Home
News

Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. இனி ரூ.500-க்குள் சிறந்த திட்டங்கள் இதுதான்.. முழு விவரம்..

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் நேற்று ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. அதுவும் ஜியோ முக்கியமான ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியதால் பலர் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வரும். இந்த விலை உயர்வுக்குப் பின்பு ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரூ.500 க்குள் வைத்திருக்கும் சிறந்த திட்டங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 349 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. சிறந்த திட்டங்கள் இதுதான்..

அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 399 plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 70ஜிபி டேட்டா வழங்கப்படும். அதேபோல் அதாவது அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. சிறந்த திட்டங்கள் இதுதான்..

ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 449 plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

அதன்படி வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும் என்பதை நினைவில் கொள்க.

ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 379 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், இலவச ஹெலோட்யூன்கள், விங்க் மியூசிக், அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. சிறந்த திட்டங்கள் இதுதான்..

ஏர்டெல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 429 plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 449 plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 மாதம் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best prepaid plans under Rs 500 after Jio and Airtel plans price hike:check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X