உயர் ரக ஸ்மார்ட்போன் வாங்க திட்டமா., காசு ரெடியா- அப்போ இந்த லிஸ்ட் உங்களுக்குதான்!

|

தொடர்ந்து வெவ்வேறு விலைப்பிரிவில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் குறித்து பார்த்து வருகிறோம். தற்போது சிறந்த வசதிகள் மற்றும் அதிக திறன்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியல் குறித்து பார்க்கலாம். ரூ.40,000-க்கு குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த போன்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் விலை குறித்து பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் உடன் ஒப்பிடும் போது ஒன்பிளஸ் 9ஆர் சிறிய வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்களை கொண்டிருக்கிறது. 9ஆர் ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது இது நல்ல தொகுப்பு நிலை சாதனமாகும். அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. விளையாட்டுக்கு உகந்த சாதனமாக இது இருக்கிறது. இந்த சாதனத்தின் பேட்டரி நாள் முழுவதும் நீடிக்கும். இந்த ஸ்மார்ட்போன் 65 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் 9ஆர் சாதனத்தின் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை சாதனம் விலை ரூ.36999 ஆக இருக்கிறது.தேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.40999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்சிஜன் ஓஎஸ் 11 ஸ்கின் ஆதரவோடு இருக்கும் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் பிரைமரி சென்சார், 16 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் கேமராவை கொண்டிருக்கிறது. செல்பி வசதிக்கென முன்புறத்தில் 16 மெகாபிக்சல் முன்புற கேமரா இருக்கிறது.

ஒப்போ ரெனால்ட் 6 ப்ரோ

ஒப்போ ரெனால்ட் 6 ப்ரோ

ஒப்போ ரெனால்ட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனானது மெல்லிய மற்றும் இலகுவான சாதனங்களில் ஒன்றாகும். ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் பேனலை கொண்டிருக்கிறது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், எச்டிஆர் 10+ பிளேபேக் சான்றதழ் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகித்ததுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சென் 1200 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் கேம் விளையாடுவதற்கு என பிரத்யேகமாக இருக்கிறது. ஸ்மார்ட்போன் கலர் ஓஎஸ் 11.3-ல் இயங்குகிறது. ஒப்போ ரெனால்ட் 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.39990 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனம் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 எம்பி கேமரா உடன் வருகிறது. முன்புறத்தில் செல்பி வசதிக்கென 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ

எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ

எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ சாதனமாது 6.67 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் பின்புறத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது. எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஆனது ஐஆர் மற்றும் டஸ்ட் வாட்டர் ரெசிஸ்டென்ட் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் வசதியோடு வருகிறது. ஸ்னாப்டிராகன் 888 செயலி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு எம்ஐயூஐ 12 ஸ்கின் வசதியை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4520 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கிறது. 108 - மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் - ஆங்கிள் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா உடன் வருகிறது. எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது இதன் விலை ரூ.36999 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.41999 ஆகவும் இருக்கிறது.

ஐக்யூ 7 லெஜண்ட்

ஐக்யூ 7 லெஜண்ட்

ஐக்யூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போனானது பிஎம்டபிள்யூ ரேஸ் கார்கள் வடிவமைப்புகளோடு இயக்கப்படுகின்றன. இது பளபளப்பான மெட்டல் பிரேம் மற்றும் மேட் கிளாஸ் ப்ரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் காட்சி அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் ஃபன்டச் ஓஎஸ் அனுபவத்தை வழங்குகிறது. இது 4000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. இதன் பேட்டரி ஆயுள் ஒரு நாளுக்கு மேல் நீடிக்காது. இதன் 66 வாட்ஸ் சார்ஜிங் அடாப்டர் மூலம் மொபைலை முழுமையாக 31 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதன் விலை ரூ.39,990 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.43990 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் டிஸ்ப்ளே வசதியோடு 48 எம்பி பிரதான கேமரா, இரட்டை 13 எம்பி என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா வசதியை கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best Smartphones Available at Under Rs.40,000: Here the Premium Smartphones List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X