Vi, Airtel, Jio, BSNL: ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஒரு ரீசார்ஜ் திட்டம்.. 5 கனெக்ஷன் ஆனா பில் ஒன்று தான்..
நீங்கள் முழு குடும்பத்திற்கும் ஒரு பில் பேமெண்ட் செய்ய விரும்பினால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் வழங்கப்படும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் வெவ்வேறு விலை வரம்புகளில் வெவ்வேறு நன்மைகளை வழங்குகின்றன. அதிலும் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கு அதிக நன்மைகளை வழங்கி பயனளிக்கும் திட்டங்களையும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் கொண்டுள்ளன.

குடும்பத்தினருக்கு ஏற்றது போஸ்ட்பெய்ட் திட்டங்கள் தானா?
அதிக எண்ணிக்கையிலான இணைப்புகளிலிருந்து OTT இயங்குதளங்களை அணுகுவது வரை உயர்தர போஸ்ட்பெய்ட் பேக்குகள் உண்மையான ஒப்பந்தத்தை வழங்குகின்றன. போஸ்ட்பெய்ட் பேக் திட்டங்கள் ஏன் குடும்பத்தினருக்குச் சிறந்தவை? இதன் மீது ஏன் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். உண்மையைச் சொல்லப் போனால் குடும்பத்தினருக்கு ஏற்றது போஸ்ட்பெய்ட் திட்டங்கள் தான் என்கின்றனர் இதன் பயனர்கள். Vi, Airtel, Jio மற்றும் BSNL வழங்கும் டாப்-எண்ட் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்கள் பற்றி பார்க்கலாம்.

வோடபோன் ஐடியாவின் RedX திட்டம்
Vodafone Idea அல்லது Vi தனிப்பட்ட பயனர்கள் மற்றும் குடும்பங்களுக்கு தனித்தனியாக போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. குடும்பப் பயனர்களுக்கான Vi இன் மிக உயர்ந்த திட்டம் ரூ. 2,299 விலையில் வருகிறது. இது RedX திட்டமாகும். Vi இன் RedX திட்டங்கள் பல OTT சந்தாக்கள் மற்றும் பலவற்றுடன் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் 5 குடும்ப உறுப்பினர்களுக்கான இணைப்பை வழங்குகிறது. இந்த திட்டத்தின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைப்புகளுக்கு மாதத்திற்கு 3000 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் உண்மையிலேயே வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது என்பது சிறப்பு.

RedX திட்டத்தின் கூடுதல் நன்மைகள் என்னென்ன?
RedX திட்டப் பலன்களைக் கருத்தில் கொண்டால், பயனர்கள் டிவி மற்றும் மொபைலில் நெட்ஃபிளிக்ஸிற்கான ஒரு வருடச் சந்தாவைக் கூடுதல் கட்டணமின்றி பெறலாம். இந்தத் திட்டம், அமேசான் பிரைமின் ரூ.1,499 மதிப்புள்ள ஒரு வருடத்திற்கான சந்தாவையும், ரூ. 499 மதிப்புள்ள ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை நீங்கள் தனித்தனியாக வாங்க முயன்றால் ரூ. 2000 தீர்க்கும் அதிகமாகச் செலவாகிறது. இது தவிர, ரெட்எக்ஸ் திட்டங்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலைய ஓய்வறைகளுக்கான அணுகலையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல்லின் பிரீமியம் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம்
ஏர்டெல் இரண்டு குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. டெல்கோவின் மிக உயர்நிலைத் திட்டம் என்றால் அது ரூ. 1599 விலையில் கிடைக்கும் ஃபேமிலி இன்ஃபினிட்டி பிளான் திட்டமாகும். இது 500 ஜிபி மாதாந்திர டேட்டாவையும் 200 ஜிபி ரொலோவர் டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS உடன் வருகிறது. இந்தத் திட்டம் 200 ISD நிமிடங்களையும், IR பேக்குகளுக்கு 10% தள்ளுபடியையும் வழங்குகிறது. சந்தா செலுத்தும் போது பயனர்கள் 1 வழக்கமான சிம்முடன் குடும்ப உறுப்பினர்களுக்கு 1 இலவச ஆட்-ஆன் வழக்கமான குரல் இணைப்பைப் பெறுவார்கள்.

