ஜியோ, ஏர்டெல், விஐ: வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்களுக்கு சிறந்த திட்டம்!

|

வீட்டில் இருந்தே வேலைபார்ப்பவர்களுக்கான சிறந்த திட்டங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு போட்டிப் போட்டுக் கொண்டு வழங்குகின்றன. அதுகுறித்து பார்க்கலாம்.

ஆன்லைன் வகுப்புகள், வீட்டில் இருந்தே வேலை

ஆன்லைன் வகுப்புகள், வீட்டில் இருந்தே வேலை

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஆன்லைன் வகுப்புகள், வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது ஆகியவை பிரதானமாக்கப்பட்டு வருகிறது. இதற்கான இணையத்தேவையை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகையோடு அறிவித்து வருகின்றன. அதுகுறித்து பார்க்கலாம்.

மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பிரதானம்

மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பிரதானம்

கொரோனா பரவல் தொடங்கிய நாளில் இருந்து மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற பிரதான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு பள்ளி கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டது, அலுவலகங்கள் இயங்கப்பட முடியாத நிலை தொடங்கியது.

ஏணைய பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் வகுப்பு

ஏணைய பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் வகுப்பு

இதையடுத்து மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு ஏணைய பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் வகுப்பை தொடங்கின. அதேபோல் ஏணைய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தின.

பிரதான தேவையாக இணைய சேவை

பிரதான தேவையாக இணைய சேவை

ஊரடங்கு காலத்தின் போது வீட்டில் முடங்கி கிடந்த பலரும் மொபைல் போனையே பிரதானமாக பயன்படுத்தினர். இதற்கும் பிரதான தேவையாக இருந்தது இணைய தேவைதான். இந்த நிலையில் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் பேக்கை அறிவித்தது.

வெறும் ரூ.1 செலுத்தினால் போதும்: அட்டகாச சலுகையோடு பிளிப்கார்ட் பிக் சேவிங் தினம் அறிவிப்பு!

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைய சேவை

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைய சேவை

வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்களுக்கு பிரதானமாக இருப்பது இணைய சேவை. காலை தொடங்கி அலுவலகம் ஒதுக்கிய நேரம் முழுவதும் தங்களது மடிக்கணினியிலோ, மொபைல்களிலிலோ வேலை பார்ப்பதற்கு பிரதானமாக இருப்பது இணைய தேவைதான். அதை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வழங்குகின்றன. அந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் குறித்து பார்க்கலாம். இந்த திட்டம் சராசரியான திட்டம் என்றாலு்ம இது அதிக அளவிலான டேட்டாவை தினசரி வழங்குகிறது. இந்த திட்டத்தை ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்யும் போது, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், தினசரி 2 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. அதோடு இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம், விங்க் மியூசிக் ஆகிய சந்தா அணுகலை வழங்குகிறது.

விஐ/ வோடபோன் ஐடியா

விஐ/ வோடபோன் ஐடியா

விஐ/ வோடபோன் ஐடியா ரூ,351 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் குறித்து பார்க்கையில், இந்த திட்டம் ஆந்திரா, பீகார், குஜராத், கேரளா மற்றும் மத்தியபிரதேசம் வட்டங்களில் கிடைக்கிறது. இந்த புதிய திட்டமானது மொத்தமாக 100 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 56 நாட்கள் செல்லுபடியாகும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 ப்ரீபெய்டு திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 ப்ரீபெய்டு திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 ப்ரீபெய்டு திட்டம் குறித்து பார்க்கலாம். ஜியோ வழங்கும் இந்த திட்டத்தில் 1000 நிமிட எஃப்யூபி நிமிட அழைப்புகளை வழங்குகிறது. இதில் தினசரி 3 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best Work From Home Plan Offers Jio, Airtel, Vodafone Idea

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X