அட இதுக்குமா, இத ஏம்பா சொல்லல.??

By Meganathan
|

உலகில் தினமும் ஆயிரக்கணக்கான கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டு மெல்ல அவைகள் சந்தையிலும் விற்பனைக்கு வந்து கொண்டு தான் இருக்கின்றது. ஸ்மார்ட்போன் வந்ததும் அனைவரும் ஆப்ஸ் எனப்படும் செயலிகளை கொண்டே பல்வேறு பணிகளை செய்து முடிக்கின்றனர். ஆனால் செயலிகளை தாண்டி தினசரி பயன்பாடுகளை எளிமையாக செய்து முடிக்க உதவும் கருவிகள் பற்றி இங்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கின்றது.

சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கருவிகளில் உங்களது தினசரி வாழ்க்கையை எளிமையாக மாற்ற உதவும் சில பயனுள்ள கருவிகளை பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ள இருக்கின்றீர்கள்.

தெர்மோ

தெர்மோ

குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை கண்டறிய உதவும் கருவி தான் தெர்மோ. வை-பை மூலம் இணைக்கப்பட்ட இந்த கருவியை நெற்றி பகுதியில் வைத்தால் போதும், உடலின் வெப்ப நிலையை கணக்கிடும். இந்த கருவி பெரியவர்களுக்கும் பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாம்சங் குளிர்சாதன பெட்டி

சாம்சங் குளிர்சாதன பெட்டி

21.5 இன்ச் திரை மற்றும் கேமரா கொண்டிருக்கும் இந்த குளிர்சாதன பெட்டியில் அமேசான் அலெக்சா, டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டென்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மே மாதம் விற்பனைக்கு வரும் என கூறப்படும் இந்த கருவியின் விலை ரூ.3,33,825 வரை இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

கோடு எ பில்லர்

கோடு எ பில்லர்

குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் படி வடிவமைக்கப்பட்டிருக்கும் கருவி தான் இது. விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த கருவி அமெரிக்க டாலர்களில் சுமார் 49.99 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹைடிராவ் ஸ்மார்ட் ஷவர்

ஹைடிராவ் ஸ்மார்ட் ஷவர்

குளிக்கும் போது அதிகப்படியான நீர் வீணடிக்கப்படுவதை குறைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ப்ளூடூத் எல்ஈ கருவியானது ஐபோன் அல்லது ஐபேட் செயலியுடன் இணைந்து கொள்ளும். செயலியில் மூன்று இடைவெளிகளை செட் செய்து கொண்டால் அதற்கேற்ப எல்ஈடி விளக்குகளை கொண்டு எச்சரிக்கை செய்யும். இதனால் குளிக்கும் போது அதிகப்படியான நீர் வீணடிக்கப்பட மாட்டாது.

ஃபிட்பிட் பிளேஸ்

ஃபிட்பிட் பிளேஸ்

உடல் நலனில் அக்கறை கொண்ட இந்த ஸ்மார்ட் கருவி வண்ணமயமான தொடுதிரை கொண்டிருக்கின்றது. $199 விலையில் இந்த கருவியை மொபைல் போன் அழைப்புகளை ஏற்க முடியும், குறுந்தகவல்களை பார்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெமினி 2

ஜெமினி 2

ஆர்மர் ஜெமினி 2 ஷூ $180 விலையில் உங்களது கால்களுக்கு ஃபிட்னஸ் டிராக்கர் போன்று செயல்படுகின்றது. சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த ஷூ ஒரு நாளைக்கு எத்தனை தூரம் நடந்திருக்கின்றீர்கள், இதன் மூலம் உடலில் எத்தனை கலோரிகள் எரிக்கப்பட்டுள்ளன போன்றவைகளை டிராக் செய்து அவைகளை செயலியில் பதிவு செய்து விடும். இதனால் இந்த ஷூ ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

வித்திங்ஸ் கோ

வித்திங்ஸ் கோ

இந்தியாவில் ரூ.5000 பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த கருவியை கொண்டு வாடிக்கையாளர்கள் தினசரி நடவடிக்கைகளை டிராக் செய்யவும் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Check out the list of best smart gadgets that will make your daily activities simple in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X