Home
News

மிரளுது டிஸ்கவுண்ட்.. ரூ.10,000 விலையில் பெஸ்ட் போன்.. எந்த மாடல் உங்களுக்கு பெஸ்ட்..

குறைந்த விலையில் ஒரு பெஸ்டான ஸ்மார்ட்போன் (Best smartphone) சாதனத்தை வாங்க திட்டமிடுகிறீர்களா? அப்படியினால், இப்போது அமேசான் (Amazon) வழியாக வாங்க கிடைக்கும் ரூ. 10,000 பட்ஜெட்டிற்குள் வாங்க கிடைக்கும் சிறந்த போன்களின் பட்டியல் இதோ.

இந்த பட்டியலில் இப்போது அமேசான் தளம் வழியாக வாங்க கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட்போன்களின் தொகுப்பை வழங்கவிருக்கிறோம். இப்போது அமேசான் தளத்தில் சலுகையுடன் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் சாதனங்களை தான் இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம். இதில் தலை சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளான ரெட்மி (Redmi), சாம்சங் (Samsung) மற்றும் போகோ (POCO) போன்ற பிராண்டுகளின் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மிரளுது டிஸ்கவுண்ட்.. ரூ.10,000 விலையில் பெஸ்ட் போன்..

1. ரெட்மி A2 (Redmi A2): இந்த போனின் விலை ரூ.9,999 ஆனால் ரூ.5,499 என்ற சலுகை விலைக்கு வாங்குவதற்கு கிடைக்கிறது. இது கிளாசிக் பிளாக், சீ கிரீன் மற்றும் அக்வா ப்ளூ ஆகிய 3 வண்ண வகைகளில் கிடைக்கிறது. இது 400 nits பிரைட்னஸ் உடன் 6.5" இன்ச் கொண்ட HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இது MediaTek Helio G36 சிப்செட் உடன் வருகிறது. இதுவொரு அடிப்படை ஸ்மார்ட்போன் மாடலாக இருப்பதனால், இது 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வருகிறது. இந்த ரெட்மி A2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 8MP கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது 5,000mAh பேட்டரி உடன் வருகிறது.

2. சாம்சங் கேலக்ஸி M04 (Samsung Galaxy M04): இந்த போனின் விலை ரூ.11,999 ஆகும். ஆனால், இப்போது அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையுடன் இதன் விலை ரூ.7,999 ஆக குறைந்துள்ளது. இது ஷேடோ புளூ மற்றும் சீ கிரீன் ஆகிய 2 வண்ண வகைகளில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி M04 (Samsung Galaxy M04) ஸ்மார்ட்போன் சாதனம் 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.5" இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி M04 (Samsung Galaxy M04) ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13MP + 2MP டூயல் கேமரா அமைப்பை முன்புறத்தில் 5MP கேமராவும் உள்ளது.

3. ரெட்மி 13C (Redmi 13c): இந்த போனின் விலை ரூ.11,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது சலுகை விலையுடன் ரூ. 7,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் 6.74 இன்ச் HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் இயங்கும் டிஸ்ப்ளேவாகும். இது பின்புறத்தில் 50MP AI டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த போனில் 5,000mAh பேட்டரி உள்ளது.

4. போகோ C51 (Poco C51): இந்த போனின் விலை ரூ.10,999 ஆகும். ஆனால், இது இப்போது சலுகையுடன் ரூ.5,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இது ராயல் ப்ளூ மற்றும் பவர் பிளாக் வண்ண வகைகளில் வருகிறது. இதில் 6.52 இன்ச் HD+ டிஸ்ப்ளே உள்ளது. அதே நேரத்தில், பின்புறத்தில் 8MP இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இந்த போனில் 5,000mAh பேட்டரியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Best Smartphone Under Rs 10000 With Offer In Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X