இந்த 10 விஷயங்கள் உங்கள் போனில் நடந்தால்.. நீங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்..

|

பெகாசஸ் (Pegasus) தாக்குதலைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயனர்களின் பாதுகாப்பு குறித்து பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சமீபத்திய தாக்குதல் மீண்டும் மொபைல் பாதுகாப்பு குறித்த அச்சங்களை முன்னணியில் கொண்டு வந்துள்ளது. சாதாரண நெட்டிசன்கள் பெகாசஸ் போன்ற உளவு கருவிகளுக்கு அஞ்சத் தேவையில்லை என்றாலும் கூட, மற்ற ஹேக்கிங் மற்றும் உளவு மென்பொருள் மற்றும் பயன்பாடுகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்பதனால் இந்த பதிவை உங்களுக்காக வழங்குகிறோம்.

இந்த அறிகுறிகள் எல்லாம் உங்கள் போனில் காணப்படுகிறதா? உஷார் மக்களே.!

இந்த அறிகுறிகள் எல்லாம் உங்கள் போனில் காணப்படுகிறதா? உஷார் மக்களே.!

ஹேக்கர்கள் பயன்படுத்தும் இந்த பயன்பாடுகளில் சில பயன்பாடுகள் உங்கள் தொலைப்பேசியில் உள்ள நிதித் தகவல்களைத் திருட முயற்சிக்கும், இன்னும் சில ஆப்ஸ்கள் புகைப்படத் தொகுப்பு, அழைப்பு தகவல்கள், மெசேஜ்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய தொலைப்பேசியின் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெற முயல்கின்றன என்பதே உண்மை. இது பயனரின் தனிப்பட்ட தகவலைத் திருட முயல்வதனால் பெரிய ஆபத்தாகக் கருதப்படுகிறது.

நீங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை எப்படி கண்டறிவது?

நீங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை எப்படி கண்டறிவது?

இந்த உளவு பயன்பாடுகள் மற்றும் கருவிகள் அவற்றின் இயல்பிலேயே சாதனங்களுக்குள் தங்களை மறைத்துக்கொள்கின்றன என்பதனால் இவற்றை எளிதில் நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், உங்கள் சாதனம் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதா என்பதனை நீங்கள் சில அறிகுறிகளை வைத்துக் கண்டுபிடிக்கலாம். உங்கள் போனை நீங்களே தீவிரமாக உளவு பார்த்தால் மட்டுமே நீங்கள் பதிப்படையப்படுளீர்களா என்பது தெரிய வரும். கீழே வரும் 10 அறிகுறிகள் உங்கள் சாதனத்தில் கண்டறியப்பட்டால் நீங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.

கீழடியில் கிடைத்த 2000 ஆண்டுகள் பழமையான பொக்கிஷம்.. தமிழர்களை வியப்பில் ஆழ்த்திய கலை நுட்பம்..கீழடியில் கிடைத்த 2000 ஆண்டுகள் பழமையான பொக்கிஷம்.. தமிழர்களை வியப்பில் ஆழ்த்திய கலை நுட்பம்..

1. உங்கள் போனின் பேட்டரி ஆயுள் வழக்கத்தை விட வேகமாக குறைகிறதா?

1. உங்கள் போனின் பேட்டரி ஆயுள் வழக்கத்தை விட வேகமாக குறைகிறதா?

உங்கள் சாதனத்தின் பேட்டரி வழக்கத்தை விட வேகமாகக் குறைந்தால், தீம்பொருள் மற்றும் மோசடி பயன்பாடுகள் தீங்கிழைக்கும் குறியீட்டைப் பயன்படுத்துகின்றன என்று பொருள். இவை அதிக சக்தியை எடுத்துக்கொள்ளும். இருப்பினும், நீங்கள் ஹேக் செய்யப்பட்டீர்கள் என்ற முடிவுக்கு வருவதற்கு முன், பின்னணியில் இயங்கும் பயன்பாடுகளின் எண்ணிக்கையைச் சரிபார்க்கவும்.

பின்னணியில் இயங்கும் பேக் கிரௌண்ட் ஆப்ஸ் மீது கவனம் தேவை

பின்னணியில் இயங்கும் பேக் கிரௌண்ட் ஆப்ஸ் மீது கவனம் தேவை

பின்னணியில் இயங்கும் பல பயன்பாடுகளும் பேட்டரி ஆயுளை குறைக்கின்றன என்பதும் உங்கள் போனின் பேட்டரி ஆயுள் வேகமாக குறைய ஒரு காரணமாக இருக்கலாம். எனவே, முதலில் அவற்றை எல்லாம் மூடி, பின்னர் மீண்டும் உங்கள் ஸ்மார்ட்போன் சாதனத்தில் சார்ஜ் எவ்வளவு வேகமாக குறைகிறது என்பதை நீங்கள் கண்காணித்து ஒரு முடிவிற்கு வரலாம்.

சந்திரன் சந்திரன் "தள்ளாட்டம்".. 2030-களில் கடலோரம் இப்படியொரு பிரச்சனை வருமா? நாசா திடுக்கிடும் தகவல்.!

2. நீங்கள் பதிவிறக்கம் செய்யாத ஆப்ஸ்கள் உங்கள் போனில் உள்ளதா?

2. நீங்கள் பதிவிறக்கம் செய்யாத ஆப்ஸ்கள் உங்கள் போனில் உள்ளதா?

உங்கள் ஸ்மார்ட்போனில் உங்களால் அடையாளம் காணப்படாத அல்லது நீங்கள் பதிவிறக்கம் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கும் மொபைல் ஆப்ஸ்களை காண்கிறீர்கள் என்றால், அதில் எதோ ஆபத்து ஒளிந்துள்ளது என்று அர்த்தம். இது ஒரு ஹேக்கர் வேலையாகவோ அல்லது ஸ்பைவேரின் வேலையாகவோ இருக்கலாம் என்பதைக் கவனத்தில்கொள்க.

3. உங்கள் ஸ்மார்ட்போன் மெதுவாக இயங்குகிறதா? அல்லது ஸ்லொவ் ஆகிவிட்டதா?

3. உங்கள் ஸ்மார்ட்போன் மெதுவாக இயங்குகிறதா? அல்லது ஸ்லொவ் ஆகிவிட்டதா?

உங்கள் ஸ்மார்ட்போன் திடீரென்று மெதுவாகிவிட்டது என்று நீங்கள் எண்ணினால், உங்கள் சாதனத்தைச் சோதனை செய்வது கட்டாயம். உங்கள் சாதனம் மந்தமாகச் செயல்படுகிறது, அதிக டேட்டா மற்றும் பேட்டரி சக்தியையும் பயன்படுத்துகிறது என்றால் பின்னணியில் திருட்டுத்தனமாக தீம்பொருள் இயங்கிக்கொண்டு இருக்கலாம்.

பூமிக்கு வந்த ஏலியன்ஸ்: நாசா லைவ் வீடியோவில் சிக்கிய ஆதாரம்- வட்டமடிக்கும் 10 யுஎஃப்ஓ?பூமிக்கு வந்த ஏலியன்ஸ்: நாசா லைவ் வீடியோவில் சிக்கிய ஆதாரம்- வட்டமடிக்கும் 10 யுஎஃப்ஓ?

4. மொபைல் டேட்டா பயன்பாட்டில் அதிக மாற்றம் இருக்கிறதா?

4. மொபைல் டேட்டா பயன்பாட்டில் அதிக மாற்றம் இருக்கிறதா?

உங்கள் டேட்டா பயன்பாடு திடீரென்று அதிகரித்துள்ளது, இது இயல்பை விட அதிகமாக உள்ளது என்றால் தீங்கிழைக்கும் பயன்பாடுகள் அல்லது மென்பொருள் உங்கள் சாதனத்தில் மறைமுகமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஸ்பைவேர்கள் பயனர்களின் செயல்பாடுகள் என்ன என்பதைக் கண்காணிக்கும்போது உங்கள் மொபைல் டேட்டா பின்னணியில் இருமடங்காகப் பயன்படுத்துகின்றது.

5. உங்கள் ஸ்மார்ட்போன் திடீரென வினோதமாகச் செயல்படுகிறதா?

5. உங்கள் ஸ்மார்ட்போன் திடீரென வினோதமாகச் செயல்படுகிறதா?

உங்கள் ஸ்மார்ட்போன் வித்தியாசமாகச் செயல்படுகிறது, பயன்பாடுகள் எதிர்பாராத விதமாகச் செயலிழக்கின்றன அல்லது திடீரென கிராஷ் ஆகிறது என்றால் எதோ பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது என்று பொருள். பிரௌஸ் செய்யும் போது பல தளங்கள் வழக்கமாக இருப்பதை விட வித்தியாசமாகத் தெரிகின்றன என்றால் நீங்கள் கவனமாக இருப்பது அவசியம்.

திடீரென வாட்ஸ்அப் அறிமுகம் செய்த புதிய அம்சம்: இனி உங்கள் விருப்பம் தான் முக்கியம்.! அப்படியென்ன புதிய அம்சம்?திடீரென வாட்ஸ்அப் அறிமுகம் செய்த புதிய அம்சம்: இனி உங்கள் விருப்பம் தான் முக்கியம்.! அப்படியென்ன புதிய அம்சம்?

6. உங்கள் ஸ்மார்ட்போனில் எல்லா இடங்களிலும் வினோதமான பாப்-அப் மெசேஜ்கள் தோன்றுகிறதா?

6. உங்கள் ஸ்மார்ட்போனில் எல்லா இடங்களிலும் வினோதமான பாப்-அப் மெசேஜ்கள் தோன்றுகிறதா?

உங்கள் ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவில் ஏராளமான பாப்-அப் செய்திகள் தோன்றுவதை நீங்கள் கவனிக்கிறீர்கள், இது ஆட்வேர் (adware) காரணமாக இருக்கலாம், இது உங்கள் சாதனத்தை விளம்பரங்களால் மூழ்கடிக்கும் தீங்கிழைக்கும் மென்பொருளின் ஒரு வகை என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்.

7. உங்கள் கேலரியில் உங்களுக்கு தெரியாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருக்கிறதா?

7. உங்கள் கேலரியில் உங்களுக்கு தெரியாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருக்கிறதா?

உங்கள் புகைப்பட கேலரியில் நீங்கள் கிளிக் செய்யாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் பார்த்தால் உஷாராக இருங்கள். உங்கள் கேமராவின் மீது யாராவது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறியாக இது இருப்பதால், பாதுகாப்பாக இருங்கள்.

Flipkart Big Saving Days Sale:ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகளை குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பு.!Flipkart Big Saving Days Sale:ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகளை குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பு.!

8. ஃபிளாஷ் லைட் தானாக ஆன் ஆகிறதா?

8. ஃபிளாஷ் லைட் தானாக ஆன் ஆகிறதா?

உங்கள் ஸ்மார்ட்போனை நீங்கள் பயன்படுத்தாதபோது கூட ஃபிளாஷ் லைட் தானாகச் செயல்படுகிறது என்றால் நீங்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்று அர்த்தம். இந்த விளைவிற்கான பின்னணியில் யாரோ உங்கள் சாதனத்தைத் தொலைவிலிருந்து கட்டுப்படுத்துகிறார்கள் என்பதனால் இது நிகழலாம்.

9. உங்கள் ஸ்மார்ட்போன் வழக்கத்தை விட அதிகமாகச் சூடாகிறதா?

9. உங்கள் ஸ்மார்ட்போன் வழக்கத்தை விட அதிகமாகச் சூடாகிறதா?

பல மணிநேரங்கள் கேமிங் செய்வது, மற்ற பயன்பாடுகளை இயக்குவது போன்ற நீண்ட கால பயன்பாட்டில் சாதனங்கள் வெப்பமடையும். இருப்பினும், நீங்கள் பயன்படுத்தாதபோதும் உங்கள் ஸ்மார்ட்போன் மிகவும் சூடாக இருக்கிறது என்றால், ஹேக்கர்கள் பணியில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

BSNL: தினமும் 5ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் கால்.. 100 SMS கிடைக்கும் ஒரே திட்டம்.. விலையோ இவ்வளவு தான்..BSNL: தினமும் 5ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் கால்.. 100 SMS கிடைக்கும் ஒரே திட்டம்.. விலையோ இவ்வளவு தான்..

10. நீங்கள் டயல் செய்யாத அழைப்புகள் அல்லது டைப் செய்யாத மெசேஜ்களை காண்கிறீர்களா?

10. நீங்கள் டயல் செய்யாத அழைப்புகள் அல்லது டைப் செய்யாத மெசேஜ்களை காண்கிறீர்களா?

உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் டயல் செய்யாத அழைப்புகளின் எண்கள் மற்றும் நீங்கள் டைப் செய்து அனுப்பாத மெசேஜ்கள் போன்ற சில நடவடிக்கைகளைக் காண்கிறீர்கள் என்றால் நீங்கள் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளீர்கள் என்பது பொருள். இப்படியான நிகழ்வுகள் ஹேக் செய்யப்பட்டதற்கான மற்றொரு சாத்தியமான அறிகுறியாகும்.

எப்படி பாதிக்கப்பட்ட ஸ்மார்ட்போனை மீட்டெடுத்து பயன்படுத்துவது?

எப்படி பாதிக்கப்பட்ட ஸ்மார்ட்போனை மீட்டெடுத்து பயன்படுத்துவது?

இந்த 10 விஷயங்களில் சிலவற்றை உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் கவனித்துவிடீர்கள் என்றால் உடனே உஷாராகிக்கொள்ளுங்கள். உங்கள் சாதனத்தை முழுமையாகச் சோதனை செய்து பாருங்கள். மொபைல் ஆன்டி-வைரஸ் சாப்ட்வெர் போன்ற ஆப்ஸ்களை பயன்படுத்துங்கள். முக்கியமான தகவல்கள் அனைத்தையும் பேக்அப் செய்து போனை ஃபார்மட் செய்தும் சிலர் நிம்மதியாகப் பயன்படுத்தலாம். இந்த நேரத்தில் கிளவுட் ஸ்டோரேஜ் செய்யாமல் OTG பென்டிரைவ் மூலமாக பேக்அப் எடுப்பது சிறந்தது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Beware Of These 10 Signs This Shows That Your Phone Has Spyware Or Is Hacked : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X