ரூ.15000 போதும்- அட்டகாச ஸ்மார்ட் டிவிகள் இருக்கே., இதான் சரியான நேரம்!

|

ஸ்மார்ட் டிவி நிறுவனங்கள் உட்பட அனைத்து மின்னணு நிறுவனங்களும் சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் டிவிகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில் பெரும்பாலான ஸ்மார்ட்டிவிகள் பட்ஜெட் விலையிலேயே அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

பட்ஜெட் விலையிலான சிறந்த ஸ்மார்ட் டிவி

பட்ஜெட் விலையிலான சிறந்த ஸ்மார்ட் டிவி

ஸ்மார்ட் டிவி வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் சேவையால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். பட்ஜெட் விலையிலான சிறந்த ஸ்மார்ட் டிவிகள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

ரூ.15000-த்துக்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகள்

ரூ.15000-த்துக்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகள்

ஸ்மார்ட் டிவிகளில் பல்வேறு அளவுகளில் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ரூ.15000-த்துக்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகள் குறித்து பார்க்கலாம். இதில் சாம்சங், மோட்டோரோலா, வி.யூ, எல்ஜி, கோடக், மைக்ரோமேக்ஸ், பிபிஎல் உள்ளிட்ட பல முன்னணி பிராண்ட் டிவிகளும் உள்ளன.

1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே! அம்பானிக்கு தண்ணிகாட்டும் இளைஞர்களின் நிறுவனம்!

சாம்சங் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி

சாம்சங் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி

சாம்சங் 80 செ.மீ (32 இன்ச்) எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகளில் ரூ .15,000 க்கும் குறைவான விலையில் வாங்கும் சிறந்த தேர்வாகும். இந்த டிவியானது 40 வாட்ஸ் தேர்வோடு வெளியாகியுள்ளது. இதில், நான்கு சேனல் ஸ்பீக்கர்கள் மற்றும் அல்ட்ரா பிக்சல் வண்ண தொழில்நுட்ப அம்சம் உள்ளது.

மோட்டோரோலா எச்டி எல்இடி

மோட்டோரோலா எச்டி எல்இடி

மோட்டோரோலா 80.5 செ.மீ (32 இன்ச்) எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆகும். இது இந்திய சந்தையில் மற்றொரு பிரபலமான ஸ்மார்ட் டிவி ஆகும். 32 அங்குல எச்டி டிவி இரண்டு 20W ஸ்பீக்கர்களுடன் வருகிறது.

வியூ சினிமா எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி

வியூ சினிமா எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி

வியூ சினிமா 80 செ.மீ (32 இன்ச்) எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு அம்சங்களோடு விற்கப்படுகிறது. இந்த டிவியின் விலை ரூ.15,000 ஆகும். ஸ்மார்ட் டிவியில் பல்வேறு அம்சங்கள் உள்ளது. இது நெட்ஃபிக்ஸ், டிஸ்னி + மற்றும் யூடியூப் வசதியை ஆதரிக்கிறது.

ரியல்மி எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி

ரியல்மி எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி

ரியல்மி 80 செ.மீ (32 இன்ச்) எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு அம்சத்தோடு உள்ளது. இதன் விலை ரூ .15,000-க்கு கீழ் வாங்க சிறந்த தேர்வாகும்.

கோடக் 32HDXSMART எல்இடி ஸ்மார்ட் டிவி

கோடக் 32HDXSMART எல்இடி ஸ்மார்ட் டிவி

கோடக் ஸ்மார்ட் டிவி சந்தையில் நன்கு அறியப்பட்ட பிராண்ட் ஆகும். கோடக் 32 எச்டிஎக்ஸ் ஸ்மார்ட் டிவி 32 அங்குல எல்இடி எச்டி டிவியாகும். இது ரூ .15,000 க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. இந்த டிவியின் காட்சி 1366 x 768 பிக்சல்களுடன் வருகிறது.

மைக்ரோமேக்ஸ் 32 கேன்வாஸ் 3 எல்இடி ஸ்மார்ட் டிவி

மைக்ரோமேக்ஸ் 32 கேன்வாஸ் 3 எல்இடி ஸ்மார்ட் டிவி

மைக்ரோமேக்ஸ் 32 கேன்வாஸ் 3., 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவியானது ரூ .15,000 க்கும் குறைவான விலையில் வாங்குவதற்கு சிறந்த தேர்வாகும். ஸ்மார்ட் டிவி 1366 x 768 பிக்சல் தெளிவுத்திறன் கொண்ட ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

பிபிஎல் டி 32 எஸ்ஹெச் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி

பிபிஎல் டி 32 எஸ்ஹெச் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி

பிபிஎல் பல ஆண்டுகளாக டிவி நிறுவனங்களில் பிரபலமைடந்த ஒன்றாகும். இந்த ஸ்மார்ட் டிவியானது 32 இன்ச் வசதியோடு ரூ.15000 கீழ் கிடைக்கும் டிவியாகும்.

ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

சாம்சங் UA32T4340AK எல்இடி எச்டி ஸ்மார்ட் டிவி

சாம்சங் UA32T4340AK எல்இடி எச்டி ஸ்மார்ட் டிவி

சாம்சங் யுஏ 32 டி 4340 ஏகே 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவியாகும். ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலில் ரூ .15,000-க்கு கீழ் கிடைக்கிறது. இந்த ஆண்ட்ராய்டு வடிவமைப்போடு கிடைக்கிறது. ஸ்மார்ட் டிவியில் நெட்ஃபிக்ஸ் மற்றும் யூடியூப் போன்ற பயன்பாடு அம்சங்கள் உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best smart tvs can buy under rs.15000: here the list

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X