ஏர்டெல்லின் குடும்ப திட்டத்துடன் கிடைக்கும் கூடுதல் நன்மைகள்
மேலும், இந்த திட்டத்துடன் பயனர்களுக்கு ஏர்டெல் தேங்க்ஸ் பிளாட்டினம் ரிவார்டுகளுக்கான அணுகலைப் பெறுகிறார்கள். இதில் உங்களுக்கு 1 வருடத்திற்குச் செல்லுபடியாகும் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் கூடுதல் செலவில்லாமல் கிடைக்கிறது. இத்துடன் சேர்த்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி மெம்பர்ஷிப்பை 1 வருடத்திற்குக் கூடுதல் கட்டணமின்றி பெறலாம். மற்ற நன்மைகள் என்று பார்க்கையில், இந்த திட்டத்துடன் உங்களுக்கு Airtel X-stream App பிரீமியம், Wynk பிரீமியம் மற்றும் பல கூடுதல் நன்மைகள் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் உயர்நிலை குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம்
ஜியோ தனிநபர் மற்றும் குடும்ப பயனர்களுக்குப் பல போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மிகவும் விலையுயர்ந்த குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம் என்றால் அது ரூ.999 விலையில் வருகிறது. ஜியோ அதன் ரூ.999 திட்டத்துடன் மூன்று கூடுதல் சிம் கார்டுகளை வழங்குகிறது. இந்தத் திட்டம் மொத்தம் 200 ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் 500ஜிபி டேட்டாவை மாற்ற அனுமதிக்கிறது. வழங்கப்பட டேட்டா முடிந்த பின்னர் நீங்கள் பயன்படுத்தும் டேட்டாவிற்கு தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஜியோ குடும்ப திட்டத்துடன் கிடைக்கும் கூடுதல் நன்மைகள்
இந்த திட்டத்துடன் வழங்கப்பட 200ஜிபி டேட்டா முடிந்ததும், பயனர்களுக்கு ஒவ்வொரு 1ஜிபி டேட்டா பயன்பாட்டிற்கும் ரூ.10 என்ற விதத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. கூடுதலாக, ஜியோவின் ரூ. 999 திட்டம் நெட்ஃபிக்ஸ் சந்தா, ஒரு வருட அமேசான் பிரைம் வீடியோ சந்தா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல OTT தளங்களுக்கான அணுகலுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஜியோவின் குடும்ப திட்டம் விலை மலிவாக இருக்கிறது.

BSNL பிரீமியம் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம்
அரசுக்குச் சொந்தமான BSNL வழங்கும் டாப்-எண்ட் ஃபேமிலி போஸ்ட்பெய்ட் திட்டம், முதன்மையுடன் மூன்று குடும்ப இணைப்புகளையும் வழங்குகிறது. ரூ.999 விலையில், BSNL ஒரு போஸ்ட்பெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 100 SMS உடன் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. முதன்மை பயனர்கள் 75ஜிபி இலவச டேட்டாவைப் பெறுகிறார்கள், 225ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் அனுமதிக்கப்படுகிறது.

தனித்தனியாக ரீசார்ஜ் செய்ய விருப்பம் இல்லையா?
குறிப்பிட்டுள்ளபடி, இந்த திட்டம் 3 குடும்ப இணைப்புகளை வரம்பற்ற குரல் வசதி, 75 ஜிபி டேட்டா மற்றும் ஒவ்வொரு குடும்ப இணைப்புக்கும் தனித்தனியாக 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகியவற்றை வழங்குகிறது. மேலே உள்ள திட்டத்தைச் செயல்படுத்த, பயனர்கள் ஒரு முறை கட்டணம் 100 ரூபாய் செலுத்த வேண்டும் மற்றும் GST கட்டணங்கள் மேலே குறிப்பிடப்பட்ட விலையில் சேர்க்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒரு ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தனித்தனியாக ரீசார்ஜ் செய்ய விருப்பம் இல்லாத நபர்கள், இந்த குடும்ப திட்டங்களை ரீசார்ஜ் செய்து பயன்பெறலாம்.


Click it and Unblock the Notifications