Just In
- 4 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 5 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 5 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 5 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நொடிக்கு 24 எம்பி வேகமளிக்கும் டாப் 10 அன்லிமிட்டெட் பிஎஸ்என்எல் திட்டங்கள்..
பிஎஸ்என்எல் அதிவேக டேட்டா திட்டங்களை நாடு முழுக்க பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ரிலையனஸ் ஜியோ அறிமுகத்திற்குப் பின் பிஎஸ்என்எல் தனது சேவைக் கட்டணங்களை குறைத்து வருகின்றன. பல்வேறு திட்டங்களில் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகின்றது.
பிஎஸ்என்எல் அதிவேக இண்டர்நெட் திட்டங்களைப் பொருத்த வரை அதிகபட்சமாக நொடிக்கு 24 எம்பி வரை வேகம் கிடைக்கின்றது. மேலும் இத்துடன் இரவு நேரங்களில் அன்லிமிட்டெட் அழைப்புகளும் வழங்கப்படுகின்றது. பயனர்கள் இரவு 9.00 மணி முதல் காலை 7.00 மணி வரை இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
மேலும் போஸ்ட்பெயிட் பிராட்பேண்ட் திட்டங்களைப் பயன்படுத்துவோர் மாதம் முழுக்க 1000 இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். பிஎஸ்என்எல் ULD 1891, BBG ULD 2641, BBG காம்போ மற்றும் ULD 2799 போன்ற பிராட்பேண்ட் திட்டங்களின் வேகம் நொடிக்கு 4 முதல் 24 எம்பி வரை வழங்கப்படுகின்றது.
அந்த வகையில் டாப் 10 தலைசிறந்த அன்லிமிட்டெட் வேகம் கொண்ட பிஎஸ்என்எல் திட்டங்கள் சார்ந்த தகவல்களை இங்குப் பார்ப்போமா...
BBG Combo ULD 999
மாதம் ரூ.999 செலுத்தும் போது நொடிக்கு 4 எம்பி என்ற வேகம் பெற முடியும். இதில் அதிகபட்சம் 10 ஜிபி வரை பயன்படுத்த முடியும். 10 ஜிபி அளவைக் கடந்த பின் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 1 எம்பி எனக் குறையும். இத்துடன் 400 இலவச பிஎஸ்என்எல் அழைப்புகளையும் இரவு 9.00 மணி முதல் காலை 7.00 மணி வரை இலவச அழைப்புகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை அனைத்து நெட்வர்க் கால்களும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
BBG ULD 1275
இந்த பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டத்தில் நொடிக்கு 4 எம்பி என்ற வேகத்தில் சுமார் 30 ஜிபி இண்டர்நெட் பயன்படுத்த முடியும். 30 ஜிபி பயன்படுத்தியதும் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 1 எம்பி என்ற வேகத்திற்கு மாறி விடும். ரூ.1,275 மதிப்புள்ள இந்தத் திட்டத்தில் இரவு அழைப்புகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச அழைப்புகளும் வழங்கப்படுகின்றது. மற்ற அழைப்புகளுக்கு சாதாரண கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
BBG Combo ULD 1441
பிஎஸ்என்எல் BBG Combo ULD 1441 திட்டத்தில் நொடிக்கு 8 எம்பி என்ற வேகத்தினை பெற முடியும். இதில் மாதம் ஒன்றிற்கு 25 ஜிபி இண்டர்நெட் வழங்கப்படுகின்றது, இந்த வரம்பு நிறைவுற்றதும் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 1 எம்பியாக குறைந்து விடும். மேலும் அனைத்து பிஎஸ்என்எல் எண்களுக்கும் 500 நிமிடங்கள் இலவச அழைப்புகள் வழங்கப்படுகின்றது.
புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
BBG Super Speed Combo 1745 VDSL
மாதம் ரூ.1,745 கட்டணம் வசூலிக்கப்படும் இந்தத் திட்டத்தில் பயனர்கள் நொடிக்கு 8எம்பி என்ற வேகத்தில் சுமார் 40 ஜிபி இண்டர்நெட் பெற முடியும். இந்த வரம்பு நிறைவுற்றதும் இண்டர்நெட் வேகம் 1 எம்பியாக குறைந்து விடும். இந்த அன்லிமிட்டெட் திட்டத்தில் 1000 பிஎஸ்என்எல் அழைப்புகள், இரவு நேர அழைப்புகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச அழைப்புகள் வழங்கப்படுகின்றது.
BBG Speed Combo ULD 2295
இந்தத் திட்டத்தில் நொடிக்கு 8 எம்பி என்ற வேகத்தில் 80 ஜிபி இண்டர்நெட் வழங்கப்படுகின்றது. இதன் பின் வேகம் 1 எம்பியாகக் குறைக்கப்படும். ரூ.2,295 வசூலிக்கப்படும் இந்தத் திட்டத்தில் 1000 பிஎஸ்என்எல் அழைப்புகள், இரவு நேர அழைப்புகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச அழைப்புகள் கிடைக்கின்றது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
BBG ULD 2645
இந்தத் திட்டத்தில் அதிகபட்சம் 175 ஜிபி இண்டர்நெட் நொடிக்கு 8 எம்பி என்ற வேகத்தில் வழங்கப்படுகின்றது. பின் இண்டர்நெட் வேகம் நொடிகத்கு 1 எம்பியாக மாற்றப்படும். இந்தத் திட்டத்தில் எவ்வித அழைப்புச் சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.
BBG Combo ULD 2799
இந்தத் திட்டத்தில் நொடிக்கு 4 எம்பி என்ற வேகத்தில் இண்டர்நெட் சேவையினை 80 ஜிபி வரை வழங்கப்படுகின்றது. பின் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 2 எம்பியாக மாறிவிடும். இதில் 250 பிஎஸ்என்எல் அழைப்புகள் வழங்கப்படுகின்றது. இத்துடன் வாடிக்கைாயன இலவச அழைப்புகளும் பொருந்தும்.
BBG Speed Combo ULD 2841
ரூ.2,841 செலுத்தி இந்தத் திட்டத்தை ஆக்டிவேட் செய்யும் போது மாதம் ஒன்றிற்கு 175 ஜிபி இண்டர்நெட் நொடிக்கு 8எம்பி என்ற வேகத்தில் வழங்கப்படுகின்றது. அதன் பின் வேகம் 1 எம்பியாகக் குறைக்கப்படும். இத்துடன் 1000 பிஎஸ்என்எல் அழைப்புகள், இரவு நேர மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழுக்க அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றது.
புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
BBG Super Speed Combo 2845 VDSL
சூப்பர் பிராட்பேண்ட் திட்டத்தில் 80 ஜிபி இண்டர்நெட் நொடிக்கு 16 எம்பி என்ற வேகத்தில் பெற முடியும். பின் வேகம் நொடிக்கு 1 எம்பியாக மாறிவிடும். இத்துடன் 1000 பிஎஸ்என்எல் அழைப்புகள், இரவு நேர மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழுக்க அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றது.
BBG Super Speed Combo 3445 VDSL
இந்தத் திட்டத்தில் நொடிக்கு 24 எம்பி என்ற வேகத்தில் மாதம் முழுக்க சுமார் 80 ஜிபி இண்டர்நெட் வழங்கப்படுகின்றது. இதன் பின் வேகம் 1 எம்பியாக குறைந்து விடும். மேலும் 1000 பிஎஸ்என்எல் அழைப்புகள், இரவு நேர மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழுக்க அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470