டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை: கவலை வேணாம்., அதுக்கு பதிலா இத்தனை இருக்கே- இது தெரியுமா?

|

டிக்டாக் செயலி உட்பட 59 சீன செயலிக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதையடுத்து அதற்கு மாற்றாக இந்திய செயலிகள் உட்பட 6 மாற்று செயலிகள் குறித்து பார்க்கலாம்.

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போர் விமானங்கள் குவிப்பு

போர் விமானங்கள் குவிப்பு

லடாக் எல்லையில் சீனா தனது போர் விமானங்களை குவித்து வருகிறது. அதிகமான சீன விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. சீனாவின் போர் விமானங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழையலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியாவும் தனது எல்லையில் போர் விமானங்களை குவித்து வருகிறது. இந்திய சீன எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

20 இந்திய வீரர்கள் வீரமரணம்

20 இந்திய வீரர்கள் வீரமரணம்

இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற குரல்கள் மேலோங்கி வருகின்றன.

டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர்

டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர்

இந்த நிலையில் டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் பிரதான பயன்பாடாக இருக்கும் பல்வேறு செயலிகளும் இடம்பெற்றுள்ளது.

டிக்டாக், யூசி பிரவுசர், ஹலோ உட்பட 59 செயலிகளுக்கு தடை: இந்திய அரசு அதிரடி அறிவிப்பு- பட்டியல் உள்ளேடிக்டாக், யூசி பிரவுசர், ஹலோ உட்பட 59 செயலிகளுக்கு தடை: இந்திய அரசு அதிரடி அறிவிப்பு- பட்டியல் உள்ளே

இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல்

இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல்

இதுதொடர்பாக இந்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தரவு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மற்றும் 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல் குறித்து கடுமையான கவலைகள் உள்ளன. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக்கில் நேரத்தை செலவிடும் பெரும்பாலானோர்

டிக்டாக்கில் நேரத்தை செலவிடும் பெரும்பாலானோர்

இந்தியாவில் பலரும் தங்களது பெரும்பாலான நேரத்தை டிக்டாக்கில் செலவிட்டு வருகின்றனர். டிக்டாக்கில் லைக் வரவில்லை என சிலர் விபரீத முடிவுகளை எடுத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது. அந்த அளவிற்கு டிக்டாக்கின் ரசிகர்களாக அதன் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். தற்போது டிக்டாக் செயலிக்கு தடை விதித்தையடுத்து அதற்கான மாற்று செயலிகள் குறித்து பார்க்கலாம்.

சிங்காரி செயலி(Chingari)

சிங்காரி செயலி(Chingari)

சீன செயலியான டிக்டாக்கிற்கு மாற்றாக சிங்காரி என்ற புதிய செயலி இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இந்த செயலியானது பெங்களூர் புரோகிராமர்ஸ் உருவாக்கியிருக்கின்றனர். இந்த தளமானது வீடியோ பகிர்வு, புதிய நண்பர்கள் உரையாடல், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் பகிர்வு, தங்களது படைபாற்றலை வெளிப்படுத்தும் செயலியாகும். இந்த செயலியானது ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி, கன்னடம், பஞ்சாபி, மலையாளம், பங்களா, குஜராத்தி, மராத்தி, மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கிறது.

ரோபோஸ் (Ropos)

ரோபோஸ் (Ropos)

ரோபோஸ் ஒரு இந்திய தயாரிப்பு டிக்டோக் மாற்று செயலியாகும். இது ஐந்து கோடிக்கு மேற்பட்ட பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த செயலியில் ஏராளமான உள்ளடக்கங்களும் உள்ளன. இந்த செயலி தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான உள்ளடக்கங்களை வழங்குகிறது. இது பயனர்களை நேரடியாக பயன்பாட்டில் வீடியோக்களைத் திருத்தவும் அவற்றை எளிதாக பதிவேற்றவும் அனுமதிக்கிறது.

யோபிளே (Yoplay)

யோபிளே (Yoplay)

யோக்ப்ளே டிக்டோக்கிற்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இதில் 15 விநாடிகள் கொண்ட வீடியோக்களை பதிவிட அனுமதிக்கிறது. இந்த செயலிக்கு 4.3 நட்சத்திர மதிப்பு உள்ளது, இதை சுமார் 83 எம்பி அளவில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.

விஸ்கிட் (Vskit)

விஸ்கிட் (Vskit)

விஸ்கிட் ஒரு குறுகிய வீடியோ பதிவிடும் பயன்பாடாகும். இந்த செயலிக்கு 4.3 ஸ்டார் மதிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களை கொண்டிருக்கிறது. இந்த செயலியும் டிக்டாக்கிற்கு ஒரு சிறந்த மாற்றாகும்.

ரிஸில்(Rizzle)

ரிஸில்(Rizzle)

ரிஸில் என்பது மற்றொரு டிக்டோக் மாற்று செயலியாகும். இது பயனர்களை புது நபர்களை சந்திக்கவும் அனுமதிக்கிறது. இந்த செயலியானது 4.8 ஸ்டார் மதிப்பீடை பெற்றிருக்கிறது. இந்த செயலியை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: 3ஜி திட்டங்களில் 4ஜி சேவை!BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: 3ஜி திட்டங்களில் 4ஜி சேவை!

பிரில்லா(Brilla)

பிரில்லா(Brilla)

பிரில்லா செயலியும் ஒரு குறுகிய வீடியோ பயன்பாட்டு செயலியாகும். இது பல்வேறு பிரிவுகளால் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் வீடியோ போன்ற அம்சங்களை வழங்குகிறது, மேலும் அந்த வீடியோக்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்களிலும் பகிர்ந்து கொள்ள இது அனுமதிக்கிறது.

pic courtesy: Socialmedia

Best Mobiles in India

English summary
Best Tiktok Alternative Apps in India for Short Videos!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X