Just In
- 4 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 4 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 4 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 5 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- News
ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டது அரசியல் பின் வாங்கலா? முதல்வர் மு.க ஸ்டாலின் பதில்
- Sports
உலக கிரிக்கெட் வரலாற்றில் புது முயற்சி.. பயிற்சியாளர் விசயத்தில் பாக். ஏற்பாடு.. ஆப்ரிடி எதிர்ப்பு
- Finance
அதானி குழுமத்திற்கு ஜாக்பாட் நியூஸ்.. அபுதாபி நிறுவனம் ரூ.3200 கோடி முதலீடு செய்ய திட்டம் !
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
Digital World: காசேதான் கடவுளடா! ஒரு லிங்க் வந்துச்சு அதை தொட்டேன்.. ஆண்டியான அரசன் கதை.!
மும்பை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் தனக்கு வந்த ஒரு லிங்க்கை கிளிக் செய்ததன் மூலம் 35 லட்சத்திற்கும் மேல் இழந்திருக்கிறார். என்ன நடந்தது, எப்படி நடந்தது என்ற தகவலை சற்று கவனமாக பார்க்கலாம்.
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கை ஏறத்தாழ வெற்றி அடைந்து விட்டது என்றே கூறலாம். Digital india (2022) இல் வாழ்கிறோம். ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆசை வார்த்தைகளில் சிக்கி வாழ்க்கை இழந்தவர்கள் ஏராளம். அதன்படியான நபர் ஒருவர் குறித்து தான் பார்க்கப்போகிறோம்.

சமூகவலைதளங்களில் பல்வேறு தகவல்கள் கற்றுத்தெரிந்து கொள்கிறோம் என்பது தவிர்க்க முடியாத உண்மை. ஆனால் இது மட்டும் தான் சமூகவலைதளங்களில் நடக்கிறதா என்றால் அதுதான் இல்லை. ஏணைய மோசடி தகவல்கள் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அன்னப்பறவை போல் வாழ வேண்டிய காலம் எது. நமக்கு தேவையான நல்லவை மட்டும் எடுத்துக் கொள்ளும் திறன் அனைவருக்கும் இருக்க வேண்டியது அவசியம்.
பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் ஒருசிலர் ஆன்லைனின் மோசடி வலைகளில் சிக்கிக் கொள்கின்றனர். யார் ஏமாற்றுகிறார்கள், என்னென்ன நடந்தது என்று தெரியாமல் ஏமாறுபவர்கள் இங்கு ஏராளம். அதன்படி தற்போது ஒருவர் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்.
இதுகுறித்து பதிவான புகாரில் குறிப்பிட்டுள்ள தகவின்படி, மர்ம நபர் ஒருவர் நல்ல கமிஷன் சம்பாதிக்க உதவுவதாகக் கூறி ரூ.37.80 லட்சம் மோசடி செய்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட நபருக்கு நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து டெலிகிராம் மூலம் ஒரு செய்தி வந்திருக்கிறது. இதுகுறித்த The Free Press Journal இல் வெளியான தகவலை பார்க்கலாம், பணம் சம்பாதிப்பதற்கான ஆன்லைன் வழிமுறைகளை நபர் ஒருவர் பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். ஆன்லைன் கமிஷன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என ஆசை வார்த்தைகளை தெரிவித்துள்ளார்.
இணையதளத்தில் சில பணிகளை செய்து முடித்தால் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேரும் என அந்த நபர் கூறி இருக்கிறார். ரேட்டிங் அடிப்படையிலான பணி என இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆன்லைன் வேலை மூலம் நீங்கள் ஈட்டும் பணம் நேரடியாக இணையதளத்தில் உள்ள இ-வாலட்டுக்கு வரவு வைக்கப்படும் என மறுபுறம் உள்ள நபர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் ஆன்லைன் மூலம் கொடுக்கப்பட்ட பணிகளை செய்யத் தொடங்கி இருக்கிறார். நவம்பர் 28 ஆம் தேதி முதல் அந்த நபர் தனது ஆன்லைன் வேலையைத் தொடங்கி உள்ளார். வெவ்வேறு குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு 5 ஸ்டார்கள் முழுமையாக கொடுத்து பாராட்டும் படியான கருத்துகளை பதிவிடும்படி அந்த நபரிடம் கேட்கப்பட்டிருக்கிறது. அவரும் அதை செய்திருக்கிறார். இந்த பணியை தொடர்ந்து செய்வதற்கு ப்ரீமியம் கட்டணம் செலுத்த வேண்டும் என அந்த நபரிடம் கேட்கப்பட்டுள்ளது. நீங்கள் செலுத்தும் கட்டணம் உங்கள் வருமானத்துடன் சேர்த்து திரும்பத் தரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
செலுத்திய பணத்துடன் கூடுதல் தொகை இ-வாலட்டில் காண்பிக்கத் தொடங்கவே டிசம்பர் 3 ஆம் தேதி முதல் அவர் மொத்தம் ரூ.37.80 லட்சங்களை அதில் வரவு வைத்திருக்கிறார். அவர் ப்ரீமியம் கட்டணமாக இதை செலுத்தத் தொடங்கியதை அடுத்து வாலட்டில் இருப்புத் தொகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்ததாகக் கூறப்படுகிறது.
பணிகளை தொடர்ந்து செய்து வந்த அந்த நபர் வாலட்டில் உள்ள தொகையை பெற முயற்சித்து இருக்கிறார். ஆனால் அந்த தொகை தொடர்ந்து நிலுவையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை தொடர்பு கொண்ட டெலிகிராம் குழுவை அணுகி இருக்கிறார். ஆனால் அந்த குழு நீக்கப்பட்டது என அதில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கூடுதல் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட நபர், லட்சக் கணக்கில் பணம் செலுத்த இயன்றவராக இருந்திருக்கிறார். இருப்பினும் வேகமாக கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் மொத்தத்தையும் இழந்துள்ளார். ஆன்லைன் மோசடிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை ஆகும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470