ஜியோ புயல் : வோடபோனின் புதிய ரூ.198 ரீசார்ஜ் திட்டம்.!
புதிதாக தொடங்கப்பட்ட ரூ. 198 திட்டம் உங்களுக்கு வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. மேலும்ஒரு நாளைக்கு 1ஜிபி தரவு கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 4ஜி டேட்டா திட்டங்களை வழங்குகிறது, மற்ற தொலைத்தொடர்பு நிறுவனமும் இதே போன்ற பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. அந்த வரிசையில் ஜியோவிற்கு போட்டியா வோடபோன் நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வோடபோன் இந்த திட்டத்தில் தினசிரி 4ஜி டேட்டா, கால் அழைப்புகள், தேசிய ரோமிங் போன்ற அனைத்தையும் வழங்குகிறது. இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் வோடபோன் ப்ரீபெய்ட் சந்தாதாரராக இருந்தால் MyVodafone பயன்பாட்டிற்கு சென்று ஒரு நாளைக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 1ஜிபி/2ஜிபி டேட்டா கிடைக்கும் வெவ்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை சரிபார்த்து கொள்ள முடியும், அதனுடன் ரீசார்ஜ் செய்ய * 121 # டயல் செய்து தேவையான திட்டங்களை தேர்வுசெய்ய முடியும். ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய திட்டங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.198 ரீசார்ஜ் திட்டம்:
புதிதாக தொடங்கப்பட்ட ரூ. 198 திட்டம் உங்களுக்கு வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. மேலும்ஒரு நாளைக்கு 1ஜிபி தரவு கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும், எனவே நீங்கள் 28ஜிபி டேட்டாவை பெறமுடியும். இந்த திட்டத்தில் இலவச எஸ்.எம்.எஸ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 348 திட்டம்:
வோடபோனின் ரூ. 348 திட்டம் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும், அதன்பின்பு இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்கப்படுகிறது.

ரூ. 458 திட்டம்:
வோடபோனின் ரூ. 458 திட்டம் பொறுத்தவரை தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 70நாட்களுக்கு வழங்கப்படுகிறது, அதன்பின்பு இந்த திட்டத்தில் 100 எஸ்.எம்.எஸ் மற்றும் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 509 திட்டம்:
வோடபோனின் ரூ. 509 திட்டம் உங்களுக்கு வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. அதேபோல் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 91நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் 100 எஸ்.எம்.எஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வோல்ட் :
இம்மாத இறுதிக்குள் வோடபோன் பல முக்கிய வட்டாரங்களில் அதன் வோல்ட் சேவையின் தொடக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது. வோல்ட் சேவை உருட்டப்பட்ட பின்னர் எந்த தினசரி மற்றும் வார வரம்பும் இல்லாமல் வோடாபோன் நிறுவனத்தின் குரல் அழைப்புகள் வழங்கப்படலாம்.

பார்தி ஏர்டெல்:
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கட்டண திருத்தங்களை பொறுத்தமட்டில், அதன் பிரபலமான ரூ.448/- கட்டணத் திட்டமானது முன்னர் 70 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் இருந்தது, தற்போது அது 82 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது.

ரூ.509 திட்டம்:
அதேபோல், ஏர்டெல் ரூ.509/- கட்டணத் திட்டமானது இப்போது நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான தரவை மொத்தம் 91 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது. இதே திட்டம் முன்னர் 84 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications