வந்தா மட்டும் போதும்.! ஸ்பீக்கர், மூட் லைட், அலெக்சா உடன் Smart Toilet அறிமுகம்.. விலை தெரியுமா?
கழிப்பறையில் விரும்பும் அனைத்து வசதிகளுடன் Kohler's Numi 2.0 என்ற புதிய Smart Toilet அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்பீக்கர்கள், அலெக்சா, ஹேண்ட்ஸ் ஃப்ரீ க்ளோஸ் மற்றும் KOHLER Konnect ஆப்ஸ் அணுகல் ஆதரவு இருக்கிறது. Kohler's Numi 2.0 என்பது கழிப்பறை கோப்பை ஆகும். கீழே குறிப்பிடப்படும் அனைத்து அம்சங்களும் இந்த கழிப்பறை கோப்பையை குறித்து தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
Kohler's Numi 2.0 ஸ்மார்ட் டாய்லெட்டில் நீங்கள் எதிர்பார்க்காத அனைத்து ஆதரவுகளையும் கொண்டிருக்கிறது. Kohler Numi 2.0 ஸ்மார்ட் டாய்லெட் விலை $11,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலான மக்கள் கழிப்பறைக்கு செல்லும் போது ஸ்மார்ட்போன்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கழிப்பறையில் எவ்வளவு நேரம் அமர்ந்திருக்கிறோம் என்றே தெரியாமல் சமூகவலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். இதை அறிந்த Kohler நிறுவனம் கழிப்பறையிலயே இதுபோன்ற அனைத்து அம்சங்களையும் வைத்து ஸ்மார்ட் டாய்லெட்டை அறிமுகம் செய்திருக்கிறது.
Kohler's Numi 2.0 ஸ்மார்ட் டாய்லெட் ஆனது நீங்கள் எதிர்பார்க்காத அனைத்தையும் கொண்டுள்ளது. இந்த கழிப்பறையில் ஸ்பீக்கர்கள், அலெக்சா, ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஓபன் மற்றும் க்ளோஸ் வசதியுடன் கூடிய சூடான இருக்கை இருக்கிறது. KOHLER Konnect ஆப்ஸ் இணைப்பு ஆதரவுடன் ரிமோட் மற்றும் டன் எல்இடி லைட்கள் இருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை ஸ்மார்ட் டாய்லெட்கள் என்பது அரிதான ஒன்று என்றாலும் மேற்கு நாடுகளில் இது மிகவும் பொதுவான ஒன்றாக இருக்கிறது. கோஹ்லர் நிறுவனம் முதன்முதலில் CES 2019 இல் Numi 2.0 ஸ்மார்ட் டாய்லெட்டை காட்சிப்படுத்தியது.
தற்போது இந்த ஸ்மார்ட் டாய்லெட் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை $11,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டாய்லெட் இந்திய மதிப்பு ரூ.9,25,000 ஆகும். Numi 2.0 ஸ்மார்ட் டாய்லெட்க்கு சலுகைகளும் வழங்கப்படுகிறது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டாய்லெட்டில் அமேசான் அலெக்சா இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது. LED விளக்குகளும் இந்த ஸ்மார்ட் டாய்லெட்டில் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் நீங்கள் கழிப்பறையை பயன்படுத்தினால் உங்களுக்கு கூடுதல் லைட் எதுவும் தேவைப்படாது. காரணம் இந்த கழிப்பறையில் உள்ள எல்இடி லைட்கள் உங்களை வழிநடத்தும். இந்த கழிப்பறையில் உள்ள எல்இடி லைட்கள் அந்த அளவிற்கு மிகவும் பிரகாசாமாக இருக்கும். உங்கள் மொபைலை கழிப்பறையுடன் இணைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் உடன் இணைக்கலாம்.
குளிரான வானிலையின் போது நீங்கள் எதிர்கொள்ளும் சில பொதுவான பிரச்சனைகளை கழிப்பறை நிவர்த்தி செய்கிறது. அதாவது இதில் சூடான இருக்கை இருக்கிறது. வானிலை மிகவும் குளிராக இருந்தால் இதன் இருக்கை சூடானதாக மாற்றப்படும்.
இதில் ஆட்டோ டியோடரைசிங் பயன்முறையும் இருக்கிறது. இதன்மூலம் நற்வாசனைகள் தொடர்ந்து பரப்பப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற டாய்லெட்டில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனை அதன் உயரம் ஆகும். அந்த சிக்கலும் இதில் இல்லை. நீங்கள் கோஹ்லர் நுமி 2.0 உயரத்தை சரி செய்து கொள்ளலாம். உடல்நல பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும். வயது முதியவர்கள் அமர்ந்து எழுவதில் உள்ள சிக்கலை இது எளிதாக்குகிறது.
இந்த ஸ்மார்ட் டாய்லெட்டில் ஆட்டோ ட்ரையர் ஆதரவு இருக்கிறது. ஸ்மார்ட் டாய்லெட்டை இயக்குவதற்கு என இதனுடன் கையடக்க ரிமோட்டும் வழங்கப்படுகிறது. இதில் உள்ள அனைத்து அம்சங்களையும் இந்த ரிமோட் மூலம் கட்டுப்படுத்தலாம். அனைத்து எல்இடி விளக்குகளையும் இந்த ரிமோட் மூலம் ஆன் ஆஃப் செய்யலாம்.
Kohler Numi 2.0 விலை $11,500 ஆகும். இந்த ஸ்மார்ட் டாய்லெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. கோஹ்லர் ஸ்மார்ட் டாய்லெட்டுகள் இன்னும் இந்தியாவில் அறிமுகப்படுத்தவில்லை. பிற நாடுகளில் இந்த ஸ்மார்ட் டாய்லெட் விற்பனை எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை. ஸ்மார்ட் டாய்லெட்கள் பல நாடுகளில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. இந்தியாவில் இது அரிதானதாக இருக்கிறது என்றாலும் விரைவில் பல இடங்களில் இது கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications