சொன்னதை செய்த BSNL.. 1000 டவர்.. BSNL 4G சேவை துவக்கம்.. தமிழ்நாட்டில் எப்போது BSNL 4G மற்றும் 5G கிடைக்கும்?
இந்திய அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இந்திய மக்களின் நம்பிக்கையை பெரும் விதமாக புதிய சாதனையை படைத்துள்ளதாக அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் (BSNL) தரப்பில் இருந்து வெளியான தகவலில், பிஎஸ்என்எல் நிறுவனம் வெற்றிகரமாக ஒரு மாநிலத்தில் 1000 பிஎஸ்என்எல் 4ஜி டவர்களை (BSNL 4G Towers) நிறுவியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை கொண்டு முதலில் 1000 4ஜி டவர்கள் வேகமாக நிறுவப்பட்ட மாநிலமாக எந்த மாநிலம் உருவாக்கியுள்ளது?எப்போது தமிழ்நாட்டில் முழுமையாக பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) கிடைக்குமென்று தகவலை இப்போது பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனம் 1000 4ஜி டவர்களை கேரளா வட்டத்தில் (BSNL Kerala Circle) வெடிக்கறமாக நிறுவியுள்ளதாக கூறியுள்ளது. BSNL திட்டமிட்டபடி, சரியான நேரத்திற்குள் 1000 4ஜி டவர்களை (BSNL 1000 4G Towers) கேரள மாநிலத்தில் நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல்லை பொறுத்த வரையில், இந்தியாவில் கேரள மாநிலம் தான் பிஎஸ்என்எல்-க்கு முக்கியமான வியாபார சந்தையாக திகழ்கிறது. ஆகையால் தான், பிஎஸ்என்எல் நிறுவனம் முதலில் 1000 டவர்களை கேரளாவில் நிறுவியுள்ளதாக கூறப்படுகிறது.

சொன்னதை செய்து காட்டிய BSNL.. ஒரே மாநிலத்தில் 1000 டவர்கள்.. BSNL 4G சேவை துவக்கம்.. எங்கே தெரியுமா?
கேரளாவில் வெற்றிகரமாக BSNL நிறுவனம் 1000 டவர்களை நிறுவியுள்ளதை இந்திய தொலைத்தொடர்பு துறை (DoT) பகிர்ந்து கொண்டது. கேரளா பகுதில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உயர்தர சேவைகளை வழங்க BSNL-க்கு இது ஒரு முக்கியமான படியாகும். BSNL நிறுவனம் இந்த 2024 ஆம் ஆண்டு தீபாவளி (Diwali 2024) பண்டிகைக்குள் சுமார் 75000 4G டவர்களை (4G Towers) நிறுவ முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், சுமார் 1 லட்சம் 4G பிஎஸ்என்எல் தளங்களைப் (1 Lakh BSNL 4G Sites) பயன்படுத்துவதற்கான இலக்கை அடைய BSNL திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த முறை BSNL ஒரு புதுப்பிப்பை வழங்கியபோது, நாடு முழுவதும் சுமார் 25000 4G தளங்களை பயன்படுத்தியுள்ளதாக அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு வளர்ச்சியில், BSNL மற்றும் டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் (C-DoT) இணைந்து இந்தியாவில் பிஎஸ்என்எல் 5ஜி (BSNL 5G) சோதனையை மேற்கொண்டு வருவதாக DoT கூறியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த 5G சோதனையானது BSNL நிறுவனத்திற்கு வரும் 2025 ஆம் ஆண்டில், வணிக ரீதியாக 5G சேவையை அறிமுகப்படுத்த உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எப்போது BSNL 4G மற்றும் 5G கிடைக்கும்? தெளிவான பதிலை தந்த BSNL:
BSNL நிறுவனம் வரும் 2025 இல் BSNL 5G சேவையை கட்டாயம் அறிமுகப்படுத்தும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அது உண்மையில் நடக்குமா இல்லையா என்பது நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று. இதற்கிடையே, பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாட்டில் எப்போது அதன் 4ஜி சேவையை முழுமையாக அறிமுகப்படுத்தும் என்ற கேள்வி நீண்ட காலமாக கேட்கப்பட்டு வருகிறது. இதற்கும் BSNL பொறுப்பான பதிலை வழங்கியுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் வருகிற அக்டோபர் 2024 ஆம் மாதத்திற்குள் தமிழ்நாட்டில் முழுமையாக அதன் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்று நம்பிக்கை அளித்துள்ளது. இதற்கான வேலைகளை ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனம் துவங்கிவிட்டதாகவும், தமிழ்நாட்டில் உள்ள சில இடங்களில் இப்போது 4ஜி சேவை அணுக கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது.குறிப்பாக தமிழக கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் 4ஜி சேவையை BSNL வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications