Home
News

பெண்களே உஷார்: இந்த சாதனங்களில் எல்லாம் சீக்ரெட் கேமரா இருக்கு.. இனி கவனம் அதிகம் தேவை..

இந்த நவீனமயமான உலகத்தில், குடும்பமாகவோ அல்லது பெண்கள் தனியாகவோ வெளியிடங்களில் தங்கி பயணிக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் வெளியிடங்களில் பெண்கள் தங்கும் பொழுது இன்னும் கூடுதல் கவனம் தேவை, காரணம் நமக்கே தெரியாமல் நம்மை வேவு பார்க்க சில இடங்களில் சீக்ரெட் ஸ்மார்ட் கேமராக்களை விஷமிகள் இப்போது பயன்படுத்துகின்றனர். நீங்கள் உஷாராக இருக்க, இந்த சீக்ரெட் கேமராக்கள் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். அதே சமயம் நல்லதும் கூட.

நினைத்துப் பார்க்கமுடியாத இடங்களில் சீக்ரெட் கேமராக்கள்

நினைத்துப் பார்க்கமுடியாத இடங்களில் சீக்ரெட் கேமராக்கள்

நீங்கள் நினைத்துப் பார்க்கமுடியாத சாதனங்களில் எல்லாம் இப்போது சீக்ரெட் கேமராக்கள் இருக்கிறது. சர்வைலென்ஸ் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த சிறிய வடிவ துளை கேமராக்கள், இப்பொழுது முற்றிலுமாக வேறு சில தீய நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

விடுதி அல்லது ஹோட்டல் அறையில்

விடுதி அல்லது ஹோட்டல் அறையில்

நல்ல நோக்கத்தில் இதைப் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்துவிட்டது என்பதே உண்மை. அதனால் தான் நாம் இப்போது உஷாராக இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

நீங்கள் விடுதியில் தங்கி இருந்தாலோ அல்லது வெளி பயணத்தின் போது ஏதேனும் ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்தாலோ இனி மிகவும் கவனமாக இருந்துகொள்ளுங்கள்.

பெட்ரூம் மற்றும் பாத்ரூம்களில் சீக்ரெட் கேமரா

பெட்ரூம் மற்றும் பாத்ரூம்களில் சீக்ரெட் கேமரா

முக்கியமாக இந்த சீக்ரெட் கேமராக்கள் பெட்ரூம் மற்றும் பாத்ரூம்களில் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இடங்களில் இனி உங்களின் கண்கள் கழுகு போன்ற கூர்மையான விஷயங்களைக் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் கேமராவின் பின்னணியில் உள்ள கண்களில் சிக்கும் விட்டில் பூச்சிகளாகிவிடுவீர்கள்.

சீக்ரெட் கேமரா  மற்றும் ஸ்மார்ட் சீக்ரெட் கேமரா

சீக்ரெட் கேமரா மற்றும் ஸ்மார்ட் சீக்ரெட் கேமரா

சரி, எந்த வகையில் இப்போது இந்த சீக்ரெட் ஸ்மார்ட் கேமராக்கள் வருகிறது என்று பார்க்கலாம். இப்போது சீக்ரெட் கேமராக்கள் 2 வகையில் வருகிறது ஒன்று சாதனத்தின் மெமரியில் வீடியோக்களை சேமிக்கும் வகை, மற்றொன்று வைஃபை மூலமாக நடப்பதை அப்படியே லைவ் ஸ்ட்ரீமிங் செய்யும் வசதி உடையது. இந்த வகை சீக்ரெட் கேமராக்கள் ஸ்மார்ட் கேமராக்கள் என்று அழைக்கப்படுகிறது.

1. ஸ்பை பென் கேமரா

1. ஸ்பை பென் கேமரா
நீங்கள் தங்கி இருக்கும் முக்கியமான அரை அல்லது படுக்கை அறையில் பேனா வைக்கும் ஸ்டாண்ட் இருந்தாலோ அல்லது சம்பந்தம் இல்லாமல் பெரிய சைசில் பேனா இருந்தாலோ உடனே உஷார் ஆக்கிக்கொள்ளுங்கள். சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் நடப்பது போல் தெரிந்தால், பேனாவை முற்றிலுமாக சோதனை செய்யுங்கள். அப்படியே அறையையும் ஒருமுறை சுற்றி சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

2. ஸ்பை பென் டிரைவ் கேமரா

2. ஸ்பை பென் டிரைவ் கேமரா
இது ஒரு பென் டிரைவ் வடிவ சீக்ரெட் கேமராவாகும், இது முக்கியமாக நீங்கள் தங்கி இருக்கும் அறையின் ஸ்மார்ட் டிவிகளில் அல்லது செட்டாப் பாக்ஸ்களில் பொருத்தப்பட்டிருக்கலாம். ஆகையால் இந்த இடங்களை ஒரு முறை சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். இவற்றில் இருக்கும் கேமராக்கள் ஊசி துளை போன்ற சிறிய துளைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும், உற்று நோக்கினால் மட்டுமே உங்களால் கேமரா இருப்பதைக் கண்டறிய முடியும்.

3. ஸ்பை வாட்ச் கேமரா

3. ஸ்பை வாட்ச் கேமரா
கைகளில் கட்டும் வாட்ச்களிலும் சுவற்றில் மாட்டும் கடிகாரங்களிலும் இப்பொழுது இந்த சீக்ரெட் கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது. சுவற்றில் மாட்டும் கடிகாரங்களில் இந்த கேமராக்கள் கடிகாரத்தின் மைய பகுதி அல்லது ஏதேனும் எங்களுக்கு இடையில் உள்ள புள்ளி கோடுகளில் ஒளிந்திருக்கக் கூடும். உஷாராக இருங்கள்.

4. ஸ்பை அலாரம் கடிகாரம் கேமரா

4. ஸ்பை அலாரம் கடிகாரம் கேமரா
இப்போது இந்த மாதிரியான டிஜிட்டல் அலாரம் கடிகாரங்கள் பல விடுதிகள் மற்றும் ஹோட்டல் அறைகளில் பயன்படுத்தப்படுகிறது. நாம் இதை ஒரு டிஜிட்டல் கடிகாரம் என்று மட்டும் நினைத்துக்கொண்டு கவனிக்காமல் இருந்திருப்போம். ஆனால், இதிலும் கேமராக்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஆகையால் உஷாராக இருங்கள்.

5. ஸ்பை கேமராவுடன் ஸ்பெக்ஸ்

5. ஸ்பை கேமராவுடன் ஸ்பெக்ஸ்
நீங்கள் தங்கி இருக்கும் அறைக்கு பார்சல் டெலிவரி செய்வது போலவோ அல்லது ரூம் சர்வீஸ் செய்வது போன்றோ அறைக்குள் நுழைந்து, இந்த கண்ணாடிகளை மறந்து வைத்துவிட்டுச் சென்றது போல் ஒரு சிறிய நாடகத்தை நடத்தி, உங்களை அவர்களின் வலைக்குள் சிக்க வைப்பார்கள். இதில் உள்ள கேமரா உங்களை கண்காணிக்கும் என்பதை மறக்கவேண்டாம்.

6. துணி மாட்டும் ஹூக்கில் ஸ்பை கேமரா

6. துணி மாட்டும் ஹூக்கில் ஸ்பை கேமரா

6. துணி மாட்டும் ஹூக்கில் ஸ்பை கேமரா
துணி மாட்டும் ஹூக்கில் ஒரு சிறிய துளைக்குப் பின்னால் உங்களைக் கண்காணிக்கும் ஸ்பை கேமரா ஒளிந்துள்ளது. அறையில் யாரும் தான் இல்லையே என்று நீங்கள் நம்பி உங்களின் ஆடைகளை மாற்றலாம், ஆனால், இப்படி எதாவது ஒரு ஹூக் மூலமாக விஷமிகள் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கலாம் என்பதை மறக்கவேண்டாம். உஷாராக இருங்கள். வெளியிடங்களில் ஆடை மாறும் போது மின்விளக்குகளை அனைத்துவிடுவது பாதுகாப்பானது.

7. பட்டன் ஸ்பை கேமரா

7. பட்டன் ஸ்பை கேமரா
சட்டவிரோத நடவடிக்கைகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்படும் இடங்கள் உள்ளன, இந்த ஸ்மார்ட் பட்டன் கேமராக்களை போலீசார், ஊடக வல்லுநர்கள் மற்றும் குற்ற நிருபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இப்போது நாச வேலைகளுக்காக விஷமிகள் மூலம் சில இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு, அந்தரங்க நிகழ்வுகளை இவை படம்பிடிக்கின்றன என்பதனால் கவனமாக இருங்கள்.

முக்கிய எச்சரிக்கை

முக்கிய எச்சரிக்கை
இந்த சாதனங்கள் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் சர்வைலென்ஸ் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இப்போது சட்டவிரோத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த சாதனங்களைச் சட்டவிரோத நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது குற்றமே, ஆகையால் இவற்றை அப்படி தப்பான காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Beware of these built-in secret cameras around you : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X