Google Chrome யூஸ் பண்ணுறீங்களா? உங்கள் ஸ்மார்ட்போனிற்கு ஆபத்து.. உடனே கவனியுங்க இல்லாட்டி மொத்தமும் அபேஸ்..
உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் வெப் பிரௌசராக கூகுள் குரோம் (Google Chrome) திகழ்கிறது. இப்போது வரை சுமார் 3.46 பில்லியன் மக்கள் உலகளவில் கூகுள் குரோம் வெப் பிரௌசரை பயன்படுத்தி வருகிறார்கள். இப்போது இவர்களுக்கெல்லாம் ஒரு ஆபத்து வந்துள்ளது.
Google Chrome: பிரௌஸிங் செய்ய மற்றும் தகவலை தேட நீங்களும் கூகுள் குரோம் வெப் பிரௌசர் தான் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது. கூகுள் குரோம் பிரௌசர் மூலமாக பேராபத்தை ஏற்படுத்தும் புதிய மால்வேர் தாக்குதல் பற்றி எச்சரிக்கை செய்திகள் வேகமாக வெளியாகி வருகிறது. இது பயனர் தகவலை திருடுவதோடு, SMS, பாஸ்வோர்ட், போட்டோஸ் மற்றும் சில முக்கியமான தகவலை திருடி ஹேக்கர்களிடம் ஒப்படைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மால்வேர்: இன்றைய டெக் காலத்தில், ஆண்ட்ராய்டு மால்வேர் அச்சுறுத்தல்கள் எல்லா வடிவங்களிலும் பரவி, மக்களை தொடர்ந்து தாக்கி வருகிறது. சமீபத்திய மால்வேர் தாக்குதலானது மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் Chrome மூலம் பரவி வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு எக்ஸ்லோடர் மால்வேரின் புதிய பதிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SMS லிங்க்: இது இப்போது குரோம் போல காட்சியளிக்கும் போலியான தோற்றத்தில், ஒரு SMS லிங்க் மூலம் உங்கள் போனிற்குள் ஊடுருவி, உங்கள் போனின் எஸ்எம்எஸ் செய்திகளுக்கான அணுகலை பெற்று, பயனர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் வகையில் பின்னணியில் இயங்கும் திறனை கொண்ட அச்சுறுத்தலான மால்வேராக பார்க்கப்படுகிறது. Bleeping Computer இன் அறிக்கையானது McAfee மேற்கோள்காட்டியுள்ளது.
ஆண்ட்ராய்டு எக்ஸ்லோடர் மால்வேர்: இந்த புதிய மால்வேர் பற்றிய சிக்கல்கள் மற்றும் இதன் செயல்பாடு குறித்த தகவலை இப்போது வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு எக்ஸ்லோடர் மால்வேர் அச்சுறுத்தல் முதலில் இது எப்படி மக்களை தாக்குகிறது என்று பார்க்கலாம். உங்கள் சாதனத்தில் இது கிளாசிக் SMS மூலம் அனுப்பப்படும் ஒரு URL மூலம் நுழைகிறது. அந்த லிங்கை நீங்கள் கிளிக் செய்ததும், இணைப்பிலிருந்து APK பைல் வழியாக ஊடுருவுகிறது.

உஷார் மக்களே: பாதிக்கப்பட்டவர்கள் இணைப்பைக் கிளிக் செய்தவுடன், அவர்கள் குரோம் வார்த்தைகளை பார்க்கிறார்கள், இதனால், இது குரோம் என்று நம்பி நிறுவ நினைக்கிறார்கள். இருப்பினும், ஆண்ட்ராய்டில் ஒரு ஆப்ஸை இன்ஸ்டால் செய்ய வேண்டுமென்றால் பயணர்கள் அணுகலை வழங்கவேண்டும். குறிப்பாக பிற மூலங்களிலிருந்து ஆப்ஸை நிறுவுவதற்கு கட்டாயம் அணுகலை வழங்க வேண்டும்.
என்னலாம் திருடப்படும்? இந்த மால்வேர் அதைச் செய்வது மட்டுமல்லாமல், போனில் உள்ள SMS செய்திகளுக்கான அணுகலைப் பெறுகிறது. இது சைலெண்டாக பயன்பாடுகளுக்குப் பின்னால் இயங்குகிறது. இதன் மூலம் ஹேக்கர்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டுள்ள பாஸ்வோர்ட், போட்டோஸ், காண்டாக்ட்ஸ் விவரங்கள் மற்றும் சாதனத்தைப் பற்றிய தகவல் போன்றவற்றை திருடிவிடுகிறார்கள்.
கூகுள் என்ன சொல்கிறது: சமீபத்திய அச்சுறுத்தல் குறித்து McAfee ஏற்கனவே Google நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளது. எனவே நிறுவனம் தீம்பொருளை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், கூகுள் பிளே ஸ்டோருக்கு வெளியே பயனர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கூகுளால் கட்டுப்படுத்த முடியாது என்றும் நிறுவனம் தெளிவாக கூறியுள்ளது. அப்படியிருந்தும், இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக பயனர்களை பாதுகாக்க தேவைப்படும் நடவடிக்கைகளை நிறுவனம் செய்யுமென்று கூறியுள்ளது.
இதை செய்ய வேண்டாம்: இந்த நபர்களிடமிருந்து தரவை மால்வேர் திருட முடியாது என்பதை உறுதிப்படுத்தவும், தங்கள் சாதனத்தில் Play Protect ஐ இயக்குமாறு மக்களுக்கு Google அறிவுறுத்தியுள்ளது. கூகுள் குரோம் பயனர்களுக்கு ஏதேனும் சந்தேகத்திற்குரிய லிங்க் வந்தால் அவற்றை கிளிக் செய்ய வேண்டாமென்று அறிவுரைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








