என்டிஏ, என்ஐஏ பெயரில் வாட்ஸ்ஆப் மால்வேர் லின்க்ஸ், கிளிக் செய்ய வேண்டாம்.!

வாட்ஸ்ஆப்பில் என்டிஏ, என்ஐஏ பெயரில் தீம்பொருள் மால்வேர் லின்க்குகள் பரவி வருகிறது.

|

பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை திருடும் நோக்கத்தில், "NDA-ranked-8th-toughest-College-in-the-world-to-get-into.xls" மற்றும் "NIA-selection-order-.xls" ஆகிய இரண்டு இணைப்புகள் வாட்ஸ்ஆப்பில் பரவிய வண்ணம் உள்ளது. பாதுகாப்பு முகவர் இந்த மால்வேரை (தீம்பொருள்) கண்டுபிடித்த பிறகு தேசிய NDA மற்றும் NIA ஆகிய நிறுவங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ்ஆப்பில் மால்வேர் லின்க்ஸ், கிளிக் செய்ய வேண்டாம்.!

நாட்டின் இராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் கடந்த 2016, டிசம்பர் 30-ஆம் தேதியன்று இரண்டு பயங்கரவாத வைரஸ் கோப்பு வாட்ஸ்ஆப் பயன்பாடு வழியாக பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை (குறிப்பாக சீருடையில் உள்ள ஆண்களை குறி வைத்து) பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தது.

நாட்டில் இந்த இரு அமைப்புகளும் மிகவும் பிரபலம் மற்றும் வெளிநாடுகளில் இந்த இரு அமைப்புகள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளும் ஆர்வ மிகுதி உள்ளதால் விரைவில் இந்த இணைப்புகள் கிளிக் செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம். மறுபக்கம் இந்த வாட்ஸ்ஆப்இணைப்புகள் பாதுகாப்பு, துணை இராணுவம் மற்றும் போலீஸ் படைகளில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களை இலக்காக கொண்டிருக்க முடியும் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

எந்தவொரு தொலைபேசியின் ஐஎம்இஐ நம்பரையும் கண்டுப்பிடிப்பது எப்படி என்ற தமிழ் கிஸ்பாட் டூடோரியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Beware of malware links bearing name of NDA, NIA being circulated on WhatsApp. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X