1 வருடத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ்.. கொட்டிக்கிடக்கும் ஏராள நன்மைகள்.. பெஸ்ட் திட்டங்கள் இதோ..

|

இந்த அவசரமயமான வாழ்க்கை ஓட்டத்தில், நாம் நிதானமாக நின்று பேசுவதற்குக் கூட போதிய நேரம் இல்லாமலாகிவிட்டது. காலையில் எழுந்து அவசர அவசரமாக வேலைக்குக் கிளம்புவது, மீண்டும் இரவு டிராபிக் நெருக்கடியில் வீடு வந்து சேர்வது என்று நம் வாழ்க்கை மிக வேகமாக ஒரே சுழற்சியில் சுழன்றுகொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில், மாதம் ஒரு முறை ரீசார்ஜ் செய்யும் பழக்கம் எல்லாம், நமக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். இதற்காகவே, டெலிகாம் நிறுவனங்கள் நமக்கு நீண்ட கால திட்டங்களை வழங்குகின்றன.

வழக்கமான மாதாந்திர திட்டத்தை விட வருடாந்திர திட்டம் ஏன் சிறந்தது?

வழக்கமான மாதாந்திர திட்டத்தை விட வருடாந்திர திட்டம் ஏன் சிறந்தது?

உண்மையைச் சொல்லப் போனால், விவரம் தெரிந்த சில டெலிகாம் வாடிக்கையாளர்கள், நீண்ட காலத் திட்டத்தில் ஈடுபட விரும்பும் பயனர்களாகவே இருக்கிறார்கள். வழக்கமான மாதாந்திர திட்டம், இரண்டு மாத மற்றும் மூன்று மாத பேக்குகளைத் தவிரத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு வருடகால திட்டத்தை வழங்குகின்றன. 1 ஆண்டு நீளமான திட்டங்களுக்கு வழக்கமாக 365 நாட்கள் செல்லுபடியாகும் காலம் இருக்கிறது. இப்படி, வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் வழங்கும் சில வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்கள் பற்றிய விவரங்களை உங்களுக்காகக் கீழே குறிப்பிடப்பட்டுள்ளோம்.

1 வருடத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும்

1 வருடத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும்

Vi அதன் பயனர்களுக்கு சில அற்புதமான பலன்களுடன் மூன்று 1 வருட நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. பட்டியலில் உள்ள முதல் திட்டம் ரூ.1,799 விலையில் வருகிறது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் மொத்தம் 3600 எஸ்எம்எஸ் நன்மைகளுடன், மொத்தம் 24ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்களுடன் வருகிறது. இந்த திட்டம் Vi Movies மற்றும் TV சேவைக்கான அணுகலுடன் வருகிறது. இந்த திட்டம் உங்களுக்குத் தினசரி டேட்டாவை வழங்குவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

நாசாவுக்கே டஃப் கொடுத்த சீனா: சந்திர மண்ணிலிருந்து ஆக்சிஜன்/எரிபொருள் எடுக்கலாம்.. சீனா சொன்ன பலே ஐடியா..நாசாவுக்கே டஃப் கொடுத்த சீனா: சந்திர மண்ணிலிருந்து ஆக்சிஜன்/எரிபொருள் எடுக்கலாம்.. சீனா சொன்ன பலே ஐடியா..

Vi வழங்கும் தினசரி டேட்டா கிடைக்கும் 1 வருட திட்டங்கள்

Vi வழங்கும் தினசரி டேட்டா கிடைக்கும் 1 வருட திட்டங்கள்

Vi வழங்கும் மற்ற இரண்டு திட்டங்களும் தினசரி தரவுத் திட்டங்களாகும். முறையே முதல் திட்டத்தின் விலை ரூ.2,899 ஆகும். இரண்டாம் திட்டத்தின் விலை ரூ.3,099 ஆகும். இந்த இரண்டு திட்டங்களும் ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா நன்மை உடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளுடன் வருகிறது. இரண்டு திட்டத்திற்கும் இடையில் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், ரூ.3,099 திட்டமானது டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான வருடாந்திர சந்தாவுக்கான அணுகலுடன் வருகிறது.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..

Vi வழங்கும் இரவு நேர இலவச அன்லிமிடெட் டேட்டா

Vi வழங்கும் இரவு நேர இலவச அன்லிமிடெட் டேட்டா

இது தவிர, இந்த இரண்டு திட்டங்களும் "பிங்கே ஆல் நைட்" அம்சத்தை வழங்குகின்றன. இது பயனர்கள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற இணையத்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இத்துடன், திங்கள் முதல் வெள்ளி வரை சனி மற்றும் ஞாயிறு வரை பயன்படுத்தப்படாத தங்களின் தரவை பயனர்கள் எடுத்துக் கொள்ள உதவும் "வீகென்ட் டேட்டா ரோல் ஓவர்" நன்மையையும் நிறுவனம் வழங்குகிறது. கூடுதலாக, பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி தரவு காப்புப்பிரதியை கூடுதல் கட்டணமின்றி பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி பஸ் எங்க இருக்குனு தெரிஞ்சே கிளம்பலாம்.. MTC அறிமுகம் செய்த புதிய Chennai bus app.. எப்படி உபயோகிப்பது?இனி பஸ் எங்க இருக்குனு தெரிஞ்சே கிளம்பலாம்.. MTC அறிமுகம் செய்த புதிய Chennai bus app.. எப்படி உபயோகிப்பது?

