காதலியின் சகோதரர் தாக்கல் செய்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய கோரிய அமேசான் உரிமையாளர்
அமேசான்.காம் இன்க் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் என்பவர் தனது காதலி லாரன் சான்செஸ் அவர்களின் சகோதரரால் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்க நீதிபதியை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அறிக்கை திங்கள் அன்று தாக்கல் செய்யப்பட்டது.

மைக்கேல் சான்செஸ் பெசோஸ் மீது லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி சுப்பீரியர் நீதிமன்றத்தில் லாரன் சான்செஸின் சகோதரர் தான் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கில் நெருக்கமான புகைப்படங்கள் தான் ஆதாரம் என்று பொய்யாகக் கூறி குற்றம் சாட்டியதாக நீதிமன்றத்தின் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
கடந்த ஆண்டு மார்ச் மாதம், தேசிய என்க்யூயரின் பத்திரிகை குறிப்பு ஒன்றில் பெசோஸ் குறித்த தனது அறிக்கைகளை தெரிவித்தார். பெசோஸின் காதலி லாரன் சான்செஸின் சகோதரரிடம் இருந்து கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெசோஸ் திங்களன்று தன் மீதான வழக்குக்கு ஒரு பதிலைத் தாக்கல் செய்தார். அதில் சான்செஸின் கூற்றுக்களை ஆதாரமற்றது என்று கூறியதுடன், இந்த வழக்கு பெசோஸைத் தூண்டும் முயற்சியாகும் என்றும் 'தனது சுதந்திரமான பேச்சுரிமையைப் கட்டுப்படுத்தும் திறன் என்றும் ப்ளூம்பெர்க் கூறியுள்ளார்.

மேலும் தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஒரு சிறு ஆதாரம் கூட இல்லை என்றும், தன் மீதான குற்றங்களை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications