Home
News

வந்துவிட்டது பாரத் கியூஆர் கோடு.!

பாரத் கியூஆர் கோடு என்கிற புது பணமில்லா பரிவர்த்தனைக்கான முறையினை ரிசர்வ் பேங்க் நேற்று அறிவித்துள்ளது.

By Ilamparidi

மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனை செய்திடும் முறைமையினை மேலும் மக்களிடத்தே முழுமையாக எடுத்துச் சென்றிடவும்,மேலும் மக்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோர் பணப்பரிவர்த்தனை செயல்முறையினை எளிதாக மேற்கொள்ளும் விதத்திலுமே இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பணமில்லா பரிவர்த்தனை தனை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றிட வேண்டுமென்ற அரசின் ஓர் பெரும் முயற்சியாகவே கருதப்படுகிறது.

அதுகுறித்த மேலதிக தகவல்களும்,மேலும் இதன் வழியாக எவ்வாறு பணப்பரிவர்த்தனை மேற்கொள்வது என்பது குறித்த விளக்கங்களும் கீழே..

பெரு மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு:

பெரு மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு:

கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் மத்திய அரசானது பெருமதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லதென்ற அறிவிப்பினை வெளியிட்டது.இந்த அறிவிப்பினுடைய தாக்கமாக சமூகத்திலுள்ள விளிம்புநிலை மக்கள் எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாகினர்.இருந்தபோதும் இன்னொருபுறம் நேரடியான பணப்பரிவர்த்தனையானது குறைந்து பணமில்லா பரிவர்த்தனை அதிகரிக்கவே துவங்கியது.

பீம் ஆப்:

பீம் ஆப்:

பெரும்பான்மையான மக்களிடத்தே பரவலான அதிருப்தியை பெற்ற பெரு மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு என்ற நடவடிக்கையின் மூலம் மக்கள் எளிதாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் விதத்தில் மத்திய அரசானது யுபிஐ னுடைய பீம் ஆப்பினை அறிமுகப்படுத்தியது.இதன் மூலம் மக்கள் குறைத்த நாட்களிலேயே அதிகப்படியான பணப்பரிவர்த்தனை மேற்கொண்டிருப்பது செய்திகளில் வெளியானது.

பாரத் கியூஆர் கோடு:

பாரத் கியூஆர் கோடு:

மத்திய அரசின் பெருமதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பிற்கு பின் மக்கள் தங்களது அன்றாட தேவைகளினை பூர்த்தி செய்திட வேண்டி பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தினர்.அதன் பிறகு மக்கள் தமது தேவைகளை எளிதாக பூர்த்திசெய்துகொள்ளும் வகையில் மத்திய அரசு பீம் ஆப் என்கிற செயலியை வெளியிட்டது.அதன் நீட்சியாகவே இப்போது பாரத் கியூஆர் கோடு என்கிற செயல்முறையனை அறிமுகப்படுத்துகிறது.

செயல்பாடு:

செயல்பாடு:

பாரத் கியூஆர் கோடு என்கிற இந்த செயல் முறையினை எவ்வாறு பயன்படுத்துவது எனில் விற்பனையாளர்கள் தங்கள் வங்கி கணக்குக்கான பாரத் கியூஆர் கோடினை உருவாக்கிக்கொண்டு தங்களது கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு தெரியும் படி பொறுத்திவிட்டால் போதும்.பயனாளர்கள் அந்த பார் கோடினை தங்களது பீம் ஆப் உள்ளிட்ட தங்களது வங்கி ஆப்ஸ்கள் வழியாக ஸ்கேன் செய்வதன் மூலம் எவ்வளவு பணம் என்பதனை மட்டும் உள்ளிட்டு விற்பனையாளர்களின் வங்கி கணக்கிற்கு எளிதாக பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள இயலும்.விற்பனையாளர்கள் வங்கி கணக்கு என் உள்ளிட்ட விவரங்கள் எதனையும் உள்ளிடத் தேவையில்லை.

எளிதாகவும் விரைவாகவும்:

எளிதாகவும் விரைவாகவும்:

ரிசர்வ் வங்கியின் இந்த பாரத் கியூஆர் என்கிற செயல்முறையின் மூலம் மக்களும் விற்பனையாளர்களும் விரைவாகவும் எளிதாகவும் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் கார்டு மற்றும் விசா அக்கௌன்ட்:

மாஸ்டர் கார்டு மற்றும் விசா அக்கௌன்ட்:

ரிசர்வ் வங்கியின் மற்றுமோர் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளும் செயல்முறையான இந்த பாரத் கியூஆர் கோடு என்கிற முறைமையின் மூலமாக மாஸ்டர் கார்டு,ரூபே,விசா அக்கௌன்ட் ஆகியவற்றிற்கான கட்டணத்தையும் இதன் மூலமாக செலுத்த பொதுவானதொன்றாகவும்,எளிதாகவும் செலுத்தலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இன்டர்நெட் வசதி இல்லாமல் 'பேடிஎம்' ஆப் பயன்படுத்துவது எப்படி.?

More from GizBot

Best Mobiles in India

English summary
Bharat QR code launched: Everything you need to know.Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X