வெறும் ரூ.11,999-க்கு HD ஸ்மார்ட் TV-ஐ விற்கும் Flipkart! இந்த லிஸ்ட்ல 55-inch கூட இருக்கு!
நாங்கள் இந்தியாவில் வியாபாரம் செய்ய தொடங்கி ஒரு ஆண்டு ஆகிறது. அதை வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து கொண்டாடும் நோக்கத்தின் கீழ் எங்களின் 32-இன்ச் முதல் 65-இன்ச் வரை அளவிலான ஸ்மார்ட் டிவிகள் மீது பிரத்யேக சலுகைகளை வழங்குகிறோம் என்று ஜெர்மன் நாட்டு பிராண்ட் ஆன ப்ளாபங்க்ட் (Blaupunkt) அறிவித்துள்ளது.

என்னென்ன ஸ்மார்ட் டிவிகள் மீது என்னென்ன சலுகைகள்?
இந்த ஆபர் விற்பனை, எந்த இகாமர்ஸ் வலைத்தளம் வழியாக நடக்கிறது? இதன் கீழ் என்னென்ன ஸ்மார்ட் டிவிகள் என்னென்ன விலைகளின் கீழ் வாங்க கிடைக்கிறது?
இந்த சிறப்பு விற்பனை எப்போது தொடங்கி எப்போது முடிகிறது? பொதுவாகவே ஒரு புதிய ஸ்மார்ட் டிவியை வாங்கும் போது எதன் மீதெல்லாம் கவனம் செலுத்த வேண்டும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இந்த 'அனிவெர்சரி சேல்' ஆனது Flipkart வழியாக நடக்கிறது!
ப்ளாபங்க்ட் நிறுவனத்தின் இந்த "ஓராண்டு நிறைவு விழா விற்பனை" ஆனது பிரபல இகாமார்ஸ் தளமான Flipkart வழியாக நடக்கிறது.
மேலும் இந்த 'ஸ்பெஷல் சேல்' ஆனது ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 3 வரை மட்டுமே நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, 32-இன்ச் முதல் 65-இன்ச் வரையிலான ப்ளாபங்க்ட் ஸ்மார்ட் டிவிகள் மீது 40% வரையிலான ஆபர் (விலைக்குறைப்பு) அணுக கிடைக்கும்.

65-இன்ச் மாடலின் ஆபர் விலை?
நினைவூட்டும் வண்ணம், Blaupunkt நிறுவனம் இந்தியாவில் அதன் பயணத்தை, சைபர் சவுண்ட் (Cyber Sound) 32-இன்ச் டிவி உடன் தொடங்கியது. அந்த சீரீஸின் கீழ் அறிமுகமான 65-இன்ச் அல்ட்ரா-எச்டி மாடல் ஆனது முன்பு ரூ.56,999 க்கு வாங்க கிடைத்தது, ஆனால் இப்போது ரூ.54,999 க்கு கிடைக்கிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது. தவிர Dolby Atmos, 4 ஸ்பீக்கர்கள், டால்பி டிஜிட்டல் பிளஸ், டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் ஆல் சான்றளிக்கப்பட்ட ஆடியோ மற்றும் டால்பி எம்எஸ்12 சவுண்ட் உடனான 60W ஸ்பீக்கர் அவுட்புட் போன்றவைகளை வழங்குகிறது.

55-இன்ச் மாடலின் ஆபர் விலை?
ப்ளாபங்க்ட் நிறுவனத்தின் பெசல்-லெஸ் 55-இன்ச் அல்ட்ரா-எச்டி (3840x2160 பிக்சல்ஸ்) மாடல் ஆனது முன்பு ரூ.39,999 என்கிற விலையில் வாங்க கிடைத்தது. ஆனால் இப்போது ரூ.37,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது டால்பி டிஜிட்டல் பிளஸ், டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் ஆல் சான்றளிக்கப்பட்ட ஆடியோ, டால்பி MS12 டெக்னாலஜியுடன் 60W சவுண்ட் அவுட்புட் போன்றவைகளை கொண்டுள்ளது.
இதன் 60 ஹெர்ட்ஸ் க்விக் ரெஃப்ரெஷ் ரேட் ஆனது மென்மையான ஸ்ட்ரீமிங் அனுபவத்தை உறுதி செய்கிறது. கடைசியாக இது கூகுள் அசிஸ்டண்ட் கண்ட்ரோலையும் வழங்குகிறது.

