Home
News

BSNL ரூ.18 திட்டம்: 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் & SMS நன்மை.. எத்தனை நாட்களுக்குத் தெரியுமா?

BSNL நிறுவனம் சமீபத்தில் அதன் சில குறிப்பிட்ட போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளில் சில மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அப்படி, BSNL நிறுவனம் தற்பொழுது அதன் ரூ.18 வவுச்சர் பேக்கின் நன்மைகளில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. BSNL நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மிகவும் மலிவான பெஸ்ட் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL ரூ.18 வவுச்சர் தரும் நன்மை

BSNL ரூ.18 வவுச்சர் தரும் நன்மை

இதற்கு முன்பு BSNL நிறுவனம் இந்த ரூ.18 வவுச்சரில் தினமும் 1.8 ஜிபி டேட்டா நன்மையை FUP வரம்புடன் கொடுத்து வந்தது, இத்துடன் இத்திட்டத்தில் அதன் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் நன்மை மற்றும் வீடியோ காலிங் நன்மையை நிறுவனம் வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டேட்டா நன்மையின் அளவில் மாற்றம்

டேட்டா நன்மையின் அளவில் மாற்றம்

இப்போது இந்த வவுச்சர் திட்டத்தை நிறுவனம் ரிவைஸ் செய்துள்ளது, இதனால் என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இப்போது பார்க்கலாம். BSNL நிறுவனம் தற்பொழுது இந்த ரூ.18 வவுச்சரில் கிடைக்கும் டேட்டா நன்மையின் அளவை மாற்றியுள்ளது. அதேபோல், இந்த திட்டத்தின் கீழ் புதிதாக 100 SMS நன்மையை சேர்த்துள்ளது.

தினமும் 1 ஜிபி டேட்டா

தினமும் 1 ஜிபி டேட்டா

இப்போது, இந்த வவுச்சருடன் உங்களுக்குத் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் நன்மை மற்றும் வீடியோ காலிங் நன்மை மற்றும் 100 SMS 2 நாட்கள் செல்லுபடியாகும் அதே வேலிடிட்டி உடன் கிடைக்கிறது. உங்களுக்கு வழங்கப்படும் டேட்டா வரம்பு நிறைவடைந்ததும், டேட்டா வேகம் 80 kbps ஆக மாற்றப்படும். இந்த புதிய வவுச்சர் திருத்தும் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

800 எம்.பி கைநழுவி போன கடுப்பு

800 எம்.பி கைநழுவி போன கடுப்பு

எது எப்படியாக இருந்தாலும், BSNL செய்துள்ள இந்த மாற்றம் தேவையில்லாத ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம், இன்றைய காலகட்டத்தில் மக்கள் SMS பயனைப் பெரிதாய் பயன்படுத்துவதில்லை, அப்படி இருக்கும் பட்சத்தில் 800 எம்பி டேட்டாவை குறைத்து 100 SMS வழங்கியது பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. உண்மையில் சொல்லப் போனால் 800 எம்.பி கைநழுவி போன கடுப்பு மட்டுமே பயனர்களுக்கு இருக்கும்.

Best Mobiles in India

English summary
Bharat Sanchar Nigam Limited revised its Rs 18 voucher with SMS benefits and Unlimited Calling : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X