Home
News

ரூ.300/-க்குள் அதிகமான டேட்டா தரும் டெலிகாம் நிறுவனம் எது? வாங்க பார்ப்போம்.!

வோடபோன் நிறுவனம் ரூ.199என்ற ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த திட்டத்தில் 1.4ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.

By Prakash S

தற்சமயம் இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் ஒரு பெரும் போட்டி நிலவுகிறது, குறிப்பாக ஜியோ நிறுவனம் தற்சமயம் பல்வேறு கட்டணத்
திட்டங்களை அறிவித்துள்ளது, இந்நிறுவனத்திற்கு போட்டியாக ஏர்டெல் மற்றும் பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய கட்டணத் திட்டத்தை அறிவித்துள்ளது.

ரூ.300/-க்குள் அதிகமான டேட்டா தரும் டெலிகாம் நிறுவனம் எது?

மலிவான கட்டணத் திட்டங்களுடன், ஜியோ நிறைய நன்மைகளையும் அறிவித்துள்ளது. அதன்பின்பு ஏர்டெல் நிறுவனம் இன்னும் இந்திய
தொலைதொடர்பு துறையில் சிறந்த ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் வோல்ட்இ சேவை அறிமுகப்படுத்தி சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் ரூ.300/-க்குள் சிறந்த டேட்டா திட்டத்தை அறிவித்துள்ளது, மேலும் இப்போது நடைபெறும் ஐபிஎல் 2018 போட்டிகளுக்கு ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் அதிரடி சலுகை மற்றும் சிறந்த கட்டணத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ பொறுத்தவரை ரூ.300/-க்குள் சிறந்த திட்டத்தை அறிவித்துள்ளது, அதன்படி ஐபிஎல் 2018 போட்டியயை முன்னிட்டு ரூ.251/-என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 51 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது.குறிப்பாக ரூ.251/-திட்டத்தில் இலவச கால் அழைப்புகள், 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஜியோ நிறுவனத்தின் ரூ.299/-திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்க பயன்படுத்த முடியும். மேலும் ரூ.199/- திட்டத்தில் 2ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல் ரூ.249/- ஆனது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. அடுத்து ரூ.199/- திட்டத்தில் பயனர்களுக்கு 1.4ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுகிறது
என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிஎஸ்என்எல்  :

பிஎஸ்என்எல் :

பிஎஸ்என்எல் ஐபிஎல் 2018 போட்டியை முன்னிட்டு சிறந்த திட்டத்தை அறிவித்துள்ளது, அதன்படி புதிதாய் அறிவிக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல்-ன் ரூ.248/- ஆனது மொத்தம் 153 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் 51 நாட்கள் ஆகும், அதாவது இந்த திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் என்று அர்த்தம். அதன்பின்பு ரூ.118 /-என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்நிறுவனம்,குறிப்பாக இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.

 வோடபோன்:

வோடபோன்:

வோடபோன் நிறுவனம் ரூ.199என்ற ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த திட்டத்தில் 1.4ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். அதன்பின்பு இலவச கால் அழைப்புகள்,100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
ஐடியா:

ஐடியா:

ஐடியா நிறுவனத்தின் ரூ.179-என்ற திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு பயன்படுத்த முடியும், அதன்பின்பு ஐடியா தற்சமயம் அறிவித்துள்ள புதிய ரூ.249/- ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும், மேலும் இந்த திட்டம் 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும், மொத்தமாக 56ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Best tariff plans under Rs. 300 compared; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X