அடிச்சு தூக்கும் Jio, Airtel, Vi: 84 நாள் வேலிடிட்டி.. மக்களுக்கான மிகவும் லாபகரமான திட்டங்கள்.. விலை என்ன?
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது, இவற்றை ரீசார்ஜ் செய்து பயன்பாட்டில் வைப்பதே ஒரு பெரிய டாஸ்க்காகவுள்ளது. பட்ஜெட் பார்த்து செலவு செய்யும் பழக்கம் இங்கு நம்மில் பலருக்கு அதிகமாகவுள்ளது. அத்தகைய பட்ஜெட் பிரியர்களுக்கான பெஸ்ட் ப்ரீபெய்ட் பிளான்கள் (Best prepaid plans) இதோ.
இந்தியாவை பொருத்த வரை மூன்று டெலிகாம் ஆபரேட்டர்கள் (Telecom Operators) தான் ஸ்மார்ட்போன் சேவைகளை ஆட்சி செய்து வருகிறது. அவை, ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பாரதி ஏர்டெல் (Bharati Airtel) மற்றும் வோடோஃபோன் (Vodafone Idea or Vi). பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனாளர்கள் இந்த மூன்றில் ஒரு சேவையை தான் பயன்படுத்துகிறார்கள். வாடிக்கையாளர்களை கவர்ந்து தக்கவைத்துக்கொள்ள பல உபயகரமான ப்ளான்களை இந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

ஒரு சேவையை தேர்வு செய்ய கருத்தில் கொள்ளும் முக்கிய காரணங்களில் ஒன்று அதன் பிளான்கள். பட்ஜெட் பிளான்களை (budget prepaid plans) வழங்கும் சேவையை தான் மக்கள் அதிகம் பயன்படுத்த விரும்புகின்றனர். இதனை உணர்ந்த நிறுவனங்கள் குறைந்த விலையில் சேவைகள் வழங்குவதில் சமீபகாலமாக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
டேட்டாவுடன் (data) சேர்த்து ஓடிடி (OTT) மற்றும் இதர சேவைகளையும் சேர்த்து வழங்கும் போது, மக்கள் மேலும் அந்த நிறுவனம் பக்கம் இழுக்கப்படுகின்றனர். மேலும், இன்றைய சூழ்நிலையில் அடிக்கடி ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் (online recharge) செய்வதை மக்கள் விரும்புவதில்லை என்று கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன் (smartphone) ரீசார்ஜ் என்பது அத்தியாவசியமான ஒன்றாக ஆகிவிட்டது. இதற்கென்று தனியாக செலவு செய்வதற்கு மக்கள் இப்போது பழகிவிட்டனர்.
அதிக நாட்களுக்கு செல்லுபடியாகும் பிளானை தேர்வு செய்வது அவர்களுக்கு லாபகரமாக உணர்ந்த மக்கள் இப்போது 28 நாட்கள் பிளானை (28 days validity plan) பெரும்பாலும் விரும்புவது இல்லை. மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிளானாக 84 நாட்களுக்கான ரீசார்ஜ் பிளான் (84 days validity plan) தான் தனித்து நிற்கின்றன. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் இருக்கும் பிளான்கள் ஒரு நாளுக்கு 1 ஜிபி மட்டுமே வழங்கின்றன.
இன்று டேட்டாவின் பயன்பாடு அதிகரித்துவிட்டதால், 1 ஜிபி டேட்டா (1GB data plans) அரை நாள் கூட தாண்டாது. எனவே நாள் ஒன்று சராசரியாக குறைந்த பட்சம் 2 ஜிபி டேட்டா (2GB data plans) ஒருவருக்கு தேவைப்படுகிறது. டேட்டா மட்டுமின்றி, அன்லிமிட்டட் கால் (unlimited voice calls), தினசரி 100 மெசேஜ்கள் (SMS), ஓடிடி தளங்களுக்கான சந்தா, போன்றவற்றை ஒரே ரீசார்ஜில் அனுபவிக்க மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அப்படி அதிகம் பயன்படுத்தப்படும் 84 நாட்கள் பிளானில் முன்னணி நிறுவனங்கள் என்ன என்ன சேவைகள் வழங்கின்றனர் என்று விரிவாக பார்க்கலாம்.
1. ஜியோ (Jio):
2 ஜிபி டேட்டாவுடன் 84 நாட்கள் வரும் பிளான்கள் ஜியோவிடம் 9 உள்ளன. அவற்றில் 5ஜி டேட்டா சேவையுடன் ஜியோ கிளவுட், ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி சேவைகள் அன்லிமிட்டட் கால், தினசரி 100 எஸ்எம்எஸ், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ. 719 பிளான் மிகவும் லாபகரமான திட்டமாக பார்க்கப்படுகிறது.
2. ஏர்டெல் (Airtel):
ஜியோவைப் போலவே அன்லிமிட்டட் கால், தினசரி 100 எஸ்எம்எஸ், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி 5ஜி டேட்டா வழங்கும் திட்டம் என மொத்தம் 2 ஏர்டெல் திட்டங்கள் அதன் பட்டியலில் உள்ளது. அவற்றில் விங்க் ம்யூசிக், இலவச ஹலோ ட்யூன்கள், எக்ஸ்ட்ரீம் ப்ளே மற்றும் ரிவார்ட்ஸ் மினி சந்தாவுடன் வரும் ஏர்டெலின் ரூ. 839 பிளான் லாபகராக கருதப்படுகிறது.
3. வேடோஃபோன் ஐடியா (Vi):
அதேபோல, தினசரி 100 எஸ்எம்எஸ், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் கால் ஆகியவற்றுடன் சேர்த்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா (Disney+ Hotstar), பின்ஞ் ஆல் நைட் (Binge All Night), வீக் என்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) ஆகிய சேவைகளுடன் சேர்த்து ரூ. 839 ப்ளான் வாடிக்கையாளர்களுக்கு லாபகரமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








