அது எப்படி வாத்தியாரே? ஒரே ஒரு மிஸ்ட் கால் கொடுத்து ரூ.50 லட்சம் தூக்கிய கும்பல்: உஷார்.!

|

ஓடிபியை பகிர்ந்தால் உங்கள் கணக்கில் உள்ள பணமும், தனிப்பட்ட தகவலும் திருடப்படும் எனவே கவனமாக இருப்பது அவசியம் என பலவகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் டெல்லியை சேர்ந்த ஒருவர் ஓடிபியை பகிராமல் ரூ.50 லட்சத்தை இழந்திருக்கிறார். அதுவும் ஒரே ஒரு missed call மூலம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

ரூ.50 லட்சம் மோசடி

ரூ.50 லட்சம் மோசடி

டெல்லியை சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 லட்சத்தை மோசடி கும்பல் திருடி இருக்கிறது. இந்த மோசடி நடைபெறுவதற்கு முன்பு அந்த நபருக்கு தவறான அழைப்புகளும், மிஸ்ட் கால்களும் வந்திருக்கிறது. மோசடி கும்பல் ஜார்கண்ட் ஜம்தாரா பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீஸார் கணித்திருக்கின்றனர். பாதிக்கப்பட்டவரின் பல வங்கிக் கணக்குகளில் இருந்து மோசடி செய்பவர்கள் பணம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.

நம்பலனாலும் இதான் நிஜம்

நம்பலனாலும் இதான் நிஜம்

உங்கள் ஓடிபியை பிறரிடம் பகிர வேண்டாம். தேவையில்லாமல் வரும் லிங்க்குகளை கிளிக் செய்து உங்கள் தனிப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டாம். குரலழைப்பு, எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மூலம் கேட்கப்படும் தகவல்கள் மற்றும் ஓடிபிகளை பகிர வேண்டாம் என இணைய மோசடிகள் குறித்து சைபர் கிரைம் போலீஸார் மூலம் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால் ஓடிபி-ஐ பகிராமலும் நீங்கள் இந்த மோசடியில் சிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அதற்கு ஆதாரமும் இருக்கிறது.

ஓடிபி பகிராமல் திருட்டு

ஓடிபி பகிராமல் திருட்டு

டெல்லிய சேரந்த நபர் ஒருவர் மிஸ்டு கால் மூலம் ரூ.50 லட்சத்தை இழந்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்குகளில் இருந்து பல பரிவர்த்தனைகள் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் எந்தவொரு ஓடிபியையும் பிறரிடம் பகிரவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்க ஒன்று.

தொடர் மிஸ்டு கால்

தொடர் மிஸ்டு கால்

தெற்கு டெல்லியில் உள்ள ஒரு பாதுகாப்பு சேவையின் இயக்குனராக பணிபுரியும் ஒருவர் சைபர் மோசடியில் ரூ.50 லட்சம் இழந்தததாக கூறப்படுகிறது. இதுகுறித்து TOI இல் வெளியான அறிக்கையை பார்க்கலாம். பாதிக்கப்பட்டவரின் மொபைலுக்கு சில நாட்களுக்கு முன்பு இரவு 7 மணி முதல் 8:45 மணி வரை தொடர்ந்து மிஸ்டு கால் அழைப்புகள் வந்துள்ளது. சில அழைப்புகளில் அவர் லாவகமாக உடனே அட்டன்ட் செய்துள்ளார் ஆனால் மறுபுறம் இருக்கும் நபர் எதுவும் பேசாமல் கட் செய்துள்ளார்.

RTGS மெசேஜ்

RTGS மெசேஜ்

இதனால் குழப்பமடைந்த அந்த நபர், சிறிது நேரம் கழித்து தனது மொபைலை எடுத்து பார்த்துள்ளார். அதில் உள்ள மெசேஜ்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் (RTGS) மெசேஜ்கள் வந்திருக்கிறது. இதில் வங்கிக் கணக்கில் இருந்து ஏறத்தாழ அரை கோடி வரை பரிமாற்றங்கள் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

புகுந்து விளையாடும் மோசடி கும்பல்

புகுந்து விளையாடும் மோசடி கும்பல்

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, முதற்கட்ட விசாரணையில் இந்த மோசடி கும்பல் ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சரி, இந்த பணம் எதன் அடிப்படையில் திருடப்பட்டிருக்கிறது என்று தெரிய வேண்டும் அல்லவா, கமிஷனுக்காக தங்கள் கணக்கை ஒப்படைத்து இருக்கிறார் அதன் அடிப்படையில் இந்த பணம் எடுக்கப்பட்டது போல் காட்டப்பட்டிருக்கிறது.

சிம் கார்ட் போர்ட்டல் மூலம் திருட்டு

சிம் கார்ட் போர்ட்டல் மூலம் திருட்டு

ஓடிபி, ஸ்க்ரீன் பரிமாற்றம் இதையெல்லாம் தாண்டி ஆர்டிஜிஎஸ் என்ற புதிய முறையில் இந்த பணம் திருடப்பட்டிருக்கிறது. அதாவது போர்ட்டல் மாற்றுவது "சிம் பரிமாற்றம்" என்ற முறையில் இந்த பணம் திருடப்பட்டிருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். சிம் கார்ட் மாற்றப்பட்டுவிட்டால் தங்களுக்கு வரும் அனைத்து தகவலும் மாற்றப்பட்ட சிம் கார்டுக்கு அனுப்பப்படும் அதன் அடிப்படையில் இந்த தகவல்கள் திருடப்பட்டு விட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சிம் ஸ்விட்ச் மோசடி

சிம் ஸ்விட்ச் மோசடி

சிம் ஸ்விட்ச் மோசடி மூலம் இதுபோன்ற மோசடிகள் நடக்கிறது. மோசடி செய்பவர்கள் உங்கள் மொபைல் போனின் சிம் வழங்குநரைத் தொடர்புகொண்டு வேறு போர்ட்டலுக்கு மாற்ற வேண்டும் என அதிகாரப்பூர்வ நபர் போல் தெரிவிக்கின்றனர்.

பிற போர்ட்டல் சிம் கார்டை செயல்படுத்தும்படி அவர்களை நம்ப வைக்கின்றனர். இந்த சிம் இயக்கப்பட்டதும் மோசடி செய்பவர்கள் தங்கள் லீலைகளை தொடங்குகின்றனர்.

எனவே ஒவ்வொரு விஷயத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அனைத்து ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் அறிவுறத்தப்படுகிறது. டிஜிட்டல் யுகத்தில் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்.

Best Mobiles in India

English summary
Beware of this kind of scam! A gang that stole Rs.50 lakh by giving a single missed call

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X