iPhone-ஐ தாக்கும் ஆண்ட்ராய்டு வைரஸ்.. வங்கி பணம் அபேஸ்.. தப்பிக்க இதான் ஒரே வழி.. பீதியில் ஐபோன் பயனர்கள்..
என்னங்க இது? இப்படி கூடவா நடக்கும்? சொல்றது எதுவுமே நம்புற மாதிரியே இல்லையே என்று சந்தேகிக்கும் வகையில், ஒரு புதிய வைரஸ் தாக்குதல் உலகளவில் உள்ள ஸ்மார்ட்போன் சாதனங்களை தாக்கி வருகிறது. இது பயனர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை சூறையாடுகிறது.
ட்ரோஜன் வைரஸ்: இதுவரை நடக்காத ஒரு நிகழ்வாக இப்போது டெக் உலகமே (tech world) அதிர்ச்சியில் ஸ்தம்பித்துள்ளது. தொழில்நுட்ப உலகில் இதுவரை யாரும் கண்டிராத நிகழ்வாக முதல் முறையாக, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை (android smartphones) தாக்கி தகவல்களை திருடி வந்த ட்ரோஜன் வைரஸ் (trojan virus) இப்போது ஆண்ட்ராய்டில் இருந்து, iOS இயங்குதளத்தில் இயங்கும் ஐபோன் சாதனங்களையும் பாதிப்படைய செய்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்: இந்த ஆபத்தான வைரஸ் முதலில் ஆண்ட்ராய்டு (android) தளத்தில் தோன்றி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை தாக்கி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இப்போதோ, இந்த புதிய ஆக்ரோஷமான வைரஸ் ஐபோன் (iPhone) பயனர்களையும் தாக்க துவங்கியுள்ளது. இது பயனர்களை தகவலை திருடி இணையத்தில் லீக் (leak) செய்கிறது என்று கூறப்படுகிறது. அதேபோல், சில பயனர்களின் வங்கி கணக்குக்களை (bank account) கூட திருடி சூறையாடுகிறது என்று கூறப்படுகிறது.
ஐபோனை தாக்கும் வைரஸ்: இது ஐபோன் பயனர்களிடயே புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வைரஸ் (virus) தாக்குவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், ஐபோனை ஒரு ஆண்ட்ராய்டு வைரஸ் தாக்குதல் செய்வது இதுவே முதல் முறை என்பதனால், ஆப்பிள் (Apple) நிறுவனம் குழப்பத்தில் மண்டையை பிய்த்துக்கொண்டு திரிகிறது. இந்த புதிய வைரஸ் அச்சுறுத்தல் Golddigger Android Trojan வைரஸ் என்ற பிரிவை சேர்ந்தது.
வைரஸிடம் இருந்து தப்பிக்க வழி: இது GoldPickaxe வைரஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வைரஸ் இப்போது iOS மற்றும் பிற அனைத்து ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கும் ஒரு ஆபத்தான அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு சில அறிவுரைகளை நிறுவனங்கள் வழங்கியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வங்கி கணக்கில் பணம் அபேஸ்: முதலில் இந்த வைரஸ் உங்கள் பேஸ் அன்லாக் (face unlock) அம்சத்தில் ஊடுருவி, உங்கள் உங்கள் முக அங்கீகாரத் தகவலை சேகரிக்கிறது. அதன் உதவியுடன் ஐபோன் சாதனங்களில் உள்ள வங்கிக் கணக்குகளை இந்த வைரஸ் அணுகி பணத்தை சில நொடிகளில் திருடுவதாக Group-IB ஆராய்ச்சி குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த GoldPickaxe.iOS வைரஸ் பல நாடுகளில் இப்போது வேகமாக பரவி வருகிறது.
வேகமாக பரவும் மொபைல் வைரஸ்: இந்த புதிய வைரஸ் தற்போது வியட்நாம் (Vietnam) மற்றும் தாய்லாந்தில் (Thailand) அதிகமாக பரவி வருகிறது. இது எதிர்காலத்தில் அமெரிக்கா (America) உட்பட மற்ற பகுதிகளுக்கும் பரவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக அதிக ஐபோன் சாதனங்களை கொண்ட இந்தியாவிலும் (India) பெரியளவு தாக்கத்தை இந்த வைரஸ் ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐபோன் பயனர்கள் அனைவரும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
எப்படி தாக்குதல் நடக்குகிறது? உங்களிடம் ஆண்ட்ராய்டு (Android) அல்லது ஆப்பிள் iOS இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன் சாதனங்கள் இருந்தால், தெரியாத சர்வர் (server) மற்றும் தெரியாத மூலத்திலிருந்து எந்தவொரு ஆப்ஸ் (apps) மற்றும் பைல்களை (files) இன்ஸ்டால் (install) செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டுமென்ற தகவல் இதோ.
இதை மட்டும் செய்யாதீர்கள்: மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களை (third party apps) முழுமையாக நிராகரிக்கவும்.
ஆண்ட்ராய்டு பயனர்கள் பிளேஸ்டோர் (Playstore) இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
ஐபோன் பயனர்கள் ஆப்ஸ் ஸ்டோர் (App Store) இல் இருந்து டவுன்லோடு (download) செய்யலாம்.
எப்போதும் ஒரு புதிய ஆப்ஸை டவுன்லோட் (download) செய்யும் முன் ரெவியூஸை படிக்கவும்.
இது கட்டாயம் செய்யணும்: ஏதேனும் சந்தேகத்திற்குரிய ரெவியூவை கண்டால் அந்த ஆப்ஸை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
ஒவ்வொரு முறையும் ஆப்ஸ் கேட்கும் அனுமதிகளை நன்கு அறிந்த பிறகு வழங்கவும்.
உங்கள் போனில் ஆன்டி-வைரஸ்-சாப்ட்வேர் (anti-virus software) வைத்திருப்பது நல்லது.
உங்கள் செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்டை எப்போதும் நிராகரிக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications