Subscribe to Gizbot

இந்தியாவில் கிடைக்கும் மிகச்சிறந்த HD டிவிக்கள்.!

Written By:

இன்றைய நிலையில் டெக்னாலஜி நாளுக்கு நாள் முன்னேறி கொண்டே செல்லும் நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் தொலைக்காட்சியின் வடிவமும், அதிநவீன வசதியும் மேம்பட்டு கொண்டே இருக்கின்றது. குறிப்பாக தொலைக்காட்சியில் ஓஎஸ் நிறுவப்பட்டு யூடியூப், ஃபேஸ்புக் போன்ற செயலிகள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டவுடன் டிவிக்கள் வேற லெவலுக்கு சென்றுள்ளது.

இந்தியாவில் கிடைக்கும் மிகச்சிறந்த HD டிவிக்கள்.!

தற்போது தொலைக்காட்சிகள் இண்டர்நெட் மூலமும் செயல்படுவதால் இதுவொரு தியேட்டராக மட்டுமின்றி ஒரு கம்ப்யூட்டராகவும் உள்ளது. இன்று இந்தியாவில் கிடைக்க கூடிய 5HD ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் குறித்து பார்ப்போம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Vu 32D6475_H Full HD ஸ்மார்ட் டிவி:

Vu 32D6475_H Full HD ஸ்மார்ட் டிவி:

நாம் முதலில் விலை குறைந்த ஸ்மார்ட் டிவியில் இருந்து ஆரம்பிப்போம். கலிபோர்னியாவை சேர்ந்த Vu நிறுவனம் தயார் செய்யும் இந்த டிவி, வாடிக்கையாளர்களுக்கு சரியான விலையில் அதிநவீன வசதிகளை தருகிறது.

குறிப்பாக வைஃபை, மொபைல் HD மூலம் ஸ்டீரீம், யூடியூப், நெட்ஃபிளிக்ஸ், கிடோஸ், ஃபேஸ்புக் ஆகிய செயலிகலை பிரெளஸ் செய்து பார்க்கும் வசதி ஆகியவை இந்த டிவியில் உண்டு

60 Hz திறன் அமைந்துள்ள இந்த டிவியின் டிஸ்ப்ளே, பேக்லைட் கண்ட்ரோ, தகவமைப்பு பின்னொளி, டிஜிட்டல் இரைச்சல் குறைப்பு

போன்ற வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த டிவியில் 2 யூஎஸ்பி, 2 HDMI, ஒரு ஹெட்போன் ஜாக், RF கனெக்டிவிட்டிகள் ஆகிய கனெக்டிவிகள் உள்ளது.

LG 43LH576T Full HD ஸ்மார்ட் டிவி:

LG 43LH576T Full HD ஸ்மார்ட் டிவி:

ரூ.39,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த டிவ்யில் 43 இன்ச் ஃபுல் HD எல்.இ.டி ஸ்க்ரீன் உள்ளது. மேலும் இதில் வைஃபை, வைஃபை டைரக்ட், ஆப்ஸ்டோர், நெட்வொர்க் ஃபைல் பிரெளசர், நெட்பிளிக்ஸ், யூடியூப் உள்பட பல வசதிகள் அமைந்துள்ளது. மேலும் இந்த டிவி தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காலி உள்பட 18 மொழிகளுக்கு சப்போர்ட் செய்யும்.

இந்த டிவியில் எல்ஜியின் டிரிப்பிள் XD இஞ்சின் உள்ளதால் திரையில் படங்கள் மிகத்துல்லியமாக தெரியும். மேலும் இந்த டிவியில் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் உள்ள அமைப்புகள் இருப்பதால் குறைந்த அளவு மின்சாரமே செலவாகும்.

மேலும் இந்த டிவியில் ஒரு யூஎஸ்பி, 2 HDMI, ஒரு ஹெட்போன் ஜாக், RF கனெக்டிவிட்டி, ஒரு டிஜிட்டல் ஆடியோ அவுட்புட், ஒரு கம்போசிட் வீடியோ இன்புட் ஆகிய கனெக்டிவிட்டிகள் உள்ளது.

சோனி பிராவியா KDL-43W800D 43-inch 3D ஸ்மார்ட் டிவி:

சோனி பிராவியா KDL-43W800D 43-inch 3D ஸ்மார்ட் டிவி:

சோனி நிறுவனத்தின் டிவிக்களுக்கு அறிமுகமே தேவையில்லை. எப்போதுமே டிவிக்களின் ராஜாவாக செயல்படும் சோனி நிறுவனத்தின் இந்த மாடல் 43 இன்ச் முழு HD எல்.இ.டி டிஸ்ப்ளேவை கொண்டது.

மேலும் இந்த டிவியில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் வசதியும் உண்டு. மேலும் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் நமக்கு தேவையான யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகளை இதில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்

மேலும் இந்த டிவியில் X ரியாலிட்டி பிக்சர் இஞ்சின் 800 Hz திறனுடன் உள்ளதால் டிஸ்ப்ளேவில் மிக நுணுக்கமான அவுட்புட் கிடைக்கும். மேலும் இந்த டிவியில் டால்பி டிஜிட்டல் ஆடியோ டெக்னாலஜி வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி 42LA6910 டிவி:

எல்ஜி 42LA6910 டிவி:

எல்ஜி நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட் டிவிக்கள் போலவே இந்த மாடல் டிவ்யும் அருமையான டெக்னாலஜியுடன் மிகச்சிறந்த படங்கள் மற்றும் ஆடியோவை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த மாடல். இந்த எல்ஜி 42LA6910 மாடல் டிவி முழு HD ரெசலூசன் வசதியுடன் 3D டெக்னாலஜியில் இயங்கும் ஒரு டிவி ஆகும்

இந்த டிவியிலும் எல்ஜியின் டிரிப்பிள் XD இஞ்சின் உள்ளதால் திரையில் படங்கள் மிகத்துல்லியமாக தெரிவதோடு சின்ன சின்ன ஆடியோவும் தெளிவாக கேட்கும். மேலும் கலர்களை மிகத்துல்லியமாக பிரித்து கண்களுக்கு விருந்தாக்கும் மாடல்களில் ஒன்று.மேலும் இந்த மாடலில் மோஷன் எக்கோ சென்சார், டைம் மிஷின், டிவி ஷோக்களை ஹார்ட் டிஸ்க்கில் பதிவு செய்யும் வசதி ஆகியவையும் உண்டு

சாம்சங் 40F6400 டிவி:

சாம்சங் 40F6400 டிவி:

சாம்சங் நிறுவனத்தின் அற்புதமான மாடலான இந்த சாம்சங் 40F6400 டிவியின் டிஸ்ப்ளேவில் 200Hz கிளியர் மோஷன் ரேட் மற்றும் பரந்து விரிந்த கலர் என்ஹேசர் பிளஸ் ஆகிய சிறப்பு அம்சங்கள் இருப்பதால் திரையில் படங்கள் அச்சடித்தது போல் தெரியும். மேலும் இந்த டிவியில் நாம் ஏற்கனவே பார்த்த ஷோக்கள் மற்றும் திரைப்படங்களின் ஹிஸ்ட்ரியை தெரிந்து கொள்ளும் வசதி உண்டு.

400Hz கிளியர் மோஷன் வசதி கொண்ட இந்த டிவியில் மோஷன் கண்ட்ரோல், ஸ்மார்ட் ஹப், PIP,ஆடியோ அவுட்புட்ஸ், 4 HDMI, ஒரு டிஜிட்டல் ஆடியோ அவுட்புட், 3 யூஎஸ்பி போர்ட், ஒரு எதெர்நெட், ஆன்/ஆப் டைமர், 3D ஹப்பர் ரியல் எஞ்சின், மைக்ரோ டிம்மிங், 3D சவுண்ட், டால்பி டிஜிட்டல் பிளஸ், வெப் பிரெளசர், 3D கன்வர்ட்டர், வைபை, கேம் மோட், ஸ்போர்ட்ஸ் மோட், டூயல் கோர், ஆகிய பல வசதிகள் இதில் உண்டு.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
With technology advancement, the way we watch Television has been changed in the past few years.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot