அம்பலமான வாட்ஸ்அப் பாதுகாப்பு குறைபாடு: உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படலாம்..திடுக்கிடும் ரிப்போர்ட்..

|

நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் (WhatsApp) பயன்பாட்டு பாதுகாப்பில் ஒரு மிகப் பெரிய துளை உள்ளது என்ற உண்மை தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு பாதுகாப்பு சிக்கல் இருப்பது அறியாமல் உலகெங்கிலும் உள்ள பல பில்லியன்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டை பயன்படுத்தி வருகின்றனர். இது பற்றி நிறுவனமும் இன்னும் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது வேதனை. உங்கள் வாட்ஸ்அப் மொபைல் எண் மட்டும் ஹேக்கர்களுக்கு தெரிந்தால் போதும், நீங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது.

உங்கள் சாட் மற்றும் டேட்டா எல்லாம் அம்பலம் ஆகிவிடுமா?

உங்கள் சாட் மற்றும் டேட்டா எல்லாம் அம்பலம் ஆகிவிடுமா?

என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க? அப்போ, வாட்ஸ்அப் பாதுகாப்பானது இல்லையா? எங்கள் சாட் மற்றும் டேட்டா எல்லாம் அம்பலம் ஆகிவிடுமா? என்று பல கேள்விகள் உங்களுக்குள் எழுந்திருக்கும். இதற்கான அனைத்து விடையையும் தெரிந்துகொள்ளப் பதிவை இறுதி வரை படிக்கத் தொடருங்கள். நாங்கள் முன்பே சொன்னது போல, உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்ய, நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் கணக்கின் மொபைல் எண் மட்டும் ஹேக்கர்களுக்கு தெரிந்தால் போதும். இதன் மூலம் உங்கள் கணக்கை அவர்கள் இடைநிறுத்தம் செய்ய முடியும்.

யாரால் நடத்தப்பட்ட தாக்குதல் இது?

யாரால் நடத்தப்பட்ட தாக்குதல் இது?

இந்த செய்தி முதலில் ஃபோர்ப்ஸால் தெரிவிக்கப்பட்டது. நடத்தப்பட்ட தாக்குதல், ஒரு ஜோடி பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களான லூயிஸ் மார்க்வெஸ் கார்பின்டெரோ மற்றும் எர்னஸ்டோ கேனலேஸ் பெரேனா ஆகியோரின் கருத்து-ஆதாரம் ஆகும். முதலில் உங்கள் தொலைபேசி எண் ஹேக்கர் கைகளில் சிக்கியதும், அவர்கள் அதைக் கொண்டு வாட்ஸ்அப் இல் உள்நுழைய முயல்வார்கள். அதாவது லாகின் செய்ய முயல்வார்கள்.

"2.o"- இனி "ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி" ஆதிக்கம்: பெஸ்ட் கிளாஸ் கேமிங் ஸ்மார்ட்போன்: ஆரம்பமே சலுகையோடு!

டு-ஃபாக்டர்-ஆதென்டிகேஷன்-சிஸ்டம் என்ன ஆச்சு?

டு-ஃபாக்டர்-ஆதென்டிகேஷன்-சிஸ்டம் என்ன ஆச்சு?

அதாவது லாகின் செய்ய முயல்வார்கள். வாட்ஸ்அப் இல் உங்களுக்கு டு-ஃபாக்டர்-ஆதென்டிகேஷன்-சிஸ்டம் (two-factor authentication system) முறை நடைமுறையில் இருப்பதனால், அவர்களால் முதலில் உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாது.

ஹேக்கர்கள் அவர்களின் முயற்சியைக் அப்படி எளிதில் கைவிடுவதில்லை, பல முறை லாகின் செய்ய முயல்கின்றனர்.

ஹேக்கர்களின் தந்திரமான விஷம காரியங்கள்

ஹேக்கர்களின் தந்திரமான விஷம காரியங்கள்

இதனால், நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இருந்து, இனி உங்களால் லாக்கின் செய்ய அனுமதிக்கப்படமாட்டீர்கள். உங்களின் உள்நுழைவும் இப்போது வாட்ஸ்அப் மூலம் பூட்டப்பட்டுவிடும்.

இப்போது இங்கே வரை, உங்களின் வாட்ஸ்அப் கணக்கிற்கு எந்த பாதுகாப்பு சிக்கல்களும் இல்லை. ஆனால், ஹேக்கர்கள் இதற்குப் பின்னர் தான் அவர்களின் தந்திரமான விஷம காரியங்களைச் செய்யத் துவங்குகின்றனர்.

அடேங்கப்பா...இனி ATM கார்டு இல்லாமல் நொடியில் பணம் எடுக்கலாம்.. வந்தது புதிய வசதி.!அடேங்கப்பா...இனி ATM கார்டு இல்லாமல் நொடியில் பணம் எடுக்கலாம்.. வந்தது புதிய வசதி.!

மிகவும் துணிச்சலான ஹேக்கிங் செயல்

மிகவும் துணிச்சலான ஹேக்கிங் செயல்

ஹேக்கர்கள் இப்போது துணிச்சலாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு ஒரு மின்னஞ்சல் செய்தியை அனுப்புகிறார். அதில் அவர்கள், உங்களுடைய தொலைபேசி எண் தொலைந்துவிட்டது அல்லது திருடப்பட்டுள்ளது என்று கூறி, உங்கள் எண்ணுடன் தொடர்புடைய கணக்கு செயலிழக்கப்பட வேண்டும் என்றும் ஈமெயில் செய்கின்றார். வாட்ஸ்அப் நிறுவனம் இதை எப்படி கையாள்கிறது என்பது தான் அடுத்தகட்ட நடவடிக்கை.

அம்பலமான வாட்ஸ்அப் பாதுகாப்பு குறைபாடு

அம்பலமான வாட்ஸ்அப் பாதுகாப்பு குறைபாடு

வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது இதை ஒரு பதில் மின்னஞ்சலுடன் "சரிபார்க்கிறது". மேலும், உங்கள் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லாமல் உங்கள் கணக்கை நிறுவனம் உடனே இடைநிறுத்தம் செய்கிறது. உங்கள் கணக்கில் அரை நிரந்தர பூட்டை உருவாக்கத்ஹேக்கர் தொடர்ச்சியாகப் பல முறை இந்த செயல்முறையை மீண்டும் செய்யலாம்.

நீல நிறத்தில் வாழைப்பழம்..சுவையோ 'வென்னிலா ஐஸ் கிரீம்' போல.! இணையத்தைக் கலக்கும் புது தகவல்..நீல நிறத்தில் வாழைப்பழம்..சுவையோ 'வென்னிலா ஐஸ் கிரீம்' போல.! இணையத்தைக் கலக்கும் புது தகவல்..

இதில் உள்ள குறைந்த பட்ச நன்மை

இதில் உள்ள குறைந்த பட்ச நன்மை

இதனால் மீண்டும்-மீண்டும் உங்கள் கணக்கு தாக்குதலுக்கு ஏற்பட்டு மொத்தமாக இடைநிறுத்தம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உங்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டு சேவையில் சில சிக்கல்களை சந்திக்க செய்யும். இதில் வாட்ஸ்அப் பாதுகாப்பு குறைபாடு அம்பலம் செய்யப்பட்டாலும், இதில் உள்ள குறைந்த பட்ச நன்மை என்று ஒன்று இருக்கிறது.

உங்கள் மெசேஜ் மற்றும் டேட்டாவை ஹேக்கர் அணுக முடியுமா?

உங்கள் மெசேஜ் மற்றும் டேட்டாவை ஹேக்கர் அணுக முடியுமா?

நாங்கள் இங்குக் காணக்கூடிய ஒரே நன்மையான விஷயம் என்னவென்றால், ஹேக்கர்கள் எத்தனை முறை உங்களின் கணக்கை லாகின் செய்ய முயன்றாலும் அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கிற்குள் உள்நுழைய முடியவில்லை. இதனால், உங்கள் எந்தவொரு செய்தியையும், டேட்டாவையும் அவர்களால் அணுக முடியவில்லை என்பது சற்று நிம்மதி அளிக்கிறது. ஆனால், எந்த தகவலும் இல்லாமல் உங்களின் கணக்கு இடைநிறுத்தம் செய்யப்படுவது என்பது கவலை அளிக்கிறது.

வாட்ஸ்அப் இல் 'குக் வித் கோமாளி ஸ்டிக்கர்' பேக் வேண்டுமா? அப்போ உடனே இதை செய்யுங்கள்..வாட்ஸ்அப் இல் 'குக் வித் கோமாளி ஸ்டிக்கர்' பேக் வேண்டுமா? அப்போ உடனே இதை செய்யுங்கள்..

ஆதாரமும் இல்லை.. தீர்வும் கண்டுபிடிக்கப்படவில்லை

ஆதாரமும் இல்லை.. தீர்வும் கண்டுபிடிக்கப்படவில்லை

தற்போது, ​​இந்த பாதுகாப்பு துளைக்கு எந்தவித தீர்வும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மை. மேலும், வாட்ஸ்அப்பில் இருந்து உங்கள் கணக்கை யார் முடக்கம் செய்தனர் என்பதற்கான ஆதாரமும் இல்லை என்பதனால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கை மற்றவர்கள் பூட்டுவதற்கு இந்த நுட்பம் பல்வேறு நபர்களால் பயன்படுத்தப்படுகிறது.

இது தான் நல்லதும், பாதுகாப்பானதுமா?

இது தான் நல்லதும், பாதுகாப்பானதுமா?

யார் இதை செய்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆகையால், முன்பின் தெரியாத இடங்களில் அல்லது நபர்களிடம் உங்களின் வாட்ஸ்அப் கணக்கு எண்ணைத் தெரியப்படுத்தாமல் இருப்பது ஒரு வகையில் நல்லதும், பாதுகாப்பானதும் கூட என்பதை மறக்காதீர்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Beware WhatsApp Users Anyone With Your Phone Number Can Semi-Permanently Suspend Your WhatsApp Account : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X