PUBG-யின் தம்பி மறுபடியும் வந்துட்டான்.. BGMI பிரியர்களுக்கு குட் நியூஸ்.. உடனே Google Play ஸ்டோர் போங்க!
பப்ஜி மொபைல் கேம் (PUBG Mobile Game) இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின்னர் அதே போன்ற பாணியில் அறிமுகமான ஒரு மொபைல் வீடியோ கேம் தான் - பிஜிஎம்ஐ (BGMI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா (Battlegrounds Mobile India).
பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த ஆண்டு, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (Apple App Store) இருந்து பிஜிஎம்ஐ மொபைல் கேம் நீக்கப்பட்டது. நினைவூட்டும் வண்ணம் பிஜிஎம்ஐ கேமிற்கு முன் தடைசெய்யப்பட்ட பப்ஜி மொபைலும் கூட இதேபோன்ற பாதுகாப்பு காரணங்களுக்காகவும், சீனாவுடனான தொடர்புகளுக்காகவும் தான் இந்தியாவில் தடைசெய்யப்பட்டள்ளது.

பிப்ஜி மற்றும் பிஜிஎம்ஐ மீதான தடை, மொபைல் கேமிங் பிரியர்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது பிஜிஎம்ஐ மீதான தடையை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளது. இதன் விளைவாக பிஜிஎம்ஐ கேம் ஆனது இப்போது ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன்களுக்கான கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.
சிலருக்கு இந்த கேம், கூகுள் பிளே ஸ்டோர் வழியாக நேரடியாக கண்டறிய முடியாமல் போகலாம், அவர்களெல்லாம் பிஜிஎம்ஐ-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு (BGMI Official Website) சென்று, அங்குள்ள பிளே பட்டனை கிளிக் செய்தால், நீங்கள் டவுன்லோட் பேஜ்ஜிற்கு (Download Page) திருப்பி விடப்படுவீர்கள். அங்கிருந்து, நீங்கள் பிஜிஎம்ஐ கேமை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
தற்போது வரையிலாக இந்த கேம் ஐஓஎஸ்-க்கான ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கவில்லை, இருப்பினும் இந்த கேம் அடுத்த சில நாட்களில் ஐபோன் (iPhone) பயனர்களுக்கும் அணுக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சர்வர் தொடர்பான சிக்கல்கள் காரணமாக சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூட இன்னுமும் பிஜிஎம்ஐ கேம்-ஐ இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இந்த பிரச்சனை விரைவில் சரி செய்யப்படலாம்.
திடீரென பிஜிஎம்ஐ மீதான தடை ஏன் நீக்கப்பட்டது? இந்திய அரசாங்கம் பிஜிஎம்ஐ மொபைல் கேமின் டெவலப்பர் ஆன கிராஃப்டனுக்கு சில விதிகளை வகுத்துள்ளதாக தெரிகிறது. முதலாவதாக, இந்த கேம் மீதான போதைப்பழக்கத்தை (Addiction) குறைக்க, கேமிங் செய்வதற்கான கால வரம்பை சேர்க்குமாறு டெவலப்பரிடம் அரசாங்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாவதாக, பிஜிஎம்ஐ அதன் யூஸர் இன்டர்பேஸை (User Interface - UI), இந்திய பார்வையாளர்களுக்கு பொருத்தமானதாக மாற்றியமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. நினைவூட்டும் வண்ணம் பிஜிஎம்ஐ தடைக்கு முன்பே, இது இந்திய பயனர்களுக்கு ஏற்றதாகவே இருந்தது. இந்திய பயனர்களின் தரவை பாதுகாப்பதற்காக மைக்ரோசாஃப்ட் அஸூர் நிறுவனத்துடன் கிராஃப்டன் கூட்டு சேர்ந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், சரியாக என்ன மாதிரியான விதிகள் விதிக்கப்பட்டுள்ளது என்கிற விவரங்களை கிராஃப்டன் நிறுவனம் வெளிப்படுத்தவில்லை / உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இந்தியாவில் பிஜிஎம்ஐ-யின் செயல்பாட்டை மீண்டும் தொடங்க அனுமதி அளித்ததற்கு இந்திய அரசுக்கு, கிராஃப்டன் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
கிராஃப்டன் இந்தியாவைன் சிஇஓ-வான சீன் ஹியூனில் சோன் (Sean Hyunil Sohn) கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா செயல்பாட்டை மீண்டும் தொடங்க அனுமதித்த இந்திய அதிகாரிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும் ஆதரவு அளித்த, பொறுமை காத்த எங்கள் இந்திய கேமிங் சமூகத்திற்கும் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேம் ஆனது விரைவில் பதிவிறக்கம் செய்யக்கிடைக்கும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் உங்களை மீண்டும் எங்கள் தளத்திற்கு வரவேற்கிறோம்" என்றும் அவர் கூறி உள்ளார். பிஜிஎம்ஐ-யின் மறுவருகை குறித்து பேசும் போது "இது பல தொழில்முறை மொபைல் கேமர்களுக்கு நிவாரணமாக உள்ளது" என்று லோகோ நிறுவனர்களான அஷ்வின் சுரேஷ் மற்றும் அனிருத் பண்டிதா கூறி உள்ளனர்.


Click it and Unblock the Notifications








