ரிலையன்ஸ் ஜியோவின் பட்ஜெட் விலை தரமான டாப் 5 ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட சிறந்த சலுகைகள் மற்றும் சிறப்பான திட்டங்களை வழங்கி வருகிறது,குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால் கடந்த சில மாதங்களில் அதிகளவு வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது ஜியோ நிறுவனம். அதேசமயமம் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அதிகளவு வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

ஜியோ நிறுவனம் சிறந்த சேவையை வழங்க டேட்டாவை தவிர்தது கூடுதலாக சில அட்டகாச நன்மைகளையும் வழங்க தொடங்கியது, படிப்படியாக பல வியாபார தந்திரங்களை பின்பற்றி அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரையிலாக டெலிகாம் துரையின் முதல் இடத்தில் இருக்கிறது. மேலும் இப்போது ஜியோ நிறுவனம் வழங்கும் தரமான டாப் 5 ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ஜியோ ரூ.98-ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.98-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் முழு மாதத்திற்கும் 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். மேலும் வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ அழைப்புகளையும் பெறுவீர்கள், மற்ற நெட்வொர்க்குகளை அழைக்கும் போது, நிமிடத்திற்கு 6 பைசா என்கிற கட்டணம் வசூலிக்கப்படும். குறிப்பாக இந்த திட்டத்தில் 300எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா போன்ற அனைத்து ஆப்களுகளுக்கு இலவச சந்தாவை பெறமுடியும்.

ஜியோ ரூ.129-ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ வழங்கும் ரூ.129-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் மாதத்திற்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மேலம் ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், பிற நெட்வொர்க்குகளுக்கு அழைப்பதற்கு 1000 நிமிடங்கள் அணுக கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் 300இலவச எஸ்எம்எஸ்களும்,அனைத்து ஜியோ ஆப்களுக்குமான இலவச சந்தாவும் ஒரு பாராட்டு சந்தாவும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஜியோ ரூ.149-ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.149-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24நாட்கள் ஆகும். மேலும் இது வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ அழைப்புகளை உள்ளடக்கியது மற்றும் பிற நெட்வொர்க்குகளுக்கு அழைக்க 300 நிமிடங்கள் உங்களுக்கு வழங்கப்படுகின்றன. பின்பு இந்த திட்டத்தில் 300எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களுக்கும் இலவச சந்தாவும்
வழங்கப்படுகின்றன.

ஜியோ ரூ.199-ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.199-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ அழைப்புகள் மற்றும் ஜியோ-டு-அல்லாத ஜியோ அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள், மற்றும் அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தா போன்ற நன்மைகளும் உள்ளன.

ஜியோ ரூ.249-ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.249-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. மேலும் ஜியோ-டு-ஜியோ அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது. ஜியோ அல்லாத நெட்வொர்க்குகளுக்கான அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள் வழங்கப்படுகின்றன. பின்பு தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களுக்கான இலவச சந்தா உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications