இந்த டிசம்பர் மாசத்துல.. ரூ.10,000 க்குள்ள வேற எந்த போனும் வாங்கிடாதீங்க.. இந்த 4 மாடல்ல 1 வாங்குங்க!
2023 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் வந்துவிட்டது. ஜனவரி மாதத்தில் ஆசைப்பட்டபடி இன்னமும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்கவில்லையே என்கிற ஏக்கம் உங்களிடம் இருந்தால்.. ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் 4 பெஸ்ட் போன்கள் மற்றும் ரூ.13,000 க்குள் கிடைக்கும் 2 பெஸ்ட் போன்களின் பட்டியல் இதோ:
01. ஐடெல் பி55 5ஜி (itel P55 5G): இந்த பட்டியலின் முதல் இடத்தில் இருப்பது ஐடெல் பி55 5ஜி மாடலாகும். இந்த பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் (6ஜிபி ரேம் + 6ஜிபி மெமரி பியூஷன் ரேம் என மொத்தம் 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ்) கீழ் ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் IPS LCD டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், 50எம்பி மெயின் கேமரா + AI லென்ஸ், 8எம்பி செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி, 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக் ஆதரவு போன்ற முக்கிய அம்சங்களையும் வழங்குகிறது.
02. ரியல்மி சி53 (Realme C53): இந்த பட்டியலில் இரண்டாவதாக உள்ள இந்த ரியல்மி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கும், மறுகையில் உள்ள 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் டிஸ்பிளே, ஆக்டா-கோர் சிப்செட், 108எம்பி அல்ட்ரா கிளியர் மெயின் கேமரா உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 8எம்பி ஏஐ செல்பீ கேமரா, 18வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.
03. ஒப்போ ஏ18 (Oppo A18): இந்த பட்டியலில் மூன்றாவதாக உள்ள இந்த ஒப்போ ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கும், மறுகையில் உள்ள 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,499 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஒப்போ ஏ18 ஸ்மார்ட்போன் ஆனது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.56-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட கலர் ஓஎஸ்13.1.1, 8எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 5எம்பி செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
04. மோட்டோ ஜி14 (Moto G14): இந்த பட்டியலில் நான்காவதாக உள்ள இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் சிங்கிள் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.8499 க்கு வாங்க கிடைக்கிறது. மேலே பார்த்த 3 மாடல்கள் மற்றும் கீழ் பார்க்கவுள்ள 2 மாடல்களை விடவும் இதுவே மிகவும் மலிவான ஸ்மார்ட்போனாகும்.
இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த மை யுஎக்ஸ் (My UX), 6.5-இன்ச் FHD+ LCD டிஸ்பிளே, ஆக்டா-கோர் யூனிசாக் டி616 சிப்செட், குவாட் பிக்சல் டெக்னாலஜி, ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் (PDAF) உடனான 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 20W டர்போபவர் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
05. ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G): இது ரூ.10,000 க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன் அல்ல. இது ரூ.11,999 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கிறது. கூடுதலாக ரூ.2000 செலவழிக்க விரும்புபவர்கள் இந்த ரெட்மி மாடலை கருத்தில் கொள்ளலாம். இது மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
06. லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி (Lava Blaze Pro 5G): இதுவும் ரூ.10,000 பட்ஜெட் ஸ்மார்ட்போன் அல்ல. இதன் விலை ரூ.12999 ஆகும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, கொஞ்சம் கூடுதலாக பணம் செலவழிக்க தயாராக உள்ள பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாம். மாறாக நீங்கள் ரூ.10கே பட்ஜெட் உடன் ஒட்டிக்கொள்ள விரும்பினால் முதலில் பார்த்த 4 மாடல்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும்.


Click it and Unblock the Notifications