50-இன்ச் மாடலின் ஆபர் விலை?
உங்களுக்கு 32-இன்ச் அல்லது 43-இன்ச் டிவி வேண்டாம்; கொஞ்சம் பெரிய டிஸ்பிளேவை கொண்ட ஸ்மார்ட் டிவி வேண்டும் என்றால், நீங்கள் இந்நிறுவனத்தின் 50-இன்ச் அல்ட்ரா-எச்டி (3840x2160 பிக்சல்ஸ்) மாடலை கருத்தில் கொள்ளலாம்.
முன்பு இது ரூ.33,999 க்கு வாங்க கிடைத்தது. இப்போது ரூ.31,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் கொண்டு இயக்கப்படுகிறது மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ், டிடிஎஸ் உடனான 60W ஸ்பீக்கர் அவுட்புட் உடன் வருகிறது.
மேலும் TruSurround ஆல் சான்றளிக்கப்பட்ட ஆடியோ, 4 ஸ்பீக்கர்ஸ் மற்றும் 2 ஜிபி ரேம் போன்றவைகளையும் பேக் செய்கிறது.

42-இன்ச் மற்றும் 43 -இன்ச் மாடல்களின் ஆபர் விலை?
இதே போல 42-இன்ச் ஃபுல்-எச்டி (1,920x1080 பிக்சல்ஸ்) மாடல் ஆனது ரூ.19,999 க்கு வாங்க கிடைத்தது. இப்போது வெறும் ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மேலும் ரூ.21,999 க்கு வாங்க கிடைத்த 43-இன்ச் அல்ட்ரா-எச்டி (3,840x2, 160 பிக்சல்ஸ்) ஆனது இப்போது ரூ.19,999 க்கு கிடைக்கிறது.

32-இன்ச் மற்றும் 40-இன்ச் மாடல்களின் ஆபர் விலை?
Blaupunkt சைபர் சவுண்ட் 32-இன்ச் டிவி மாடலின் அசல் விலை ரூ.13,499 ஆகும். அனால் இப்போது இது வெறும் ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது HD-ரெடி ஸ்கிரீன், 40W ஸ்பீக்கர் அவுட்புட்டை ஆதரிக்கும் 2 ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.
இதே டிவியின் 40 இன்ச் மாடல் ஆனது முன்பு ரூ.16,999 ஆக இருந்தது, ஆனால் இப்போது ரூ.15,999 என்கிற விலையில் வாங்க கிடைக்கிறது.

எந்த டிவி வாங்கினாலும் கவனிக்க வேண்டிய மேட்டர்கள்!
- பட்ஜெட் ஒத்துழைத்தால், 4K மாடலை வாங்கவும். குறைந்தபட்சம் Full HD மாடலை வாங்கவும்.
- பெரும்பாலும் 55-இன்ச் மற்றும் 65 -இன்ச் மாடல்களில் நல்ல ஸ்பீக்கர்கள் இருக்கும். எனவே எக்ஸ்ட்ரா பணம் செலுத்தி சவுண்ட் பார் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
- மிகவும் குறைவான விலையில் டிவி வாங்கினால் கண்டிப்பாக சவுண்ட் பாருக்கும் சேர்த்தே பணம் ஒதுக்கவும்.
- குறைந்த பட்சம் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவை கொண்ட மாடல்களை வாங்கவும்; முடிந்த வரை 120 ஹெர்ட்ஸ் உடன் செல்லவும். ஏனெனில் அதிக ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிவி ஆனது திரைப்படங்கள் முதல் டிவி நிகழ்ச்சிகள் வரை, லைவ் ஸ்போர்ட்ஸ் முதல் கேமிங் வரை அனைத்திற்கும் "மென்மையான இயக்கத்தை" வழங்கும்
- இங்கே HDR ஆதரவும் முக்கியம். இது மிகவும் யதார்த்தமான வண்ணங்களை உறுதி செய்யும். முடிந்த வரை HDR10+ அல்லது Dolby Vision போன்ற மேம்பட்ட ஃபார்மெட்களை ஆதரிக்கும் டிவியை வாங்குவது நல்லது.
- குறைந்தது நான்கு HDMI போர்ட்களை கொண்ட மாடலை வாங்கவும்.
Photo Courtesy: Flipkart, Blaupunkt


Click it and Unblock the Notifications