PUBG-ஐ தொடர்ந்து BGMI மீதும் தடை; இந்திய அரசு அதிரடி! "அந்த" கொலை தான் காரணமா?

|

பிஜிஎம்ஐ (BGMI) என்று அழைக்கப்படும் பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா (Battlegrounds Mobile India) என்கிற வீடியோ கேம் ஆனது, அரசாங்க உத்தரவைத் தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (Apple App Store) இருந்து நீக்கப்பட்டுள்ளது!

PUBG-க்கு நடந்த

PUBG-க்கு நடந்த "அதே" சம்பவம்?

என்னது BGMI தடை செய்யப்பட்டுள்ளதா? இது எப்போது நடந்து? இனிமேல் பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா கேமை விளையாட முடியாதா? பப்ஜி கேமை போலவே இதுவும் காணாமல் போகுமா?

இந்த தடைக்கு பின்னணியில் உள்ள மேலோட்டமான காரணம் என்ன? உண்மையான காரணம் என்ன? இந்த நடவடிக்கைக்கு கூகுள் (Google) நிறுவனமும், கிராஃப்டன் (Krafton) நிறுவனமும் என்ன விளக்கம் அளித்துள்ளது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

போங்க.. எல்லாரும் போங்க! அழாத குறையாக Vodafone Idea செய்த காரியம்!போங்க.. எல்லாரும் போங்க! அழாத குறையாக Vodafone Idea செய்த காரியம்!

இது எப்போது நடந்தது?

இது எப்போது நடந்தது?

நேற்று (அதாவது ஜூலை 28 ஆம் தேதி) மாலை எந்த எச்சரிக்கையும் இல்லாமல் Battlegrounds Mobile India மொபைல் வீடியோ கேம் ஆனது கூகுள் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து அகற்றப்பட்டது.

இந்த திடீர் நடவடிக்கை பல கேமர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது (சில பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது; அது வேறு விஷயம்) இருப்பினும், இது அரசாங்க உத்தரவின் கீழ் நிகழ்த்தப்பட்டுள்ள நடவடிக்கை என்பதால் "இப்போதைக்கு" யாராலும் ஒன்றுமே செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.

இனிமேல் இந்த கேமை விளையாட முடியாதா?

இனிமேல் இந்த கேமை விளையாட முடியாதா?

பிஜிஎம்ஐ கேம்-ஐ ஏற்கனவே தங்கள் ஸ்மார்ட்போன்களில் 'இன்ஸ்டால்' செய்து இருப்பவர்கள், குறைந்தபட்சம் இப்போதைக்கு இந்த கேமை விளையாடலாம்.

ஆனால் வரும் நாட்களில் இது தொடர்ந்து அணுக கிடைக்குமா? அல்லது இந்தியாவில் முற்றிலுமாக தடை செய்யப்படுமா? என்பது குறித்து போதுமான தகவல்கள் இல்லை. அதுகுறித்து தகவல் கிடைத்தால், உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

இப்போ வாங்கிக்கோங்க.. அப்புறமா காசு கொடுங்க! Samsung-இன் இப்போ வாங்கிக்கோங்க.. அப்புறமா காசு கொடுங்க! Samsung-இன் "அடேங்கப்பா" ஆபர்!

இதன் பின்னணியில் உள்ள

இதன் பின்னணியில் உள்ள "சரியான" காரணம் தான் என்ன?

நினைவூட்டும் வண்ணம், BGMI என்று அழைக்கப்படும் Battlegrounds Mobile India ஆனது முன்னதாக PUBG என்கிற பெயரின் கீழ் அணுக கிடைத்தது. பின்னர் அது பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக, இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

அப்படியாக தடை செய்யப்பட்ட பட்டியலில் பப்ஜி உட்பட பல சீன ஆப்களும் இருந்தன. இப்போது அந்த பட்டியலில் BGMI கேம் ஆனது "தற்காலிகமாக... மீண்டும்" சேர்க்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது

நினைவூட்டும் வண்ணம் இதேபோன்ற ஒரு நடவடிக்கை கரேனா ஃப்ரீ ஃபயர் மீதும் நடந்தது. குறிப்பிட்ட கேம் ஆனது கடந்த பிப்ரவரியில் தடை செய்யப்பட்டது.

ட்விட்டர் வழியாக கிளம்பும் சந்தேகங்கள்!

ட்விட்டர் வழியாக கிளம்பும் சந்தேகங்கள்!

BGMI கேம் மீதான தடையால், ட்விட்டர் தளமானது #BGMI மற்றும் #BGMIban என்கிற ஹேஷ்டேக்குகளால் நிரம்பி வழிகிறது.

கூடவே இந்த தடைக்கான சாத்தியமான காரணங்கள் பற்றிய வதந்திகள் மற்றும் ஊகங்களும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதில் மிகவும் முக்கியமான ஒரு யூகம் - சமீபத்தில் நடந்த ஒரு கொலை!

Google Maps-ல் அசத்தல் அம்சம்; இனி Google Maps-ல் அசத்தல் அம்சம்; இனி "Reached Safely" மெசேஜ் அனுப்ப வேண்டிய அவசியமே இல்ல!

தாயை கொன்ற 16 வயது சிறுவன்?

தாயை கொன்ற 16 வயது சிறுவன்?

இந்தியாவில் BGMI மீதான தடைக்கு பின்னால் தெளிவான காரணம் எதுவும் இல்லை. ஆனாலும், இதன் பின்னணியில் சமீபத்தில் நடந்த ஒரு கொலை தொடர்புடையதாக இருக்கலாம் என்பது போல் தெரிகிறது.

நினைவூட்டும் வண்ணம், ஆன்லைன் கேம் விளையாடியதற்காக திட்டிய தனது தாயை 16 வயது சிறுவன் சுட்டு கொன்றதாக கூறப்படுகிறது. ஒருவேளை BGMI கேம் மீதான தடைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது முற்றிலும் ஒரு யூகமே ஆகும்.

இந்த தடை குறித்து Google மற்றும் Krafton என்ன விளக்கம் அளித்துள்ளது?

இந்த தடை குறித்து Google மற்றும் Krafton என்ன விளக்கம் அளித்துள்ளது?

கூகுள் நிறுவனம் வழியாக வெளியான அறிக்கையில், இந்த நடவடிக்கை உத்தரவை பின்தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து டெவலப்பருக்கு தெரிவித்துள்ளோம், மேலும் இந்தியாவில் உள்ள Play Store-இல் அணுக கிடைத்த குறிப்பிட்ட ஆப்பிற்கான அணுகலையும் தடுத்துள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், Krafton நிறுவனம், "Google Play ஸ்டோரில் இருந்து BGMI எவ்வாறு அகற்றப்பட்டது என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம், அது குறித்த தகவலை பெற்றவுடன் உங்களுக்குத் தெரிவிப்போம்" என்று கூறி உள்ளது.

ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?

சமீபத்தில் தான் 100 மில்லியன் ரிஜிஸ்டர் யூசர்கள் வந்தனர்!

சமீபத்தில் தான் 100 மில்லியன் ரிஜிஸ்டர் யூசர்கள் வந்தனர்!

கடந்த சில ஆண்டுகளாக, BGMI மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் ஈகோசிஸ்டமை உருவாக்க, இந்தியாவில் $100 மில்லியனுக்கு மேல் முதலீடு செய்துள்ளதாக கிராஃப்டன் நிறுவனம் கூறுகிறது.

சமீபத்தில் தான் இந்நிறுவனம், BGMI கேம் ஆனது 100 மில்லியன் ரிஜிஸ்டர்டு யூசர்களை தாண்டியுள்ளதாகவும் அறிவித்தது.

பக்கம் பக்கமாக வசனம் பேசினாங்க.. இப்போ இழுத்து மூடிட்டாங்க!

பக்கம் பக்கமாக வசனம் பேசினாங்க.. இப்போ இழுத்து மூடிட்டாங்க!

100 மில்லியன் ரிஜிஸ்டர்டு யூசர்கள் தொடர்பான அறிவிப்பின் போது, Krafton நிறுவனத்தின் CEO, "கிராஃப்டன் நிறுவனத்திற்கு இந்தியா ஒரு முக்கியமான சந்தையாகும். நாட்டில் எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் நேர்மறையாக உள்ளது மற்றும் வலுவான கேமிங் சூழலை உருவாக்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மொபைல் கேமிங் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்துவதில் தான் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்" என்றெல்லாம் கூறி இருந்தார்.

யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை; இப்படி இழுத்து மூடிட்டாங்க!

Photo Courtesy: BGMI

Best Mobiles in India

English summary
BGMI Banned in India After PUBG Why Battlegrounds Mobile India Removed from Google Play Store

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X