100 மணிநேர பிளேபேக் டைம்.. ரூ.2000 விலை.. டாப் 5 பெஸ்ட் TWS கேமிங் இயர்பட்ஸ்.. எந்த மாடல்?
டாப் நாட்ச் அம்சத்துடன் வெறும் ரூ.2000 விலையில் பெஸ்ட் TWS கேமிங் இயர்பட்ஸ் (Best TWS Gaming Earbuds Under Rs 2000) வேண்டுமா? ட்ரெண்டான டிசைன் உடன் கேமர்களுக்கான இந்த 5 மாடல்களை உடனே சலுகை விலையுடன் யோசிக்காம தூக்கிடுங்க.
கேமர்கள் எப்போதும் புதிய தொழில்நுட்பங்களை ட்ரை செய்து பார்க்க ஆசைப்படுகிறார்கள். உயர் தெளிவுத்திறனுடன், ஹை-லேடன்சி கனெக்ஷனுடன் புதிய கேமிங் டிவைஸ் வாங்க விருப்பமுள்ளவர்களுக்கு பட்ஜெட்டும் ஒரு முக்கிய கருத்தாக இருக்கிறது. அதிக செலவின்றி சூப்பர் அம்சத்துடன் பேக் செய்யப்பட்ட கேமிங் இயர்பட்ஸை வாங்க இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

1. ட்ருக் பிடிஜி நியோ டூயல் பேரிங் இயர்பட்ஸ் (truke BTG Neo Dual Pairing Earbuds):
இந்த ட்ருக் பிடிஜி நியோ டூயல் பேரிங் இயர்பட்ஸ் ரூ.1,399 விலையில் வருகிறது. இந்த இயர்பட்ஸ் டூயல் சிங்க் அம்சம், 6 மைக் என்விரான்மெண்ட் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் டூயல் பவர் அம்சத்துடன் வருகின்றது. இது புளூடூத் 5.3 (Bluetooth 5.3), டச் கண்ட்ரோல் (touch control), அதிவேக கேமிங் கனெக்டிவிட்டி உடன் 80 மணிநேர பேக்கிரௌண்ட் பிளெயிங், பாஸ்ட் சார்ஜ்ஜிங் உடன் வருகிறது.
2. போல்ட் ஆடியோ இஜட்40 ப்ரோ (Boult Audio Z40 Pro):
போல்ட் ஆடியோ இஜட்40 ப்ரோ ஆனது Amazon வழியாக ரூ.1,599 என்ற விற்பனை விலையில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் அம்சம் 100 மணி நேர பிளே நேரத்துடன் வருகிறது. குவாட் மைக் ENC அம்சம், 45ms லோ-லேடன்சி (45ms low-latency) கேமிங் மோட், சக்திவாய்ந்த 10mm பாஸ் டிரைவர்ஸ் (10mm Bass drivers), பிரீமியம் ரப்பர் கிரிப் கேஸ், ஃபெதர்-டச் கன்ட்ரோல்ஸ் மற்றும் அல்ட்ரா-ஃபாஸ்ட் டைப்-சி சார்ஜிங் ஆகியவற்றை வழங்குகிறது.
3. போட் இம்மார்ட்டல் 121 (boAt Immortal 121):
போட் இம்மார்ட்டல் 121 கேமிங் இயர்பட்ஸ் ரூ.1699 விலையில் வருகிறது. இது 40 மணி நேர பிளே பேக் நேரத்தை வழங்குகிறது. இதில் 40ms லோ-லேடன்சி அம்சம், போட் சிக்னேச்சர் சவுண்ட் (boAt Signature Sound), குவாட் மைக் அம்சம் (quad mics for clear calls), ASAP சார்ஜிங் (ASAP Charge for quick top-ups), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), போன்ற அம்சங்களை இது ஆதரிக்கிறது.
4. மிவி கமாண்டோ கியூ9 கேமிங் TWS இயர்பட்ஸ் (Mivi Commando Q9 Gaming TWS):
மிவி கமாண்டோ கியூ9 கேமிங் TWS இயர்பட்ஸ் சாதனம் ரூ.1,999 விலையில் வருகிறது. இது கேமர்களுக்காவே உருவாக்கப்பட்ட ஹெக்ஸகோனல் டிசைன் ( hexagonal design) உடன் வருகிறது.குவாட் மைக் (Quad Mic ENC), பவர்புல் பாஸ் 13mm டிரைவர்ஸ் (powerful bass with 13mm drivers), 50 மணி நேர பிளேபேக் நேரம், 35ms லோ-லேடன்சி கேமிங் மோட் (gaming mode) உடன் RGB லைட்டிங் உடன் வருகிறது.
5. ஃபையர்-போல்ட் ஃபையர் பாட்ஸ் வேகா 811 (Fireboltt Fire Pods Vega 811):
நெத்தியடியாய் இந்த Fireboltt Fire Pods Vega 811 சாதனம் ரூ.2000 விலையில் வருகிறது. இது 10mm ஆடியோ டைனமிக் டிரைவர்ஸ் (dynamic audio drivers) உடன் ப்ளூடூத் 5.3 அம்சத்தை ஆதரிக்கிறது. இது 25dB ஏஎன்சி (ANC) அம்சம், ஃபையர் எக்ஸ் குவாட் மைக் (FireX Quad Mic ENC) அம்சம், 40ms கேமிங் மோட், டைப்-சி சார்ஜிங் உடன் 24 மணி நேர தடையில்லா பிளேபேக் நேரத்தை வழங்குகிறது.
இதில் உங்களுக்கு பிடித்த மாடல் எது என்பதை நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள். இந்த சலுகை விலை எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது பற்றிய விபரம் இல்லாததனால் உடனே ஆர்டர் செய்தால் இந்த விலையை உங்களால் லாக் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








