தில்லாலங்கடி வேலை.. மொபைலுக்கு வரும் டிராஃபிக் அபராத சலான்.. போலீஸ் கொடுத்த எச்சரிக்கை..
சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக போலி இ-சலான் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். இந்த போலி இ-சலான் மோசடியில் சிக்கும் நபர்கள் அவர்களின் கணக்கில் இருக்கும் பணத்தை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்த தகவல் நேரடியாக காவல்துறையிடம் இருந்து வெளிவந்துள்ளதனால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மோசடி செய்பவர்கள் "இ-சலான் தொடர்பான (traffic challan) இணைப்புகளை அனுப்புவதன் மூலம்" அரசாங்க வலைத்தளங்களின் சரியான நகல்களை உருவாக்குவதன் மூலம் குடிமக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற புதிய விஷயம் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மோசடி முதலில் ஃபரிதாபாத் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மின்-சலான் (traffic e-challan) என்ற பெயரில் பெறும் எந்த மெசேஜ் லிங்க்-களை (fake message links) பொதுமக்கள் கிளிக் செய்யும் போது, அவர்களுடைய போனுடன் லிங்க் செய்யப்பட்டுள்ள வங்கி கணக்குகள் அனைத்தையும் மோசடிக்காரர்கள் சூறையாடுகிறார்கள். இத்தகைய போலி இ-சலான் லிங்க் (fake e-challan link) உங்களுக்கு போனுக்கு வந்தால் அவற்றை வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த போலி இணைப்புகளை ஒரே கிளிக்கில் மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கிக் கணக்கை ஹேக் செய்ய அனுமதிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ட்ராஃபிக் சலானுக்கான இணைப்பை (traffic challan link) நீங்கள் பெற்றால், அந்த இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் வண்டி எண் (Vehicle number), அல்லது பொதுவான டிராபிக் போலீஸ் அபராதம் (traffic police fine) என்று உங்கள் மொபைல் எண்ணிற்கு மெசேஜ் வந்தால் கவனமாக இருப்பது முக்கியம்.
இந்த மோசடியில் இருந்து தப்பிக்க, அசல் இ-சலானின் அசல் இணைப்பு எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதேபோல், போலியான இணைப்பிற்கும் அசல் இணைப்பிற்கு (original traffic challan link) என்ன வேறுபாடுகள் இருக்கிறது என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். இந்த இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் எப்படி இருக்கும் என்று இப்போது பார்க்கலாம்.
முதலில் இப்போது வேகமாக பரவி வரும் போலி இ-சலான் இல் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். உங்கள் போனிற்கு வரும் மெசேஜ் இல் "உங்களுக்கு சலான் வழங்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் அபராதத்தைச் செலுத்தலாம்" என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த விரிவான தகவல் இல்லாத மெசேஜ்ஜை பதட்டத்தில் கிளிக் செய்துவிடுகிறார்கள். அது மோசடியில் மிருந்துவிடுகிறது.

அசல் மற்றும் போலி இ-சலான் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை காவல்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அசல் சலான் செய்தியில் "இன்ஜின் எண் (Engine number), வாகன அடையாள எண் (VIN) மற்றும் உங்கள் வாகனம் பற்றிய பிற தகவல்கள்" இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, அதிகாரப்பூர்வ சலான் மெசேஜ் ஆனது எப்போதும் அரசாங்க இணைப்புடன் (traffic challan with government link) முடிவடையும் எனபதை நினைவில் கொள்ளுங்கள்.
இது https://echallan.parivahan. gov.in/ _ என்ற வெப் அட்ரஸ்ஸை குறிப்பிடும். இருப்பினும், போலிச் இ-சலான் மெசேஜ்கள் .in என்ற இணைப்புடன் முடிக்கப்படுகின்றன. இறுதியில் gov.in. என்ற அசல் வெப் அட்ரஸிற்கு பதிலாக போலியான இ-சலான் மெசேஜ்கள் https://echallan.parivahan.in/ என்பது போன்ற இணைப்புகளுடன் காட்சியளிக்கின்றன. உங்கள் மெசேஜ்ஜில் gov.in என்று குறிப்பிட்டால், அது அசல் இ-சலான். அதுவே வெறும் .in என்று குறிப்பிடப்பட்டால் அது போலி இ-சலான் (fake e-challan) என்று பொருள்.
எந்தவொரு வாகன உரிமையாளரும் போலி இணைப்பைக் கிளிக் செய்தவுடன், வங்கிக் கணக்கு எண் மற்றும் அட்டை விவரங்களை உள்ளிட்டவுடன், மோசடி செய்பவர்கள் முதலில் நபரின் தொலைபேசியை ஹேக் செய்து, சிறிது நேரம் கழித்து கணக்கில் உள்ள முழு இருப்பையும் திருடுகிறார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இத்தகைய மோசடிக்கு நீங்கள் ஆளானால் தேசிய சைபர் புகார் போர்டல் எண் 1930 ஐ அழைத்து, www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யவும் .


Click it and Unblock the Notifications








