ஸ்மார்ட்போன் யூஸ் பண்றீங்களா? இனி 50 வருடத்துக்கு சார்ஜ் செய்ய வேணாம்! வைரத்தால் உருவாக்கப்பட்ட புது Battery..
சீன ஸ்டார்ட்அப் நிறுவனமான, பீட்டாவோல்ட் (Betavolt) ஒரு அற்புதமான பேட்டரியை (battery) உருவாக்கியுள்ளது. இது 50 ஆண்டுகளுக்கு சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமின்றி ஸ்மார்ட்போன்களுக்கு சக்தியளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஒரு நாணயத்தின் அளவை விட மிகசிறியது என்பது குறிப்பிடத்தக்கது.
அது எப்படி, நாணயத்தை விட மிக சிறிய அளவில் இருக்கும் ஒரு பேட்டரி செல் 50 வருட சார்ஜ்ஜை (50-years charge battery cell) வழங்க முடியும்? என்று உங்கள் மனதில் சந்தேகம் எழுவது வாஸ்துவமானது தான். ஆனால், இது நமது ஸ்மார்ட்போன்களில் இருக்கும் லித்தியம் பேட்டரி போல் அல்ல. இது தான் உலகின் முதல் நியூக்ளியர் பேட்டரி. ஆம் மக்களே, அணுசக்தியில் இயங்கும் முதல் அணுக்கரு பேட்டரி இதுதான்.

உலகின் முதல் மினியேட்டரைஸ் செய்யப்பட்ட அணுசக்தி அமைப்பு (world's first miniaturized atomic energy system) என்று இந்த பேட்டரி புகழப்படுகிறது. அணுக்கரு பேட்டரி எப்படி மக்களின் எதிர்கால எலெக்ட்ரானிக்ஸ் பயன்பாட்டை சார்ஜர் (charger) தேவையின்றி முழுமையாக மாற்றப்போகிறது என்பதை தெளிவாக இந்த புதிய கண்டுபிடிப்பு நமக்கு காண்பிக்கிறது. ஒரு நாணயத்தை விட சிறிய அளவில் இருக்கும் தொகுதியில், 63 அணுசக்தி ஐசோடோப்புகளை (nuclear isotopes) இந்த செல் உருவாக்குகிறது.
உலகின் முதல் சிறிய சைஸ் நியூக்ளியர் பேட்டரி செல் (World's first small size nuclear battery cell):
இந்த பேட்டரியின் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் (technology) சிதைந்த ஐசோடோப்புகளால் வெளியிடப்படும் ஆற்றலை மின்சாரமாக மாற்றுகிறது. இந்த கருத்து முதன்முதலில் 20 ஆம் நூற்றாண்டில் ஆராயப்பட்டது மற்றும் பீட்டாவோல்ட் தங்கள் புதுமையான தயாரிப்பில் அதை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இந்த பீட்டாவோல்ட் ஸ்டார்ட்அப் (Betavolt start-up) நிறுவனம் ஏற்கனவே பைலட் சோதனையைத் தொடங்கியுள்ளது.
எதிர்காலத்தில், இந்த நியூக்ளியர் பேட்டரி செல்கள் ஸ்மார்ட்போன்கள் (smartphones) மற்றும் ட்ரோன்கள் (drones) போன்ற சாதனங்களுக்காக உருவாக்கப்படும் என்றும், விரைவில் இவை வணிக பயன்பாடுகளுக்கு கொண்டுவரப்படும் என்றும் பீட்டாவோல்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல், பீட்டாவோல்ட் நிறுவனம் இதன் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.

அந்த பேட்டரிகளை விண்வெளி (space), AI உபகரணங்கள் (AI equipment), மருத்துவ உபகரணங்கள் (medical equipments), மைக்ரோபிராசஸர் (microprocessors), அட்வான்ஸ் சென்சார்ஸ் (advanced sensors), சிறிய ட்ரோன்கள் (small drone) மற்றும் மைக்ரோ-ரோபோட்கள் (micro-robots) போன்ற பல பயன்பாட்டு தேவைகளுக்கு பயன்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. பீட்டாவோல்ட்டின் அணு ஆற்றல் பேட்டரிகள் நீண்டகால மின்சார விநியோகத்தை உறுதி செய்துள்ளதனால், எதிர்கால கேட்ஜெட்களில் இந்த பேட்டரிகளை நாம் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
50 வருடங்களுக்கு தடையில்லாத சார்ஜ்.. இனி சார்ஜர் தேவையில்லை..
அப்படி இந்த நியூக்ளியர் பேட்டரி செல்கள் (nuclear battery cell) மக்களின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் சார்ஜ் செய்யப்படவேண்டிய கேஜெட்கள் (gadgets) மற்றும் சக்தியூட்டப்படும் எலக்ட்ரானிக்ஸ் டிஜிட்டல் சாதனங்களில் இடம்பெற துவங்கினால், 50 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் சார்ஜ் செய்தால் போதும் என்ற நிம்மதியான நிலைமைக்கு அனைவரும் செல்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல், சார்ஜ்ர் தேவையும் இனி இருக்காது என்று கூறப்படுகிறது.
Betavolt உருவாக்கிய ஆரம்ப அணுக்கரு பேட்டரி 15x15x5 கன மில்லிமீட்டர் அளவில் 100 மைக்ரோவாட் (microwatt) ஆற்றலை வழங்குகிறது மற்றும் 3V மின்னழுத்தத்தைக் கொண்டுள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் 1 வாட் பவர் கொண்ட பேட்டரியை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதுவொரு அணுசக்தி பேட்டரி என்றதும், சிலருக்கு பாதுகாப்பு குறித்த பதட்டம் அடிமனதில் எழுந்திருக்கும். அதற்கும் பீட்டாவோல்ட் நிறுவனம் பதில் வழங்கியுள்ளது.
நிக்கல்-63 என்ற (nickel-63) கதிரியக்க தனிமம் மற்றும் டைமண்ட் சேமிகண்டெக்டர்கள் (diamond semiconductor) இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால், இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் கதிர்வீச்சற்றது என்று நிறுவனம் கூறியுள்ளது. பேஸ்மேக்கர் போன்ற உடலுக்குள் உள்ள மருத்துவ சாதனங்களில் இது பயன்படுத்த ஏற்றது என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், சிதைவு காலத்திற்குப் பிறகு, 63 ஐசோடோப்புகள் ஒரு நிலையான, கதிரியக்கமற்ற செம்பு ஐசோடோப்பாக மாறுகின்றன என்பதனால், இது சுற்றுச்சூழலில் மாசுபாட்டை ஏற்படுத்தாது.


Click it and Unblock the Notifications