சந்தையில் ரூ.200/-க்குள் கிடைக்கும் பெஸ்ட் ரீசார்ஜ் திட்டங்கள்.!

ரூ.200/-க்கு கீழான சிறந்த கட்டண திட்டங்களின் பட்டியலை நாங்கள் இங்கே தொகுத்துள்ளோம்.

|

ரிலையன்ஸ் ஜியோவின் துவக்கத்திலிருந்தே, அதன் போட்டியாளர்கள் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரவு மற்றும் அழைப்பு சலுகைகளை வழங்குவதை அனுதினமும் உறுதிப்படுத்திக்கொண்டே உள்ளன. இத்தகைய போட்டி சூழலில், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகமாகிறது என்பதே நிதர்சனம்.

சமீபத்தில் பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் இந்தியா சமீபத்தில் ஜியோவின் 149 ரீசார்ஜ் திட்டத்தை சமாளிக்கும் வண்ணம் முறையே அதன் ரூ.199 மற்றும் ரூ.199/- திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த ரீசார்ஜ் பொதிகளானது வரம்பற்ற குரல் அழைப்புகளிலிருந்து அதிவேக இணைய தரவு என அனைத்தையும் வழங்குகின்றன.

ரூ.200/-க்கு கீழான சிறந்த ரீசார்ஜ்கள்

ரூ.200/-க்கு கீழான சிறந்த ரீசார்ஜ்கள்

இத்தகைய சூழ்நிலையில், எந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்பதில் உங்களுக்கு குழப்பம் நீடித்தால் இந்த தொகுப்பு உங்களுக்கு நிச்சயம் உதவும். தற்போது சந்தையில் கிடைக்கும் ரூ.200/-க்கு கீழான சிறந்த கட்டண திட்டங்களின் பட்டியலை நாங்கள் இங்கே தொகுத்துள்ளோம்.

ஏர்டெல் ரூ149/- திட்டம்

ஏர்டெல் ரூ149/- திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் மலிவான தரவு மற்றும் அழைப்பு திட்டமான ரூ.149/-ன் நன்மைகளை பொறுத்தமட்டில், இந்த ரீசார்ஜ் பயனர்களுக்கு 300எம்பி அளவிலான தரவுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி ஏர்டெல் மொபைல் அழைப்புகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டம் 4ஜி கைபேசி மட்டுமே 300எம்பி டேட்டாவை வழங்கும் இதர பயனர்களுக்கு வெறும் 50எம்பி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்குமென்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ199/- திட்டம்

ஏர்டெல் ரூ199/- திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.199 திட்டமானது, 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான4ஜி / 3ஜி / 2ஜி டேட்டாவுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் நீங்கள் வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ் நன்மைகளையும் இந்த திட்டத்தின்கீழ் பெறலாம். இருப்பினும், பயணங்களின் போது வரம்பற்ற ரோமிங் உள்வரும் அழைப்பு கிடைக்கும் மறுகையில் வெளிச்செல்லும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

வோடபோன் ரூ.199/- திட்டம்

வோடபோன் ரூ.199/- திட்டம்

வோடபோனின் ரூ.199/- திட்டத்தின் கீழ், 1ஜிபி எ;அவிலான 3ஜி/4ஜி டேட்டாவுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளையும் அனுபவிக்கலாம். எனினும், இதன் இலவச அழைப்புகளுக்கு ஒரு எல்லை உள்ளது. ஒரு வாடிக்கையாளர் நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் இலவச அழைப்புகள் செய்யலாம் மற்றும் ஒரு வாரத்தில் மொத்தம் 1000 நிமிட அழைப்புகளை இலவசமாக நிகழ்த்தலாம். இந்த வரம்பிற்கு அப்பால் சென்றால் ஒரு நிமிடத்திற்கு 30 பைசா வசூலிக்கப்படும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.149/- திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.149/- திட்டம்

ஜியோவின் சிறந்த வரம்பற்ற அழைப்பு + டேட்டா திட்டமான ரூ.149/-ன் கீழ், 4.2ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை 0.15ஜிபி என்ற தினசரி வரபின் கீழ் மொத்தம் 28 நாட்களுக்கு பெறலாம். அன்றாட வரம்பை மீறிய பின்னர் இணையத்தின் வேகம் குறையும். உடன் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் (அனைத்தும் நெட்வொர்க்குகளுக்கும்) ஆகிய நன்மைகளையும் பெறலாம். கூடுதலாக, 300 உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் எஸ்எம்எஸ், ஜியோ பயன்பாட்டைப் பயன்படுத்தும் பயனர்களுக்கான ஜியோ சினிமா, ஜியோ ம்யூசிக், மைஜியோ ஆகியவற்றை இலவசமாக அணுகலாம்.

ஐடியா ரூ.197/- திட்டம்

ஐடியா ரூ.197/- திட்டம்

28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ், நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம். இருப்பினும், இந்த திட்டத்துடன் எந்த அழைப்பு நன்மைகளும் இணைக்கப்படவில்லை. ஒருவேளை குரல் அழைப்புகளுடனான டேட்டா நன்மையை எதிர்நோக்கும் ஐடியா பயனர்கள் நிறுவனத்தின் ரூ.198/- திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். வட்டத்திற்கு ஏற்றபடி விலை மாறுபடும் இந்த திட்டமானது 1ஜிபி அளவிலான 4ஜி/3ஜி/2ஜி டேட்டாவுடன் 28 நாட்களுக்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி குரல் அழைப்புகளை வழங்கும்.

பிஎஸ்என்எல் ரூ.186/- திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.186/- திட்டம்

இந்த புதிய திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் முதல் 28 நாட்களுக்கு 1 ஜிபி அளவிலான தினசரி தரவை வழங்கி வருகிறது. உடன் உள்ளூர் மற்றும் எல்டிடி ஆகிய இரண்டிலும் நெட் மற்றும் ஆஃப்-நெட் குரல் அழைப்புகளை வரம்பில்லாமல் இணைக்கலாம். இந்த திட்டத்தின் செல்லுபடிக்காலம் 180 நாட்கள் என்கிறபோதிலும், இதன் தரவு செல்லுபடியாகும் காலம் முதல் 28 நாட்கள் மட்டுமே. சமீபத்தில் இந்த திட்டத்தில் வரம்பற்ற வெளிச்செல்லும் ரோமிங் அழைப்பு நன்மை இணைக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Best Tariff Plans Under Rs 200 from Top Telecom Operators. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X