வீடியோ காலிங் ஆப் எது சிறந்தது: கூகுள் போட்ட ஸ்கெட்ச்!
வீடியோ காலிங் ஆப் பிரதானமாக பயன்பட்டு வரும் இந்த நேரத்தில் எந்த செயலி சிறந்தது, கூகுள் அறிவித்த அட்டகாச அறிவிப்பு என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அரசு பல்வேறு நடவடிக்கைகள்
கொரோனா பரவைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளோடு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தல்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல் பள்ளி, கல்லூரிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வீடியோகால் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

பிரதானமான ஜூம் ஆப்
வீட்டில் இருந்த பணியாற்றும் ஊழியர்களுக்கு தங்களது சக ஊழியர்களோடு சந்திப்பு நடத்த வீடியோகால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இதற்கு ஜூம் ஆப் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஜூம் செயலி
இந்நிலையில் ஜூம் செயலியைப் பயன்படுத்தி 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல என்றும் இதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது. அதேபோல் ஜூம் செயலி குறித்து பல்வேறு புகார்களும் எழுந்தன.

முன்னணி டெக் நிறுவனங்கள்
வீடியோ கால் சேவைகளின் தேவையை அறிந்து பல முன்னணி டெக் நிறுவனங்களும் தங்கள் சேவைகளைப் புதிப்பித்தும் பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியும் வருகின்றன.

Messenger வீடியோ காலிங்
பேஸ்புக் தனது சாட்டிங் செயலியான Messenger-ல் வீடியோ காலிங் வசதிக்கான புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது. மெசென்ஜரை அப்டேட் செய்த பின் வீடியோ கான்ஃபரன்ஸிங் செய்வதற்கான வசதி இதில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

8 பேர் வரை கனெக்ட் செய்யலாம்
அதேபோல் வாட்ஸ் ஆப் செயலியும் தங்களது வீடியோ கால் சேவையை பல்வேறு அம்சங்களோடு அப்டேட் செய்தது, முன்னதாக வாட்ஸ் ஆப் சேவையில் நான்கு பேர் மட்டுமே வீடியோ கால் பேசலாம் என்று இருந்த நிலையில் இதை 8 பேர் வரை கனெக்ட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

கூகுள் மீட் செயலி
அதேபோல் கூகுள் மீட் செயலியை பிரதானமாக்கும் நடவடிக்கையில் கூகுள் இறங்கியுள்ளது என்றே கூறலாம். கூகுள் நிறுவனம் அதன் பீரிமியம் வீடியோ காலிங் செயலியான கூகுள் மீட் ஆப்பை அனைவரும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் 30 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள் இதில் இணைந்தனர்.

100 பேர் வரை பங்கேற்கலாம்
ஒரு கான்ஃபிரென்சில் 100 பேர் வரை பங்கேற்கலாம். அதேபோல் ஜூம் செயலியில் சப்ஸ்கிரைப் செய்திருந்தால் மட்டுமே 40 நிமிடங்களுக்கு மேல் பேசலாம். ஆனால் கூகுள் மீட்-ல் 60 நிமிடங்கள் வரை மீட்டிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த பயன்பாட்டை அனைவரும் இணையம், ஆண்ட்ராய்டு செயலி, ஐஓஎஸ் போன்ற அனைத்து பயன்பாட்டின் வழியாக இந்த இலவச வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications