒரு வருடத்திற்கு கிடைக்கும்.

நான்கு போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்புகள்

நான்கு போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்புகள்

அதேபோல் ரூ.1,399 திட்டம் பயனர்களுக்கு நான்கு போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்புகளை 150 ஜிபி வரை டேட்டா மற்றும் ரூ.899 திட்டத்தின் அதே நன்மைகளை இந்த திட்டத்திலும் வழங்குகிறது.

ரூ.1,499 திட்டம்

ரூ.1,499 திட்டம்

ஆல் இன் ஒன் ஏர்டெல் ரூ.1,499 திட்டத்தில் இரண்டு போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்புகள், ஏர்டெல் ஃபைபர் மற்றும் லேண்ட்லைன் இணைப்புகளை ஒரே திட்டத்தில் வழங்குகிறது.

75 ஜிபி வரை அதிவேக டேட்டா

75 ஜிபி வரை அதிவேக டேட்டா

அதோடு போஸ்ட்பெய்ட் பயனர்கள் 75 ஜிபி வரை அதிவேக இணையத்தை இலவசமாக அனுபவிக்க முடியும். அதே சமயம் ஃபைபரின் தரவு பயன்பாடு 200 எம்.பி.பி.எஸ் வேகத்தில் 300 ஜிபி டேட்டா வரை இணைக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச விலையான ரூ.1999 திட்டம்

அதிகபட்ச விலையான ரூ.1999 திட்டம்

ஆல் இன் ஒன் ஏர்டெல் திட்டத்தின் அதிகபட்ச விலையானது ரூ.1999 ஆகும். இந்த திட்டத்தில் ரூ.1,499 திட்டத்தைப் போலவே கூடுதல் சலுகைகளையும், கூடுதல் போஸ்ட்பெய்ட் எண் மற்றும் டி.டி.எச் இணைப்புடன் உங்களுக்கு கிடைக்கும். நான்கு திட்டங்களிலும் ஏர்டெல் நன்றி தேங்க்ஸ் திட்ட சலுகைகள் பொதுவானவையாகும்.

Best Mobiles in India

English summary
Bharati Airtel All in One Plan Now 15 More Cities: Here the Details!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X