Home
News

எதுக்கு வீண் அடிக்கனும்: அளவான டேட்டா மலிவான விலை- ஏர்டெல், விஐ பயனர்களே இதோ பெஸ்ட் பிளான்!

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல வரம்பற்ற டேட்டா திட்டங்களை வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கு வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்தியாவில் ஜியோ அறிமுகம் செய்து குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும் அதிகரிக்கும் நோக்கத்திலும் பல திட்டங்களை அதிகரித்து வருகிறது.

தினசரி அளவிலான டேட்டா திட்டங்கள்

தினசரி அளவிலான டேட்டா திட்டங்கள்

பெரும்பாலான பயனர்கள் விலை உயர்ந்த திட்டங்களில் தங்களின் கவனத்தை செலுத்துவதில்லை என்பதே உண்மை. தினசரி அளவிலான டேட்டா பயன்படுத்தி அன்லிமிடெட் அழைப்பு மேற்கொள்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர். பெரும்பாலான பயனர்கள் அதிகளவிலான மொபைல் டேட்டாவை பயன்படுத்தமாட்டார்கள் வாட்ஸ்அப் மெசேஜ் செக் செய்வது போன்ற குறிப்பிட்ட தேவைக்கு மட்டுமே இணைய சேவை பயன்படுத்துவார்கள், அதுபோன்ற பயனர்களுக்கான திட்டங்களை பார்க்கலாம். தினசரி அதிகப்படியான டேட்டா திட்டம் போல் இல்லாமல், வரம்பற்ற குரல் அழைப்பு, குறைந்தபட்ச டேட்டா பலன்களுடன் வரும் ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். ஏர்டெல், வோடபோன் ஐடியா (விஐ) நிறுவனங்களின் குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

குறைந்த டேட்டா பயனர்களுக்கான ஏர்டெல் திட்டங்கள்

குறைந்த டேட்டா பயனர்களுக்கான ஏர்டெல் திட்டங்கள்

குறைந்த அளவிலான டேட்டா பயன்படுத்தும் ஏர்டெல் பயனர்களுக்கான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். ஏர்டெல் தங்களுக்கு குறைந்தபட்ச டேட்டா நன்மைகளை வழங்கும் பல திட்டங்களை தொகுத்து வழங்குகிறது. நிறுவனம் ரூ.219 என்ற விலையில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதோடு வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் இலவச ஹலோட்யூன்ஸ், 30 நாட்களுக்கான பிரைம் வீடியோ ட்ரையல் மற்றும் விங்க் மியூசிக் சந்தா போன்ற பல நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

தினசரி 1 ஜிபி அளவிலான டேட்டா

தினசரி 1 ஜிபி அளவிலான டேட்டா

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தங்களுக்கு குறைந்தபட்ச டேட்டா பலன்களை வழங்கும் பல திட்டங்களை வழங்குகிறது. அதில் ஒன்றுதான் ரூ.219 ரீசார்ச் திட்டமாகும். இது தினசரி 1 ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற குரல்ழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் இலவச ஹலோட்யூன்கள், பிரைம் வீடியோ உள்ளிட்ட பல அணுகலையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் காலம் 28 நாட்கள் ஆகும்.

2 ஜிபி டேட்டா சலுகைகள்

2 ஜிபி டேட்டா சலுகைகள்

ஏர்டெல் வழங்கும் ரூ.149 திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள், 2 ஜிபி டேட்டா சலுகைகளை வழங்குகிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். பிற நன்மைகள் குறித்து பார்க்கையில் இது மேலே குறிப்பிட்ட பல திட்டத்தை வழங்குகிறது. ஏர்டெல் ரூ.379 ப்ரீமெய்ட் திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும், இது செல்லுபடியாகும் காலம் முழுவதும் 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஷா அகாடமி, ஃபாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் உள்ளிட்ட பல திட்டங்களை வழங்குகிறது. கடைசியாக ரூ.1498 திட்டமானது 365 நாட்கள் செல்லுபடியாகும், இது செல்லுபடியாகும் காலம் முழுவதும் 24 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

குறைந்த டேட்டா பயனர்களுக்கான விஐ திட்டங்கள்

குறைந்த டேட்டா பயனர்களுக்கான விஐ திட்டங்கள்

விஐ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் பிற அம்சங்கள் 300 எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் விஐ மூவிஸ் மற்றும் டிவி அணுகலோடு வருகிறது. ரூ.397 ப்ரீபெய்ட் திட்டத்தில் 6ஜிபி டேட்டா மற்றும் 64 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. விஐ மூவிஸ் மற்றும் டிவி அணுகலோடு வருகிறது. ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தை பொறுத்தவரை இந்த திட்டத்தில் விஐ வரம்பற்ற குரல் அழைப்புகள், 24 ஜிபி டேட்டா மற்றும் 365 நாட்கள் நன்மைகளை வழங்குகிறது. கூடுதலாக பல்வேறு அணுகலையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Best recharge plans Offered by Airtel, VI For Less Data Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X