Home
News

உஷார் மக்களே.. ஃபிக்சட் டெபாசிட்டில் இருந்த ரூ.4 லட்சம் திருட்டு.. அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி..

கோழிக்கோடு வண்டிப்பேட்டையைச் சேர்ந்த எம். முகமது பஷீர் என்ற 78 வயது முதியவர் IRCTC இணையதளத்தைப் பயன்படுத்தி தனது ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய முயன்றிருக்கிறார். ஆனால், தவறுதலாக மோசடி வலையில் சிக்கி ரூ.4 லட்சத்தை இழந்திருக்கிறார்.

இந்த மோசடியில் போலி இணையதளம் மற்றும் ரயில்வே ஊழியர் போல் பாவித்த ஒருவரிடம் முகமது 4 லட்சத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இணைய வழியில் ரயில் டிக்கெட் புக்கிங் (Online train ticket booking) செய்யும் மக்கள் இந்த மோசடி பற்றி அறிந்துகொள்வது பாதுகாப்பானது. மாதூர்பூமி செய்தியின் படி, பஷீர் தனது டிக்கெட்டை ரத்து செய்ய முயன்றபோது, ஐஆர்சிடிசி (IRCTC) போன்ற ஒரு போலி இணையதளத்தில் சிக்கிக்கொண்டார்.

உஷார் மக்களே.. ஃபிக்சட் டெபாசிட்டில் இருந்த ரூ.4 லட்சம் திருட்டு..

அந்த போலி இணையதளம் மூலம் டிக்கெட்டை கேன்சல் (cancel train ticket) செய்ய முயன்ற போது, ​​ரயில்வே ஊழியர் எனக் கூறி ஒருவர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். இந்த நபர் ஆங்கிலம் (English) மற்றும் இந்தியில் (Hinidi) பேசி பஷீருக்கு சில கேன்சலேஷன் அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். அவர் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகு, முகமது அவர்கள் அனுப்பிய லிங்க்-ஐ (Link) கிளிக் செய்திருக்கிறார்.

பிறகு, அவரது டிஸ்பிளேவில் (Display) ஒரு நீல சின்னம் தோன்றியது, அதனை தொடர்ந்து முகமதின் சாதனம் மோசடி செய்பவரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததாக கூறப்படுகிறது. மேலும், பஷீர் தனது வங்கி கணக்கு (Banking account) விவரங்களையும், ஏடிஎம் கார்டு (ATM card) எண்ணையும் கொடுத்துள்ளார். பஷீரின் திரையில் நீல நிற சின்னத்தின் தோற்றம் அவரது சாதனத்தில் மால்வேர் நிறுவப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.

பாதிக்கப்பட்டவரின் சாதனத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெற ஸ்கேமர்கள் பொதுவாக பல்வேறு வகையான மால்வேர்களை பயன்படுத்துகின்றனர். இது போன்ற ஒரு வகை ரிமோட் அக்சஸ் ட்ரோஜான்கள் (RATs) ஆகும். இது தாக்குபவர்கள் பாதிக்கப்பட்டவரின் அமைப்பை தொலைவிலிருந்து கையாள அனுமதிக்கிறது. பஷீரின் சாதனத்திற்கான முழுமையான அணுகலைப் பெற, மோசடி செய்பவர் RAT ஐப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அல்லது இது கீலாக்கர் வகை மால்வேர் (Keylocker type malware) ஆக இருந்திருக்கலாம். இது பாதிக்கப்பட்டவரின் சாதனத்தில் செய்யப்பட்ட ஒவ்வொரு கீபோர்ட் அழுத்தத்தையும் பதிவு செய்கிறது. இதன் அர்த்தம், பஸ்வோர்ட் (Password) மற்றும் வங்கிச் சான்றுகள் (Banking Credentials) போன்ற முக்கியமான தகவல்களை இது பிரித்தெடுக்கிறது. கூடுதலாக, மோசடி செய்பவர் (Hacker) ஸ்பைவேரைப் (spyware) பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

உஷார் மக்களே.. ஃபிக்சட் டெபாசிட்டில் இருந்த ரூ.4 லட்சம் திருட்டு..

இது பாதிக்கப்பட்டவரின் செயல்பாடுகளைத் திருட்டுத்தனமாக கண்காணிக்கவும், அவர்களுக்குத் தெரியாமல் தரவைச் சேகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு வகையான தீம்பொருளாகும் (Malware). முகமதின் சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக செய்தி வந்தபோதுதான் இந்த மோசடி பற்றி அவருக்கே தெரியவந்துள்ளது. அவசரமாக, அவர் காவல்துறையின் உதவியை நாடியுள்ளார்.

ஃபிக்சட் டெபாசிட் கணக்கில் (Fixed deposit account) இருந்த ரூ.4 லட்சமும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மோசடி செய்பவர்கள் மூன்று வெவ்வேறு தொலைபேசி எண்களைப் (Mobile number) பயன்படுத்தி பஷீரை பலமுறை தொடர்பு கொண்டுள்ளனர். முதல் தொகை எடுக்கப்பட்ட பிறகு அவர் வங்கியைத் தொடர்பு கொள்ள முயன்றார், ஆனால் மோசடி செய்தவர்கள் அதைச் செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.

'ரெஸ்ட் டெஸ்க்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து மோசடி செய்பவர்கள் பஷீரின் போனை அணுக அனுமதித்தது காவல்துறையின் சைபர் செல் விசாரணையில் தெரியவந்தது. கொல்கத்தாவில் இருந்து ரூ.4,05,919 டெபிட் செய்யப்பட்ட பணம் நான்கு தனித்தனியாக பணம் எடுக்கப்பட்டது. பஷீரை தொடர்பு கொள்ள பயன்படுத்திய தொலைபேசி எண்கள் பெங்கால் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்களுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Beware Of Online Scamming Through Fake IRCTC Website Man Loses 4 Lakh Fixed Deposit Amount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X