iPhone SE 3 மீது மொத்தமாக ரூ.21,960 பிரைஸ் கட்.! கம்மி விலையில வாங்க என்ன செய்யணும்?
"அதிர்ஷ்டம் வந்தா, கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும்னு சொல்லுவாங்க.." அப்படி ஒரு லக்கி சான்ஸ் தான் இப்போது நமக்குக் கிடைத்துள்ளது. குறிப்பாக, ஒரு முறையாவது கம்மி விலையில் ஐபோன் டிவைஸை வாங்கி, ஐபோன் அனுபவம் எப்படி இருக்கிறது என்று ருசிக்க துடித்த ஆப்பிள் ரசிகர்களுக்குத் தான் இந்த பதிவு.

iPhone SE 3 வாங்க ரைட் டைம் இதானா?
நீண்ட நாளாக ஏதாவது ஒரு ஐபோன் டிவைஸை வாங்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்குள் புதைந்திருக்கிறதா? அப்போ, அந்த ஆசை நிறைவேற்ற வேண்டிய மிகச் சரியான நேரம் இது தான். அமேசான் நிறுவனத்தில் நடைபெறும் சமீபத்திய விற்பனையில், iPhone SE 3 சாதனம் மீது நம்ப முடியாத சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

iPhone SE 3 விலை அதிகரித்தது உண்மைதானா? அப்புறம் எப்படி பிரைஸ் கட்?
சில வாரங்களுக்கு முன்பு, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ 3 விலை உயர்வை அறிவித்தது என்பது கவனிக்கத்தக்கது. iPhone SE 3 இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் பட்ஜெட் ஐபோன் மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவும் இந்த சாதனம் 5G இணைப்புடன் ரூ. 43,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ரூ.6,000 விலை அதிகரிக்கப்பட்ட பிறகு நம்ப முடியாத சலுகை.!
ஆனால், சமீபத்திய விலை உயர்விற்குப் பின்னர் இதன் விலை ரூ.49,900 ஆக உயர்த்தப்பட்டது. ஆம், சமீபத்தில் தான் இந்த iPhone SE 3 டிவைஸ் மீது ரூ.6,000 விலை அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இப்போது இந்த iPhone SE 3 சாதனம் மீது பிரைஸ் கட் ஒன்றாகச் சேர்ந்து குவிந்துள்ளது.

iPhone SE 3 மீது ரூ. 21,960 வரை தள்ளுபடியா?
பல சலுகைகளை ஒன்றாக்கி இதன் விலையை இப்போது பாதிக்குப் பாதி குறைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நம்பினால், நம்புங்கள் iPhone SE 3 ஸ்மார்ட்போன் மீது ரூ. 21,960 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி வங்கி கார்டு சலுகை மற்றும் சுவாரஸ்யமான எக்ஸ்சேஞ் சலுகை ஒப்பந்தங்களுடன் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

எல்லாருக்கும் ரூ. 7,410 பிளாட் தள்ளுபடி.!
Amazon இல், iPhone SE 3 சாதனம் மீது பிளாட் சலுகையாக ரூ. 7,410 இப்போது பொதுவான பிரைஸ் கட் விலையாக அதன் அசல் விலையில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது. நீங்கள் பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டு வைத்திருந்தால், நீங்கள் கூடுதலாக EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1,250 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். பேங்க் ஆஃப் பரோடாவில் EMI அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது.

iPhone SE 3 எப்படி மிகவும் குறைவாக குறைப்பது?
இருப்பினும், எக்ஸ்சேஞ் சலுகை தான் இந்த iPhone SE 3 ஒப்பந்தத்தை உண்மையிலேயே சுவாரஸ்யமாக்கியுள்ளது! நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றி, iPhone SE 3 விலையை ரூ. 13,300 வரை குறைக்க முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஸ்மார்ட்போன்களுக்கு நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச மதிப்பாக இது இருக்கும் என்பதைக் கவனிக்க மறக்காதீர்கள்.

iPhone SE 3 வாங்க இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது?
உங்கள் பழைய ஸ்மார்ட்போனில் கிடைக்கும் தள்ளுபடியை நீங்கள் சரிபார்க்க வேண்டும் என்றால் அமேசான் பக்கத்தில் இருக்கும் எக்ஸ்சேஞ் விருப்பத்தை கிளிக் செய்து உங்கள் போனின் IMEI விபரங்களை உள்ளிட்டு செக் செய்யலாம். அனைத்து ஆஃபர்களும் சேர்ந்து உங்களுக்கு ரூ. 21,960 என்ற மிகப்பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் ஐபோன் SE 3 மாடலை நீங்கள் வெறும் ரூ. 27,940 என்ற விலைக்கு வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications