Home
News

OTT நன்மைகள் வேண்டுமா? அப்போ Jio-வின் இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் தான் பெஸ்ட்.!

ஜியோ நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் அருமையான சலுகைகளை வழங்கிவருகிறது. அதேபோல் இந்நிறுவனம் அடுத்த மாதம் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்ய உள்ளது.

5ஜி சேவை

5ஜி சேவை

குறிப்பாக இந்தியாவில் ஜியோவின் 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆனாலும் இந்நிறுவனத்தின் 5ஜி சேவை முதலில்சில நகரங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஓடிடி நன்மைகள்

ஓடிடி நன்மைகள்

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ழுவுவு நன்மைகளுடன் அட்டகாசமான திட்டங்களை வைத்துள்ளது. கண்டிப்பாக இந்த ஓடிடி நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் தனித்துவமான சலுகைகளை வழங்குகிறது என்றே கூறலாம். இப்போது அந்த திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.419 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.419 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.419 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 84ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் Disney+ Hotstarமொபைலின் 3 மாத இலவச சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது.

இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப் பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ரிலையன்ஸ் ஜியோ ரூ.419 ப்ரீபெய்ட் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் பயனர்கள் இந்த திட்டத்தில் 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவைப் பெறமுடியும்.

மேலும் ஜியோ ரூ.601 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதலாக 6ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,199 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,199 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மொத்தமாக இந்த திட்டத்தில் 252ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அதேபோல் 3மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜியோ ரூ.1,199 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.4,199 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.4,199 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.4,199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மொத்தமாக இந்த திட்டத்தில் 1095ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அதேபோல் இந்த திட்டத்தில் ரூ.1499 மதிப்புள்ள 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜியோ ரூ.4,199 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் ஜியோ ஆப் பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.583 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.583 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனம் ரூ.583 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் சூப்பரான நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக ஜியோவின் ரூ.583 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

ஜியோ ரூ.583 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 84ஜிபி டேட்டா நன்மையை பெறமுடியும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

90 நாட்களுக்கு ரூ.149 மதிப்புள்ள Disney+ Hotstar மொபைல் சந்தா, ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி,ஜியோ கிளவுட் போன்ற பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Best Reliance Jio Prepaid Plans with OTT Benefits: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X