Home
News

கீபோர்ட் டைப்பிங் சத்தத்தை வைத்து பாஸ்வோர்ட் திருட்டு.. நிஜமான திருடன் யார்னு சொன்ன ஆடிபோவீங்க..

ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (artificial intelligence) அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) என்று அழைக்கப்படும் எதிர்கால ஏஐ சேவைகளின் ஆதிக்கம் இப்போதே படிப்படியாக தலையோங்க துவங்கியுள்ளது. இது பல துறைகளில் ஒரு பெரிய எழுச்சியை உருவாக்க உருவாக்கப்பட்டிருந்தாலும், இப்போது இது எதிர்மறையாக செயல்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் எழுச்சி சிலருக்கு நல்ல மாதிரியான ஒரு பின்பதை வழங்கினாலும், நிஜ வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு மூலம் மிகப் பெரிய எதிர்மறையான நிகழ்வுகள் நிகழபோகிறது என்கின்றது சமீபத்திய ஆய்வுகள். எதிர்மறையான செயல்பாடுகளில் மோசடிக்காரர்கள் ஈடுபட ஏஐ ஒரு பெரிய பங்கை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

கீபோர்ட் டைப்பிங் சத்தத்தை வைத்து பாஸ்வோர்ட் திருட்டு.. திருடன் யார்?

வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், அதிகரித்து வரும் ஏஐ சேவையின் மூலம் உங்கள் லேப்டாப் (Laptop) மற்றும் கம்ப்யூட்டர் (Computer) பாஸ்வோர்டுகள் (Password) திருடப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆம், உங்கள் லேப்டாப்பின் பாஸ்வோர்ட் (laptop password) போன்ற முக்கியமான தரவை அதிக துல்லியத்துடன் கணிக்க, உங்கள் கீபோர்ட் அழுத்தங்களை கவனிக்கவும், டைப் செய்யும் போது நீங்கள் எழுப்பும் ஒலியைப் புரிந்துகொள்ளவும் ஹேக்கர்கள் AI க்கு பயிற்சி அளிக்க முடியும் என்கிறது சமீபத்திய ஷாக்கிங் தகவல்.

இந்த "திடுக்கிடும்" கண்டுபிடிப்புகள் டர்ஹாம், சர்ரே மற்றும் ராயல் ஹோலோவே பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்களால் செய்யப்பட்ட புதிய ஒருங்கிணைந்த ஆய்வின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 90 சதவீதத்திற்கும் அதிகமான துல்லியத்துடன் மைக்ரோஃபோன்கள் (microphone) மூலம் கீபோர்ட் (keyboard) அழுத்தங்களைக் கண்டறிந்து, அவற்றை டிகோட் (decode) செய்ய AI-க்கு பயிற்சி அளிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கீபோர்ட் டைப்பிங் சத்தத்தை வைத்து பாஸ்வோர்ட் திருட்டு.. திருடன் யார்?

சுருக்கமாகச் சொன்னால், உங்களுக்குத் தெரியாமலேயே பதுங்கி, உங்கள் தனிப்பட்ட தரவைத் திருடுவதற்கு ஏஐ சேவையை மோசடிக்காரர்கள் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இது கேட்கவே சற்று பயமாக இருக்கிறதல்லவா. இந்த திடுக்கிடும் வெளிப்பாட்டை நிரூபிக்க, ஆராய்ச்சியாளர்கள் ஒரு மேக்புக் ப்ரோவை (apple macbook pro) எடுத்து, அதன் ஒவ்வொரு 36 கீகளையும் 25 முறை அழுத்தி, ஒவ்வொரு தொடர்புக்கும் ஏற்ற ஒலியை (sound) பதிவு செய்தனர்.

அவர்கள் இரு முனை அணுகுமுறையை எடுத்தனர், ஒன்று ஜூம் வீடியோ அழைப்பைப் (Zoom video calling) பயன்படுத்தி செய்யப்பட்ட ரெக்கார்டிங்கின் மூலம் வரும் கீபோர்டின் ஒலிகளைப் (keyboard typing sound) பதிவுசெய்தது. மற்றொன்று ஐபோன் 13 மினி போனைப் (iPhone mini) பயன்படுத்தி நேரடியாக கீபோர்டில் இருந்து வரும் ஒலியை பதிவு செய்தது. பயிற்சி நோக்கங்களுக்காக ஒலி தரவு பின்னர் AI மாதிரியில் செலுத்தப்பட்டது.

கீபோர்ட் டைப்பிங் சத்தத்தை வைத்து பாஸ்வோர்ட் திருட்டு.. திருடன் யார்?

ஆச்சரியம் என்னவென்றால், இந்த கீபோர்ட் அழுத்தங்களை நேரடியாகவோ அல்லது பதிவுசெய்யப்பட்டதாகவோ பொருட்படுத்தாமல் AI ஆனது மிகத் துல்லியத்துடன் தேர்ச்சி பெற முடிந்தது. அடிப்படையில், அது அனைத்து தரவையும் எடுத்தது மற்றும் 90 சதவீதத்திற்கும் அதிகமான துல்லியத்துடன் ஆராய்ச்சியாளர்கள் என்ன டைப் செய்கிறார்கள் என்பதை துல்லியமாக ஏஐ ஆல் கணிக்க முடிந்தது என்கிறது ஆராய்ச்சி குழு.

டீப் லேர்னிங் (Deep learning) இன் சமீபத்திய முன்னேற்றங்கள் மைக்ரோபோன்கள் மற்றும் தனிப்பட்ட சாதனங்கள் வழியாக ஆன்லைன் சேவைகளின் அதிகரிப்பு, ஒலி பக்க சேனல் தாக்குதல்கள், கீபோர்டின் மூலம் முன்னெப்போதையும் விட பெரிய அச்சுறுத்தலை வழங்குகின்றன என்று ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது. குறிப்பாக, ஐபோனைப் பயன்படுத்தி நேரடியாகக் கைப்பற்றப்பட்ட தரவுகளிலிருந்து 95 சதவிகிதத் துல்லியத்துடன் கீபோர்ட் அழுத்தங்களை வெற்றிகரமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Beware AI Can Steal Passwords By Decoding Your Laptop and Computer Keyboard Typing Sound Keystrokes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X