பாரதி ஏர்டெல் வழங்கும் 1 வருட திட்டங்கள்

பாரதி ஏர்டெல் வழங்கும் 1 வருட திட்டங்கள்

பாரதி ஏர்டெல் Vi போன்ற 1 ஆண்டுக்கால திட்டங்களையும் வழங்குகிறது. ஆனால் டேட்டா நன்மைகள் மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றில் சிறிய மாறுபாடுகள் உள்ளன. முதல் திட்டம் Vi ஐப் போலவே உள்ளது. ஏனெனில், இதன் விலை ரூ.1,799 மற்றும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 365 நாட்களுக்கு மொத்தம் 3600 SMS உடன் மொத்தம் 24GB டேட்டாவை வழங்குகிறது. இதுவும் வோடபோன் ஐடியா வழங்கும் திட்டத்தைப் போல், தினசரி டேட்டா நன்மையை வழங்காது என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், ஏர்டெல் வழங்கும் மற்ற இரண்டு திட்டங்களும் உங்களுக்குத் தினசரி டேட்டாவை 1 வருடத்திற்கு வழங்குகிறது.

இதுதான் சூப்பர் கேட்ச்: நடுவானில் ராக்கெட்டை கேட்ச் பிடித்த ஹெலிகாப்டர்.!இதுதான் சூப்பர் கேட்ச்: நடுவானில் ராக்கெட்டை கேட்ச் பிடித்த ஹெலிகாப்டர்.!

ஏர்டெல் வழங்கும் தினசரி டேட்டா கிடைக்கும் 1 வருட திட்டங்கள்

ஏர்டெல் வழங்கும் தினசரி டேட்டா கிடைக்கும் 1 வருட திட்டங்கள்

ஏர்டெல் வழங்கும் மற்ற இரண்டு திட்டங்களும் தினசரி தரவுத் திட்டங்களாகும். முதல் விலை ரூ.2,999, மற்றொன்று ரூ.3,359 விலையில் வருகிறது. இந்த இரண்டு திட்டங்களும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவுடன் ட்ருலி ஆலிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகின்றன. இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடையில் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், ரூ.3,599 திட்டமானது டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான வருடாந்திர சந்தாவுக்கான அணுகலுடன் வருகிறது.

கரண்ட் பில் சிக்கல் இல்லாமல் ஏசி பயன்டுத்தலாம்.. இந்த கம்மி விலை இன்வெர்ட்டர் ஏசி மாடலை பாருங்க..கரண்ட் பில் சிக்கல் இல்லாமல் ஏசி பயன்டுத்தலாம்.. இந்த கம்மி விலை இன்வெர்ட்டர் ஏசி மாடலை பாருங்க..

ஏர்டெல் வழங்கும் கூடுதல் நன்மைகள் என்னென்ன?

ஏர்டெல் வழங்கும் கூடுதல் நன்மைகள் என்னென்ன?

இதுதவிர, பாரதி ஏர்டெல்லின் அனைத்து திட்டங்களும் மொபைல் பதிப்பான Amazon Prime வீடியோவிற்கு (ஒரு பயனருக்கு ஒரு முறை கிடைக்கும்) மாதாந்திர இலவச சோதனை சந்தாவை வழங்குகிறது. இன்னும் கூடுதலாக ஏர்டெல் தேங்க்ஸ் நன்மையின் கீழ் Wynk Music, Shaw Academy, Free Hellotunes மற்றும் பலவற்றிற்கான அணுகலை வழங்குகிறது. 3 மாதத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ், 2 மாதத்திற்கு 1 முறை ரீசார்ஜ் அல்லது மாதம் மாதம் ஒரு முறை ரீசார்ஜ் செய்யும் பழக்கத்தை விட்டுவிட்டு, இப்படி ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டும் ரீசார்ஜ் செய்து எந்த கவலையும் இன்று உங்கள் நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்ளுங்கள்.

செயற்கை பெண் உடல்களை சந்திரனுக்கு அனுப்பும் நாசா.. எதற்கு தெரியுமா? விஷயமே வேற பாஸ்..செயற்கை பெண் உடல்களை சந்திரனுக்கு அனுப்பும் நாசா.. எதற்கு தெரியுமா? விஷயமே வேற பாஸ்..

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best Vi and Airtel Prepaid Plans With Year long Subscription Offer Daily Data Benefits : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X