அடுத்த ஊரடங்கிற்கு முன் உஷாரா இதை செஞ்சிருங்க! இல்லைனா WFH பண்றவங்களுக்கு வெட்டி செலவு தான்!
ஊரடங்கு நாட்கள் தொடர்ந்து நீடித்த வண்ணமாக இருக்கிறது. இதனால் அனைவரின் டேட்டா பயன்பாடும் அதிகரித்துள்ளது, குறிப்பாக வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களின் நிலை இன்னும் கொஞ்சம் மோசம் தான். சிறந்த Work From Home திட்டம் எது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாய் இருக்கும். ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் இல் கிடைக்கும் திட்டங்களைப் பார்க்கலாம்.

சிறந்த பிஎஸ்என்எல் Work From Home திட்டம்
பிஎஸ்என்எல் அதன் வொர்க் ப்ஃரம் ஹோம் திட்டத்தின் கீழ் ரூ.599 என்கிற விலையில் ஒரு நாளைக்கு 5 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. டேட்டாவை தவிர்த்து இந்த வொர்க் ப்ஃரம் ஹோம் திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் கால் அழைப்பு என்று ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்கிற வரம்பின் கீழ் வருகிறது. மேலும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையுடன் 90 நாட்களுக்கு செல்லுபடியாகிறது.

சிறந்த ஜியோ Work From Home திட்டம்
ஜியோ நிறுவனம் மூன்று "Work From Home" டேட்டா பேக்களை வழங்குகிறது. ரூ.151 விலையுடன் திட்டம் 30 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. அதேபோல், ஜியோவின் ரூ.201 மற்றும் ரூ.251 பேக்களின் வழியாகப் பயனர்களுக்கு 40 ஜிபி மற்றும் 50 ஜிபி அளவிலான டேட்டா நன்மை கிடைக்கிறது. வாய்ஸ் கால், டேட்டா நன்மை மற்றும் எஸ்எம்எஸ் சலுகையுடன் எந்தவித "Work From Home" திட்டத்தையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் ரூ. 599 திட்டம்
அணைத்து நன்மைகளுடனும் ஒரு சிறந்த திட்டத்தை எதிர்பார்ப்பவர்கள் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 599 திட்டத்தைத் தேர்வு செய்யலாம். இத்திட்டம் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, மேலும் ஜியோ எண்களுக்கு வரம்பற்ற அழைப்பு, 3000 நிமிடங்கள் ஜியோ அல்லாத அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

சிறந்த ஏர்டெல் Work From Home திட்டம்
ஏர்டெல் நிறுவனம், வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா நன்மைகளுடன் ரூ.588 எனும் Work From Home திட்டத்தை வழங்குகிறது. இத்திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, அனைத்து நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்பு வசதியை வழங்குகிறது மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 84 நாட்களுக்கு செல்லுபடியாகிறது. அதேபோல், ஏர்டெலிடம் 50 ஜிபி வரை கூடுதல் டேட்டாவைக் கொண்ட டேட்டா ஆட் ஆன் பேக்களும் உள்ளது.

சிறந்த வோடபோன் ஐடியா Work From Home திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனம் 50 ஜிபி அளவிலான டேட்டா நன்மைகளுடன் ரூ.251 என்கிற விலையில் "Work From Home" டேட்டா ஆட்-ஆன் பேக்கை வழங்குகிறது. அதேபோல், ரூ.599 என்ற விலையில் கிடைக்கும் திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் இதனுடன் 5 ஜிபி அளவிலான போனஸ் டேட்டாவை 84 நாட்கள் செல்லுபடியாகும். வோடபோன் ப்ளே மற்றும் ஜீ 5 சந்தாவிற்கான இலவச அணுகலையும் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications