உஷார் மக்களே.! சார்ஜ் போட்டால் போனில் உள்ள பணம் காலி.. புது மோசடியால் பதட்டம்.. நீங்க இந்த தப்ப செய்யாதீங்க..
ஸ்மார்ட்போன் பயனர்களின் கவனத்திற்கு, உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் போது இனி கவனமாக இருக்க வேண்டும். அதுவும், அவசரத்திற்கு பாவம் இல்லை என்று எண்ணி பொது இடங்களில் உங்கள் போனை சார்ஜ் செய்யும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதை உடனே மாற்றிவிடுங்கள்.
காரணம், இப்போது சார்ஜிங் போர்ட் (charging port) மூலமாக ஹேக்கர்கள் உங்கள் ஸ்மார்ட்போனை (smartphone) அணுக முயல்கிறார்கள். உங்கள் ஸ்மார்ட்போனை அணுக முயல்வது மட்டுமின்றி, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள முக்கியமான தகவல்களை சில நிமிடங்களில் திருடி விடுகிறார்கள். அல்லது உங்கள் போனில் வைரஸை (mobile virus) நிறுவி, உங்களிடம் பணம் கேட்டு மிரட்ட துவங்கிவிடும் பதட்டம் தற்போது உருவாகியுள்ளது.

ஹேக்கர்கள் (hackers) எப்போதும் உங்கள் ஸ்மார்ட்போன்களுக்குள் நுழைவதற்கான பல வழிகளை தொடர்ந்து கண்டுபிடித்து வருகிறார்கள். அப்படி, சமீபத்தில் ஹேக்கர்களால் உருவாக்கப்பட்ட புது ஹேக்கிங் முறை தான் "ஜூஸ் ஜாக்கிங்" (Juice Jacking) என்பதாகும். உங்கள் போனில் சார்ஜ் இல்லாமல் இருக்கும் நேரத்தில், அதை சார்ஜ் செய்ய நீங்கள் பொது சார்ஜிங் போர்டை (public charging port) பயன்படுத்தும் போது, இந்த ஹேக்கிங் நடத்தப்படுகிறது.
போனிற்கு தேவையான சார்ஜிங் ஜூஸை ஏற்ற முயலும் போது, இந்த ஹேக்கிங் நடத்தப்படுவதனால் இதை 'ஜூஸ் ஜாக்கிங்' என்று அழைக்கிறார்கள். இது பல நாடுகளில் இப்போது பொதுவாக நடக்கும் ஒரு ஹேக்கிங் முறையாக இருக்கிறது. பல நபர்களால் பொதுவில் பயன்படுத்தப்படும் சார்ஜிங் போர்ட் சேவை இப்போது ஆபத்தான அபாய போர்ட்களாக (dangerous public charging ports) மாறிவிட்டது.
இந்த ஜூஸ் ஜாகிங் பற்றி மக்களுக்கு பெரியளவில் விழிப்புராணவு இல்லை என்பதனால், நிறைய மக்கள் இந்த ஜூஸ் ஜாக்கிங்கில் சிக்கி சின்னாபின்னம் ஆகிறார்கள். பயண நேரத்தில் பொதுமக்களுக்கு பெரிதும் உதவும் என்ற நோக்கத்தில், இந்த பப்ளிக் சார்ஜிங் போர்ட்கள் (free public charging ports) கொண்டுவரப்பட்டன. ஆனால், இப்போது இதை வைத்து மக்களின் மொபைலில் மால்வேர் (malware) பாதிப்பை ஏற்படுத்த பார்க்கிறார்கள் ஹேக்கர்கள்.

முடிந்தவரை பொது சார்ஜிங் போர்டை நீங்கள் தவிர்ப்பது நல்லது. சரி, எப்படி இந்த ஜூஸ் ஜாகிங் மூலம் பயனரின் தகவல்களை ஹேக்கர்கள் திருடுகிறார்கள்? எப்படி மால்வேர்களை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்கிறார்கள்? எப்படி உங்கள் போனில் உள்ள பணத்தை திருடுகிறார்கள்? என்று தெரிந்துகொள்ளலாமா? வாங்க பார்க்கலாம்,
முதலில் ஹேக்கர்கள் பொதுவெளியில் உள்ள சார்ஜிங் போர்ட்களை பாதிப்படைய செய்கிறார்கள். அதில் சில மாற்றங்களை மேற்கொண்டு, அந்த பொது சார்ஜிங் போர்ட்களை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள். பாதிக்கப்பட்ட சார்ஜிங் போர்டில் மக்கள் அவர்களின் போன்களை சார்ஜ் செய்ய செருக்கும் போது, ஹேக்கர்கள் மக்களின் போனை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறார்கள்.
இது ஏன் இவ்வளவு சுலபமாக நடக்கிறதென்றால், நமது போன்களின் இருக்கும் சார்ஜிங் போர்ட் தான் டேட்டா எக்ஸ்சேஞ் போர்ட் (data exchange port) ஆகவும் செயல்படுகிறது. மொபைல் தகவல்களை நாம், லேப்டாப் (laptop) அல்லது மற்ற ஸ்டோரேஜ் டிவைஸ்களுக்கு (storage device) மாற்றம் செய்ய சார்ஜிங் போர்ட் வழியாக தான் வயரை இணைத்து டேட்டா பரிமாற்றத்தை (data exchange) மேற்கொள்கிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த வசதியை, இப்போது ஹேக்கர்கள் அவர்களுக்கு சாதகமாக மாற்றிவிட்டனர். இப்படி பொது இடங்களில் உள்ள சார்ஜிங் போர்ட் மூலம் உங்கள் போனிற்குள் நுழைந்து, அதில் உள்ள தகவல்களை இவர்கள் எளிமையாக அணுகி, அவற்றில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வங்கி விபரங்களை (banking details) திருடி, அந்த வங்கி கணக்கில் இருக்கும் பணத்தையும் (cash) திருடிவிடுகிறார்கள்.
இதேபோல், உங்கள் போனில் வங்கி விபரங்கள் எதுவும் இல்லை என்றால், உங்கள் போனில் உள்ள போட்டோஸ் (photos) மற்றும் வீடியோக்களை (videos) திருடி உங்களை பிளாக்மெய்யில் செய்ய முயல்கிறார்கள். இது தவிர, உங்கள் போனில் ரேன்சம்வேர் (Ransomware) போன்ற வைரஸ்களை இன்ஸ்டால் செய்து, உங்கள் போனை முடக்குகிறார்கள். அவர்கள் கேட்கும் பணத்தை நீங்கள் கொடுத்த பிறகு தான் உங்கள் போனை ஓபன் செய்ய அனுமதிக்கிறார்கள் என்பது உண்மை.
இத்தகைய சிக்கலில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், கட்டாயமாக நீங்கள் ரயில் நிலையம் (railway station), ஷாப்பிங் மால் (shopping mals), தியேட்டர் (theater) மற்றும் பேருந்து நிலையங்களில் (bus stand) உள்ள பொது சார்ஜிங் போர்ட்களில் உங்கள் போனை சார்ஜ் செய்யாமல் இருங்கள்.


Click it and Unblock the Notifications








